எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 7 நவம்பர், 2010

சுய உதவிக் குழுக்கள் ( மகளிர்) எதிர் கொள்ளும் சமூகப் பிரச்சனைகள்...











தீஞ்சுவைப் பாலெடுத்து நறுஞ்சுவைத் தேன் கலந்து பழச்சாறும் ஊற்றிக் கொடுத்தாலும் புளிக்குதென்பேன்.. தமிழ்த்தாயிடம் மதலை நான் தாய்ப்பால் குடித்து வளர்ந்த காரணத்தால்.. அன்னையவள் பரிவு கொண்டு என்னை வளர்த்த காரணத்தால்.. தமிழ் அன்னைக்குக் குழந்தையின் வணக்கங்கள்..

நாத விந்துவால் உருவாகி நிற்கும் இந்த உலகு ஜீவனுள்ள கீதங்களால் நிரம்பி இருப்பதால்.. அந்த ஜீவனை .. சக்தியை தன்னகத்தே கொண்ட சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவனுக்கு வணக்கங்கள்.. அன்றாடம் பத்ரிக்கைகளிலும்., கூகுளிலும் இவரின் பணிகளை., அங்கன்வாழி ஊழியருக்கு சலுகை., ரேஷன் கடை ஊழியருக்கு ஓய்வூதியம்., சத்துணவு ஊழியருக்கு மருத்துவ வசதி., ஆதரவற்ற.. ஏழை., அனாதை பெண்களுக்கும்., விதவைகளுக்கும் அரசாங்கத்தின் உதவி கிடைக்கச் செய்தல்., என பரந்துபட்ட பணிக்குச் சொந்தக்காரரான அமைச்சரின் பணிகள் அறிகிறேன்..

அவற்றில் ஒன்று சுய உதவிக் குழுப் பெண்களுக்கும் உரிய சலுகைகள் கிடைக்கச் செய்வது.. அனைத்திற்கும் பாராட்டுக்கள்..


ஒரு கல்லைச் செதுக்கி சிற்பம் செய்வது போல் என்னைச் செதுக்கி நான் இங்கே நிற்கக் காரணமாய் இருக்கும் கிரிஜாம்மாவுக்கு வணக்கங்கள். எக்ஸ்னோரா தலைவர் சுலோசனா ராமசேஷனுக்கும்., ராஜத்துக்கும் அவையோருக்கும் என் வணக்கங்கள்..


பொதுவாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என மூன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்...


முதலில் தன்னைக் கடந்து வெளிவருதல்..


இரண்டாவது சுற்றி இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என நினைத்து தன் திறமைகளை முடக்கி இருத்தல்..


மூன்றாவது தொழிற்சார்ந்த பிரச்சனைகள்..


தனிமனிதரும் சமூகம் சார்ந்தவர்தானே..தான் ஒரு தொழிலைச் செய்ய வேண்டும் என தன் முனைப்போடு இருத்தல்.. சிறப்பாக செய்ய இயலும் என எண்ணுதல்., தன் குடும்பத்தினரின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி அடைய வேண்டி தொழில் செய்ய செல்லும் போது., அவர்களுக்கு அதை சரியான முறையில் தெளிவு படுத்துதல்., எல்லாம் முக்கியம்.


குழந்தைகள் படிப்பு செலவு வேண்டியோ., அன்றாடம் கணவன் வருமானம் போதாமல் குடும்பம் நடத்த வேண்டியோ., செயல்படும் போது., குழந்தைகளைத் தானே பராமரிக்கப் பழக்குதல்., குடும்பத்திற்காக தான் உழைப்பதை குழந்தைகள் உணரும்படிச் செய்தல்., வியாபாரநிமித்தம் சிலகாலம் ( 10., 15 நாட்கள்) குடும்பத்தை விட்டு செல்ல வேண்டிய சூழ்நிலையை எதிர்கொள்ளுதல்., உடல் உபாதைகளோடு புதிய சூழலில் இருத்தல்., என குடும்பத்திற்காக ஏற்கும் சிரமம் நிறைய..


தன்னிடம் நம்பிக்கை வைத்து தன் குடும்பத்திற்கு புரியச் செய்து வெளிவருதல் அவசியம்...


இரண்டாவதாக அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஏதும் சொல்வார்களோ .. நேரம் கெட்ட நேரத்தில் செல்ல வேண்டி இருந்தால் என தயங்குதல் ஒரு பின்னடைவை ஏற்படுத்தும்.. நாம் சரியானவற்றை சரியான முறையில் செய்யும் போது அடுத்தவரின் விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுக்க வேண்டியதில்லை.. நாமும் ., நம்மைப் போன்றோரும் கலந்ததுதானே சமூகமும்.. நாம் சரியானவற்றைச் செய்யும்போது அங்கே அவதூறுகளுக்கு இடம் இல்லாமல் போகிறது..


மூன்றாவதுதான் முக்கியம்.. இதில் தொழில் தொடங்க கடனுதவி கேட்டு வங்கிகளை அணுக வேண்டி வரும்.. அதற்கு சிலரிடம் அனுமதிக் கையெழுத்து வாங்க வேண்டியதிருக்கும்.. மேலும் தொழில் தொடர்பாக பலரிடம் பழக வேண்டியிருக்கும்... இந்தச் சூழலில் அனைவரும் நல்லவரென்று கருத இயலாது.. அந்தச் சமயங்களில் இவர்கள் தெளிவாக இருந்தால்., அதாவது லஞ்சம் கொடுக்காமலும்., பாலியல் தொந்தரவுக்கு சம்மதிக்காமலும்., நேர்மையான வழியிலேயே எல்லாவற்றையும் பெறுவது என உறுதியாக இருந்தால் ஜெயிக்கலாம்..


வியாபாரம் செய்யப் போகும் இடத்திகும் வீடு வீடாக சென்று கான்வாஸ் செய்யும் இடங்களில் கூட எரிச்சலான பதில்களும்., சரியில்லாத மனிதர்களையும் சந்திக்க நேரும்.. எல்லாவற்றிலும் சகிப்புத்தன்மையும் ., பத்திரமாக மீண்டு வரும் தன்மையும் வேண்டும்..


வருமானம் இல்லாத காலகட்டங்களில் கந்து வட்டிக்கு கடன் வாங்காமல்., கடனுக்குள் வீழ்ந்து விடாமல்., சமாளிக்கத் தெரிய வேண்டும்..


கணவன் குடிகாரனாயிராத பட்சத்தில் இது நிகழாது,..மேலும் ஒரு சுய உதவிக் குழுத் தலைவியிடம் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார்.. நாம் இடம் கொடுத்தால்தான் நம்மை ஆண்கள் எதற்கும் அணுகுவார்கள் என்று.. நாம் சரியாக இருந்தால் நம் நிலையிலேயே நமக்கான இடத்திலேயே நீடித்து இருக்கலாம் என்று..


உண்மைதான் .. சமூகம் என்பது நாம் அடங்கிய குழுதானே.. எனவே நாம் எந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கிறோமோ அந்த இடம் கிடைக்கும்..


டிஸ்கி : - இந்தக் கட்டுரை நவம்பர் ., 1., 2010 திண்ணையில் வெளிவந்துள்ளது,,

11 கருத்துகள்:

  1. சிறப்பான கட்டுரை தேனம்மை.

    //பொதுவாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என மூன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்...
    முதலில் தன்னைக் கடந்து வெளிவருதல்..
    இரண்டாவது சுற்றி இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என நினைத்து தன் திறமைகளை முடக்கி இருத்தல்..
    மூன்றாவது தொழிற்சார்ந்த பிரச்சனைகள்..//

    அழகாக விளக்கியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. //சமூகம் என்பது நாம் அடங்கிய குழுதானே.. எனவே நாம் எந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கிறோமோ அந்த இடம் கிடைக்கும்..//

    உண்மைதான்

    பதிலளிநீக்கு
  3. திண்ணையில் வெளியான கட்டுரைக்கும்... அருமையான படங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  4. ஹலோ தேனம்மை கீதா ஜீவன் அவர்களிடம் இருந்து பரிசு பெறுவதற்கு வாழ்த்துக்கள். விவரங்களை நாளை நேரில் கேட்டுக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. காரைக்குடிக்கு ஓர் அற்புதமான சட்ட மன்ற உறுப்பினரும்; தமிழகத்துக்கு ஓர் அரிய பொக்கிஷமான அமைச்சரும் கிடைக்கும், திருமதி தேனம்மை அரசியலுக்கு வந்தால்

    பதிலளிநீக்கு
  6. அக்காவுக்கு பாராட்டு!!! பிடிங்க ஒரு பூங்கொத்து!
    வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் அக்கா.........

    சுய உதவிக்குழு என்றவுடன் எங்க அம்மா சுந்தராம்பாள் மோகன்தாஸ் தான் என் நினைவுக்கு வருகிறார்கள் இன்றும் ஓயாத அம்மாவின் பாதை.......
    ஏன்மா உடம்ப பாத்துக்குமா சும்மா பொது பணினு சுத்தாதம்மானு சொன்னாலும் அம்மா சொல்லுவாங்க எனக்கு ஒரு சந்தோஷம் மனநிம்மதி டானு சொல்லுவாங்க ஆனா நான் லீவ்ல போனாலும் அம்மாவை அவ்வளவு சுலபமா வீட்ல பாக்க முடியாது சுய உதவிகுழுக்களுடனே அம்மாவை பார்க்க சில சமையம் எங்கெங்கோ அலைந்திருக்கிறேன்........

    கண்டிப்பா என்னுடைய அடுத்த பதிவு அவர்களை பற்றியதாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  8. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா :)
    கட்டுரையில் கவிதைப் பதங்கள்....
    வாழ்க்கையிலும் கவிதைப் பக்கங்கள்....
    அருமையான நிகழ்ச்சிகளில் மையப் பங்கு கொள்ளும் உங்களுக்கு ஒரு பொக்கே :)
    வெரி வெரி நைஸ் அக்கா...

    பதிலளிநீக்கு
  9. தேனம்மைக்கு வாழ்த்துக்களுடன் பெரிய பூங்கொத்து.நவம்பர் லேடீஸ் ஸ்பெஷலில் படித்து பரவசப்பட்டேன் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  10. நன்றி ரமேஷ்., ராமலெக்ஷ்மி., கார்த்திக்., குமார்., ரூஃபினா., கலாம்., சித்து., தினேஷ்குமார்., பிரபு., ஸாதிகா.,

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...