எனது பதிமூன்று நூல்கள்

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

பச்சை வண்ண புடவைக்காரி

பழைய பேருந்துகள்
சுற்றிச் செல்லும்
தடம் அற்ற சாலையில்....
வாதுமை மரத்தின் கொட்டைகள்
அங்கங்கே சிதறிக் கிடக்க....
ஒரு பச்சை வண்ணப் புடவையில்
அவள் வந்தாள்...
அழகென்று சொல்ல முடியாது..
பெயரும்., விழியும்.,
சிரிப்பும் பழகுவதும் அழகு..

அறிந்திருந்தேன் அவளை முன்பே.,
உருவம் அறியாமல் உருவாய்...
என் மனச் சித்திரம் போல்
இருந்தாள் பிசகாமல்., எளிமையாய்..
குழப்பமில்லாமல் ., சிக்கலில்லாமல்.,..
எப்போதும் அறிந்தவர் போல்
பேசிக் கொண்டிருந்தோம்...
அவள் விழிகளில் இருந்தும் .,
புன்னகையில் இருந்தும்
என்மேல் மழைத்துளி
சிதறிக்கொண்டே இருந்தது..
வெப்பமும் புழுக்கமும்
புழுதியும் விடைபெற
எப்போது குளிர்ந்தேன் என்பது
தெரியாமல் குளிர்ந்து கிடந்தேன்...
சாலையோரக் கல் போல்..
விடை பெற்றுச் செல்லும் போது
பட்டும் படாமல் கை பற்றி
அழுத்திச் சென்றாள்...
கைகளில் ஈரமாய் ஒட்டிக் கொண்டே
கிடந்தது அவள் அன்பு ...

51 கருத்துகள் :

பனித்துளி சங்கர் சொன்னது…

அய்யா நான்தான் பர்ஸ்ட் !

பனித்துளி சங்கர் சொன்னது…

மிகவும் மென்மையான சிந்தனை . அருமை !
பகிர்வுக்கு நன்றி !

ஈரோடு கதிர் சொன்னது…

//அவள் விழிகளில் இருந்தும் .,
புன்னகையில் இருந்தும்
என்மேல் மழைத்துளி
சிதறிக்கொண்டே இருந்தது..//

அடடா....
அருமையான வரி

கவிதை அழகா இருக்கு

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி பனித்துளி சங்கர் உங்க கமெண்ட்டுக்கு

SUFFIX சொன்னது…

வர்ணனை அருமை!!

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

//கைகளில் ஈரமாய் ஒட்டிக் கொண்டே
கிடந்தது அவள் அன்பு ...//

சுகமாய் இருக்கு படிக்கும்பொழுது!!

Chitra சொன்னது…

விடை பெற்றுச் செல்லும் போது
பட்டும் படாமல் கை பற்றி
அழுத்திச் சென்றாள்...
கைகளில் ஈரமாய் ஒட்டிக் கொண்டே
கிடந்தது அவள் அன்பு ...


......ஒரு தோழமை சந்திப்பையும், அன்பின் தாக்கத்தையும் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

வர்ணனை மிக அருமை.

பத்மா சொன்னது…

சந்திப்புக்கு ஒரு கவிதையா? அழகு அழகு

Dr.Rudhran சொன்னது…

விடை பெற்றுச் செல்லும் போது
பட்டும் படாமல் கை பற்றி
அழுத்திச் சென்றாள்...
கைகளில் ஈரமாய் ஒட்டிக் கொண்டே
கிடந்தது அவள் அன்பு ...
good

அகல்விளக்கு சொன்னது…

//அவள் விழிகளில் இருந்தும் .,
புன்னகையில் இருந்தும்
என்மேல் மழைத்துளி
சிதறிக்கொண்டே இருந்தது.//

அழகான வரிகள்...

நேசமித்ரன் சொன்னது…

யாரை சந்தித்தீர்கள்?

கவிதை அருமை

நேசமித்ரன் சொன்னது…

யாரை சந்தித்தீர்கள்?

கவிதை அருமை

'பரிவை' சே.குமார் சொன்னது…

//வெப்பமும் புழுக்கமும்
புழுதியும் விடைபெற
எப்போது குளிர்ந்தேன் என்பது
தெரியாமல் குளிர்ந்து கிடந்தேன்...
சாலையோரக் கல் போல்..
//

அழகான வரிகள்..!

அருமையான கவிதை..!!

Sai Ram சொன்னது…

பழைய பேருந்துகள் சுற்றி செல்லும் அந்த ஆளில்லா தடமற்ற சாலைக்கு போய் வந்தது போல ஓர் உணர்வு. நல்ல கவிதை. நன்றி.

ராமலக்ஷ்மி சொன்னது…

மிக அருமை தேனம்மை.

க.பாலாசி சொன்னது…

கவிதையை நன்றாக வடித்திருக்கிறீர்கள்....

ரிஷபன் சொன்னது…

அழகாய் மனசைத் தொட்டு நிற்கிறது..

செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…

அவள் விழிகளில் இருந்தும் .,
புன்னகையில் இருந்தும்
என்மேல் மழைத்துளி
சிதறிக்கொண்டே இருந்தது..//
கவிதை உங்களுக்கு கை வந்த கலையாய் இருக்கிறது.

ஸ்ரீராம். சொன்னது…

மனதின் நெகிழ்வு வழக்கம் போல் கடைசி வரிகளில்...

அம்பிகா சொன்னது…

\\விடை பெற்றுச் செல்லும் போது
பட்டும் படாமல் கை பற்றி
அழுத்திச் சென்றாள்...
கைகளில் ஈரமாய் ஒட்டிக் கொண்டே
கிடந்தது அவள் அன்பு ...\\
அருமை:-))

Menaga Sathia சொன்னது…

அழகான கவிதை அக்கா!!

Unknown சொன்னது…

:)

சீமான்கனி சொன்னது…

//விடை பெற்றுச் செல்லும் போது
பட்டும் படாமல் கை பற்றி
அழுத்திச் சென்றாள்...
கைகளில் ஈரமாய் ஒட்டிக் கொண்டே
கிடந்தது அவள் அன்பு ...//

அடிபோலி வரிகள் அழகு...அழகு தேனக்கா..

பா.ராஜாராம் சொன்னது…

அவர்களையும் கேட்டுப் பாருங்கள்.

அதே அன்பு அதே ஈரத்துடன் ஒட்டிக் கிடக்க போகிறது. :-)

நலமா மக்கா?

மரா சொன்னது…

கவிதை நன்று.விருதுக்கு வாழ்த்துக்கள்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

//என் மனச் சித்திரம் போல்
இருந்தாள் பிசகாமல்., எளிமையாய்..
குழப்பமில்லாமல் ., சிக்கலில்லாமல்.,..
எப்போதும் அறிந்தவர் போல்
பேசிக் கொண்டிருந்தோம்...//

Romba arumaiyana varigal akka.. nalla irukku.. vazhthukkal.. :)

Unknown சொன்னது…

கைகளில் ஈரமாய் ஒட்டிக் கொண்டே
கிடந்தது அவள் அன்பு ...

மிகவும் உன்னத வரிகள்.

Ahamed irshad சொன்னது…

வார்த்தைகள் கோர்ப்பு அருமை.....

mani சொன்னது…

"அழகென்று சொல்ல முடியாது..
பெயரும்., விழியும்.,
சிரிப்பும் பழகுவதும் அழகு.."

-உண்மை. உண்மை. உண்மை.

சிறிய மழை சாரலின் குளுமையை போன்று உள்ளது அந்த கடைசி 5 வரிகள்.

Vediyappan M சொன்னது…

அற்புதமான வரிகள். காட்சிகள் கண்முன்னே விரிகிறது. உங்கள் கை அழுத்தி விடைபெற்றுச் சென்றவளை ரகசியமாக தேடவிளைகிறது மனம்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

விருது பெற தங்களை அன்புடன் அழைக்கிறேன்

http://sinekithan.blogspot.com/2010/04/blog-post_07.html

Mythili (மைதிலி ) சொன்னது…

இப்படி உங்களை திக்குமுக்காடச்செய்தவள் யார் அக்கா ??

Unknown சொன்னது…

பட்டும் படாமல் கை பற்றி
அழுத்திச் சென்றாள்...
கைகளில் ஈரமாய் ஒட்டிக் கொண்டே
கிடந்தது அவள் அன்பு ]]

அற்புதம் ...

ரோகிணிசிவா சொன்னது…

சூப்பர் மேம் !!!

cheena (சீனா) சொன்னது…

அன்பின் தேனு

அருமை அருமை - கவிதை அருமை
தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்கள் - இயல்பான சொற்கள் - எளிமையான சொற்கள் -

பெயரும்., விழியும்.,
சிரிப்பும் பழகுவதும் அழகு.. - இந்நடையே அழகு !

என் மனச் சித்திரம் போல்
இருந்தாள் பிசகாமல்., எளிமையாய்..
குழப்பமில்லாமல் ., சிக்கலில்லாமல்.,..
எப்போதும் அறிந்தவர் போல்
பேசிக் கொண்டிருந்தோம்...

அடடா அட்டா என்ன கற்பனை வளம் ! சிறப்பான அறிமுகம்

கவிதை முழுவதும் மனதை ஆக்கிரமித்துக் கொண்டது - மிக மிக ரசித்தேன்

நல்வாழ்த்துகள் தேனு
நட்புடன் சீனா

கவிதன் சொன்னது…

ஒரு குழந்தையின் மென்மையான ஸ்பரிசத்தை உணர்த்துகிறது கவிதை!!! மிக அருமை!!!

அண்ணாமலை..!! சொன்னது…

ரசனையான கவிதை! அருமை!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமை

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றீ கதிர்., ஷஃபி ., சை கொ ப.,
சித்ரா., அக்பர்., பத்மா

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ருத்ரன் ., அகல் விளக்கு ., நேசன் ., குமார்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சாய்ராம்., ராமலெக்ஷ்மி .,பாலாசி ., ரிஷபன்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ராஜ்., அம்பி்கா.,ராம்., மேனகா

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி அஷோக் .,சீமான்கனி., பாரா., மயில் ராவணன்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஆனந்தி ., டெஸ்ட்.,
அஹமது.,மணி

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வேடியப்பன்., அக்பர்., மைதிலி., ஜமால்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ரோஹிணி ., சீனா சார். , கவிதன்., அண்ணாமலை

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ரோஹிணி ., சீனா சார். , கவிதன்., அண்ணாமலை

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றீ டிவி ஆர்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றீ டிவி ஆர்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...