அன்பு வாழ்த்துகள் அம்மா.
முகநூலில் சுசீல்லாம்மா தனது பக்கத்தில் தனது புது நூல் வெளியீடு பற்றி எழுதி இருந்தார்கள். அவர்கள் வலைப்பக்கத்திலும் வெளியானதை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்.
////நான் ஆங்கில வழி மொழியாக்கம் செய்திருக்கும் தஸ்தயெவ்ஸ்கியின் குறும் படைப்புக்கள் சிலவற்றை
'தஸ்தயெவ்ஸ்கி கதைகள்'என்னும் தலைப்பில் நூலாகத் தொகுத்து சென்னையிலுள்ள நற்றிணை பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள்.
இவ்வாண்டு வெளியாகி இருக்கும் என் புதிய நூல் இது.////
எழுத்தென்னும் சிற்றகல்...
ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் ஒவ்வொரு படைப்பையும் படிக்க நேரும் கணமும்,அதை விட நுண்மையாய் வாசித்து அதைத் தமிழில் பெயர்க்கும் கணமும் என் வாழ்வுக்கு அர்த்தம் சேர்ப்பவை; என் அகத்தை விசாலப்படுத்தி அகந்தையைச் சிதைத்துப்போடுபவை. தஸ்தயெவ்ஸ்கியின் மொழிபெயர்ப்பில் முனையும்போது அவரது எழுத்துக்குள் அணுக்கமாகச் செல்லமுடிவதும், அவர் பெற்ற அகக்காட்சிகளை அவர் உணர்த்த விரும்பிய செய்திகளை அவரது அலைவரிசைக்குள்ளேயே சென்று இனம் காணமுடிவதும் ஓர் அரிய அனுபவம். திரும்பத் திரும்ப அவரது வெவ்வேறு ஆக்கங்களைத் தமிழில் தரும் முயற்சியில் நான் என்னை ஈடுபடுத்திக்கொள்வதற்கான காரணம் அதுவே.///
---- தஸ்தயெவ்ஸ்கி மொழிபெயர்ப்பு வரிசையில் குற்றமும் தண்டனையும், அசடன், ஆகிய இரு பெரும் நாவல்களைத் தொடர்ந்து தற்போது நற்றிணை வெளியீடாக வந்திருக்கும் 'தஸ்தயெவ்ஸ்கி கதைகள்'என்னும் குறுங்கதை மொழியாக்க நூலுக்கும் வாழ்த்துகள் அம்மா . தொடர் ஓட்டத்தில் நாங்கள் கூடக் களைத்துவிடுவோம் . எங்கள் உந்து சக்தியான நீங்கள் யாதுமாகிக் கொடுக்கும் தரிசனத்தில் மீண்டும் சக்தி பெறுகிறோம். நன்றி அம்மா . வாழ்க வளமுடன் :)

///எழுத்தென்னும் சிற்றகல்...
தஸ்தயெவ்ஸ்கி மொழிபெயர்ப்பு வரிசையில் குற்றமும் தண்டனையும், அசடன், ஆகிய இரு பெரும் நாவல்களைத் தொடர்ந்து தற்போது நற்றிணை வெளியீடாக வந்திருக்கும் 'தஸ்தயெவ்ஸ்கி கதைகள்'என்னும் குறுங்கதை மொழியாக்க நூலுக்கு நான் எழுதியுள்ளமுன்னுரை,எழுத்தென்னும் சிற்றகல்...
ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் ஒவ்வொரு படைப்பையும் படிக்க நேரும் கணமும்,அதை விட நுண்மையாய் வாசித்து அதைத் தமிழில் பெயர்க்கும் கணமும் என் வாழ்வுக்கு அர்த்தம் சேர்ப்பவை; என் அகத்தை விசாலப்படுத்தி அகந்தையைச் சிதைத்துப்போடுபவை. தஸ்தயெவ்ஸ்கியின் மொழிபெயர்ப்பில் முனையும்போது அவரது எழுத்துக்குள் அணுக்கமாகச் செல்லமுடிவதும், அவர் பெற்ற அகக்காட்சிகளை அவர் உணர்த்த விரும்பிய செய்திகளை அவரது அலைவரிசைக்குள்ளேயே சென்று இனம் காணமுடிவதும் ஓர் அரிய அனுபவம். திரும்பத் திரும்ப அவரது வெவ்வேறு ஆக்கங்களைத் தமிழில் தரும் முயற்சியில் நான் என்னை ஈடுபடுத்திக்கொள்வதற்கான காரணம் அதுவே.///
---- தஸ்தயெவ்ஸ்கி மொழிபெயர்ப்பு வரிசையில் குற்றமும் தண்டனையும், அசடன், ஆகிய இரு பெரும் நாவல்களைத் தொடர்ந்து தற்போது நற்றிணை வெளியீடாக வந்திருக்கும் 'தஸ்தயெவ்ஸ்கி கதைகள்'என்னும் குறுங்கதை மொழியாக்க நூலுக்கும் வாழ்த்துகள் அம்மா . தொடர் ஓட்டத்தில் நாங்கள் கூடக் களைத்துவிடுவோம் . எங்கள் உந்து சக்தியான நீங்கள் யாதுமாகிக் கொடுக்கும் தரிசனத்தில் மீண்டும் சக்தி பெறுகிறோம். நன்றி அம்மா . வாழ்க வளமுடன் :)
படைப்பாளிகளுக்கு ஓய்வில்லை.
பதிலளிநீக்குஅஹா ! ஸ்ரீராம் நன்றி :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!