திரு.கம்பன் அடிசூடி அவர்களின் வரவேற்புரை. :-
குழந்தைக் கவிஞரும் மேனாள் நிதியமைச்சரும் மொழிக்கோயிலும்.:-
குழந்தைக் கவிஞருக்கு கம்பன் அடிப்பொடி விருது வழங்கும் விழாவில்
கம்பன் அடிசூடி அவர்களின் உரையில் உற்சாகம் கரைபுரண்டோடியது. நிகழ்வுக்கு வந்திருந்த
ஒவ்வொருவரையும் அவர் பொருத்திச் சொன்ன விதம் அருமை.
///”தேடல் வேட்டை” என்ற குழந்தைகள் பாடல்களுக்கு - கவிதைக்கென்று
சாகித்ய அகாடமி விருதை முதன் முதலில் வாங்கிய செல்லகணபதி அவர்களைப் பாராட்டினார். அடுத்து
அவர் சொன்னதுதான் வியக்க வைத்து ரசிக்க வைத்தது. கம்பன் அடிப்பொடி ’கணேசன்’ பெயரால்
விருதை செல்ல ‘ கணபதி’ க்கு முதன் முதலில் வழங்க அவர் அப்பா சிதம்பரம் ”” வந்திருக்கிறார். அதில்
அம்மையப்பர் ( சொ சொ மீ – மீனாக்ஷி சுந்தரம் ) அவர்களும் கலந்துகொண்டு பாராட்டுகிறார்.
அவரது தம்பி பழனியப்பன் நன்றி நவில்கிறார். அதேபோல் சேதுபதி விருதுப்பா வாசிக்கிறார்.
ஆகையால் இது ஒரு சிறப்பான விழா. ஒரு குடும்பமே குழந்தைக் கவிஞரைப் பாராட்ட வந்திருக்கும்
விழா. பொன்னமராவதி சடையப்ப வள்ளல் சொல்வார் குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே
என்று.
பத்தொன்பது வருடங்களாக செல்லகணபதி எழுதிய நூல்கள் 43. அதில்
24 கவிதை நூல்கள். அதுவும் சிறுவர் பாடல்கள். மிளகாய்ப்பழச் சாமியார், வாழைப்பழச் சாமியார்,
பழகும் பூக்கள், மணக்கும் பூக்கள் ஆகிய நூல்கள் அவற்றுள் சில.
கண்ணதாசன் வைரமுத்து வாலி வரிசையில் இவரும் சிறப்பான கவிஞர்.
இவர் குழந்தைக் கவிஞர் வள்ளியப்பாவின் வாரிசு. இவரை வாரியார் போன்றோர் புகழ்ந்திருக்கின்றார்கள்.
சிங்கப்பூர் அரசு குழந்தைக் கவியரங்கம், பயிலரங்கள் ஏற்பாடு செய்து அதற்கு இவரைத் தலைமைதாங்க
அழைத்திருந்தது. அத்தகைய சிறப்புடையவர் இவர். இவரது நூல்கள் மெட்ராஸ் யூனிவர்சிட்டி,
அழகப்பா யூனிவர்சிட்டி ஆகியவற்றில் ஆய்வு நூல்களாக இடம் பெற்றுள்ள சிறப்புக்குரியன.///
மேலும் அவர் ராஜா
பேரன் என்ற எந்த பந்தாவுமில்லாமல் பழகும்
மேனாள் நிதியமைச்சரின் எளிமை, அணுக்கமாய் இருப்பது, மனிதநேயம் பற்றியும் இலக்கியப் பணி பற்றியும் சிறப்பித்துப் பேசினார். தரமான
படைப்புகளை வெளியிட தமிழுக்கு என்று ஒரு அமைப்பு உருவாக்கியது குறித்துப் பாராட்டினார்.
”எழுத்து” என்னும் தமிழ் இலக்கிய அமைப்பின் மூலம் வெளியிடப்படப் போகும் 3 நூல்களுக்கும்
வாழ்த்து கூறினார். அதில் ஒன்று சிறுவர் இலக்கியம் என்பதும் சிறப்பான ஒன்று. அவரின் நேரம்
தவறாத பண்பை சோழா ஷெரட்டானில் நடைபெற்ற ஒரு சிறு நிகழ்வோடு குறிப்பிட்டார்.
கவர்னராக பி சி அலெக்ஸாண்டர் இருந்தபோது தமிழ்த் தாய் கோயிலைக்கட்ட
கலைஞர் அடிக்கோள் நாட்ட (75 – 82) குருநாதரால் திருப்பணி செய்யப்பட்டு (கணபதி ஸ்தபதி
மூலம் ) பன்னிரெண்டு வருடங்களுக்குப் பிறகு முடிந்தது. அதற்காக பட்ஜெட்டில் 5 லட்சம் ஒதுக்கி அதை
நிதியமைச்சர் முடித்ததாகவும் குறிப்பிட்டார். தமிழ்த்தாய் ப்ரபந்தம் என்ற நூல் தொகுக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவித்தார். உலகத்திலேயே தமிழ் மொழிக்கென்று ஒரு கோவில் கட்டப்பட உறுதுணை புரிந்தமைக்காக
தமிழர்கள் எல்லாரும் மேனாள் நிதியமைச்சரை சென்னி தாழ்ந்து வணங்குகிறோம் எனவும் கூறினார்.
இவ்வாறு அவரின் மிகச் சிறப்பான வரவேற்புரை முடிந்து அடுத்து கவிஞர் திரு. சொ. சொ. மீ சுந்தரம் பாராட்டுரை நல்க வந்தார்கள். அது அடுத்த இடுகையில்.
நிறைய தகவல்கள் அறிந்து கொண்டோம்...பகிர்வுக்கு மிக்க நன்றி...தொடர்கின்றோம்..ககோதரி..
பதிலளிநீக்குநன்றி துளசி சகோ :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!