எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 26 ஆகஸ்ட், 2015

கலப்பு.



இனியும்
பிச்சையெடுக்கப் போவதில்லை.
யாருக்கும்
காரணம் சொல்லத்
தேவையில்லாத போதும்
யார் தலையையும் காக்கும்
பொறுப்பு இல்லாத போதும்
தர்மத்துக்காகக்
காத்திருப்பு.,
கோயில் வாசலில்
அழுக்கு மூட்டையோடு
குளிக்கவும் இல்லாமல்.

இனியும்
பிச்சையிடத் தேவையில்லை நீயும்.
ஈரப் பிரகாரங்களில்
கந்தல்காரனைக்
கடக்கும்போது
சிந்த வேண்டிய
கருணைப் பார்வைக்கான
அவசியமில்லை.

இறந்தவனின்
மூட்டையோடு
பக்கத்து சாக்கடைக்குள்
தள்ளுமுன் தவறியேனும்
திறந்து பார்த்துவிடாதே
அவன் மூட்டையை..
அதில் கட்டிக் கிடக்கும்
அவன் பார்வைகளோடு கலந்த
உன் பார்வைகளையும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...