எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5


செட்டிநாட்டில் மிதிலைப்பட்டியில் நிறைய ஓலைச்சுவடிகள் இருப்பது கேள்வியுற்று தமிழ்த் தாத்தா உ. வே. சுவாமிநாதய்யர் அங்கே மாட்டுவண்டியில் சென்று அவற்றை எல்லாம் வாங்கிவந்து சேகரித்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

இங்கே காரைக்குடியில் திருமணத்தைப் பதிவு செய்யவும் 124. ஏடுகளையும் 125. எழுத்தாணிகளையும் போன நூற்றாண்டில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு 126. இசைகுடிமானம் எழுதுதல் என்று பெயர். பெண்ணின் அப்பத்தா வீட்டு ஐயாவும், மாப்பிள்ளையின் அப்பத்தா வீட்டு ஐயாவும் இந்தத் திருமணப் பதிவு ஏடை எழுதிக் கொள்வார்கள். ஓரம் நறுக்கப்பட்டு கயிறில் கோர்க்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு ஏடும். இதில் சில வாக்கியங்கள் எழுதப்பட்டிருக்கும். கோயில் பிரிவு மற்றும் அந்தக்கால சீர் போல சில வார்த்தைகள். ( தற்காலத்தில் பேப்பரில் அதனூடே பெரியவர்கள் கையெழுத்துப் போட இடங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.) அதில் கையெழுத்துப் போட்டு இருவரும் மாற்றி வைத்துக் கொள்வார்கள். ( இதில் இருக்கும் வாசகங்கள் வீரபாண்டியபுரத்தில் உறையூருடையார் அல்லது  கழனிவாசல் ஒக்கூருடையார், இதுபோல இருக்கும்.  இந்த நாள் இவர்களுக்கு இசைகுடிமானம் செய்துகொண்டது என்று. அதில் இருக்கும் சீர் பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இதில் ஒரு 127. வராகனெடை என்ற வார்த்தை வரும். ஆனால் அப்போது ஒரு வராகன் என்றால் 3,500 ரூ. 1970 களில் திருமணத்தில் மூணுவராகன் கொடுத்தார்கள் என்றால் இரண்டு வராகன்கள் பெண்ணுக்கும் ஒரு வராகன் மாமியாருக்கும் என்று பொருள். :) இது பணம் மட்டுமே. மற்ற சீர் எல்லாம் தனி.  128. வட்டிக் கணக்குகள் கொடுக்கல் வாங்கல், இன்னபிற தகவல்கள் ஆகியவற்றையும் அக்காலத்தில் ஏட்டில் எழுதி வைத்திருக்கிறார்கள். டைரி அல்லது ஆவணம் என்று சொல்லலாம். :)


இதில் இருக்கும் வார்த்தைகளைப் பாருங்கள். சக்கரம் அறுபத்தொன்று, வராகனெடை மூன்று,

இந்த நாள் இவரும் ஒப்ப இந்த இசைகுடிமானம் யெனும்.. வீரப்பாண்டிய புரத்தில் உறையூருடையார்....


129. ஏடும் அதைச் சுற்றிய கயறும். இந்தக் கயறு கொண்டுதால் கோலமாவில் நனைத்து பிள்ளையார் நோன்பு மற்றும் திருமணத்துக்குத் தும்பு பிடிப்பார்கள்.

130. தும்பு என்றால் கோலமாவில் நனைத்து சாமி வீட்டுச் சுவரில் வீடும் கோபுரமும் போல வரைந்து நடுவில் குறுக்கும் நெடுக்கும் வரைவது. ஒருவர் கோலமாவில் நனைத்து ஒரு அடி அளவில் இருமுனைகளையும் பிடித்துக் கொள்ள இன்னொருவர் நடுவில் ட்வைன் நூலைப் பிடித்து அடிப்பது போல் செய்தால் அந்தக் கோலமாவு சுவற்றில் கோடாய்ப் பதியும். இதுபோல் அந்த முழுக் கோபுரத்தை உருவாக்குவார்கள்.


131. இது திருப்பண ஏடு. பால்பணம் என்று திருமணம் முடிந்ததும் எழுதுவார்கள் . அதைக்குறித்துவைத்திருக்கும் ஏடு. இந்த ஏட்டை பெட்டகத்தில் வைத்திருப்பார்கள். திருமண சமயத்தில் 132. பெட்டியடியில் உள்ள 133. கைப்பெட்டியில் இருக்கும்.


பூ வைக்கும் ப்ளாஸ்டிக்ஆப்பிள் பௌல். தற்காலத்திய உபயோகம். அந்தக்காலத்தில் வெள்ளியில் பூக்கூடை வைத்து விசேஷங்களுக்கு வருபவர்களுக்கு அதிலிருந்து பூ எடுத்துக் கொடுப்பார்கள்.


134. திருமணத்தில் பெண்ணுக்கு வைக்கப்படும் நிலை அலங்காரச் சாமான். வால் ஹாங்கிங்.


135. மெத்தைப் பாய். இது இரண்டு பக்கமும் முடையப்பட்டிருப்பதால் மெத்துமெத்தென்று இருக்கும் சன்னப் பிரம்பு வகையைக் கொண்டு முடையப்பட்டது. ஓரங்களில் நல்ல அரக்குக் கலர் துணி கொடுத்து படிமானமாகத் தைக்கப்பட்டிருப்பதால் விரிந்தோ கிழிந்தோ போகாது. குளிர்காலங்களில் இதில் படுத்தால் கிச்சென்றும் மெத்தென்றும் இருக்கும் :)


136. செம்பு தண்ணீர் ஜக் மற்றும் குவளை. தினமும் அம்மா அப்பா இதில்தான் தண்ணீர் வைத்துக் குடிக்கின்றார்கள். செம்புல குடிச்சா தங்கம் போல் மின்னுவோம் என்பது உண்மைதான் போல. இதில் வைத்துக் குடிக்கும் தண்ணீருக்கு அவ்வளவு சுவை உண்டு. ( காய்ச்சி ஆற்றி ஊற்றி வைக்கின்றார்கள். ) நம் உடல் இழந்த பல்வேறு சத்துக்களை செம்பு ஈடு செய்கிறது.


137. பின்னுன பை.

அந்தக்காலத்தில் இந்தப் பைகள்தான் பிரசித்தம். 30 வருடங்களுக்கு முன்பு. கடைக்காரர்கள் எல்லாம் பை தரமாட்டார்கள். மேலும் பாலிதீன் பைகள் அண்டாத காலம். எங்கே சென்றாலும் இந்தமாதிரி பூத்தையல் போட்ட பைகள்தான் எடுத்துச் செல்வோம்.

பாங்க் லாக்கரில் உள்ள முக்கியமான டாகுமெண்டானாலும் சரி, நகைகளானாலும் சரி, பணமானாலும் சரி இதுதான்

அதே போல் இது பழசானதும் காய்கறிக்கடைக்கும் கறிக்கடைக்கும் கூட எடுத்துச் செல்வார்கள். ஆனால் சிலர் ராசிப்பை என்று எவ்வளவு பழசானாலும் இதைத் தைத்து உபயோகப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.


138. இது மேட்டித் துணியில் க்ராஸ் தையலால்  எம்ப்ராய்டரி செய்யப்பட்டது. இலைகளும் பூக்களும் கொண்ட ஒரு ஃப்ளவர் வாஷ் மேலும் விலாசம் பாருங்கள். வி கே என்று. ஒவ்வொரு பொருளிலும் செட்டிநாட்டார் விலாசம் பொறிப்பார்கள். !!! பெயிண்டிலோ, தையலிலோ அல்லது பேர் வெட்டும் மிஷினிலோ ( உலோகங்கள் என்றால் ) :)


இதன் பின்புறம் பாயும் சிங்கம். இதுபோல் குதிரை புலி ஆகியவற்றையும் எம்பிராய்டரி செய்திருப்பார்கள்.

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5.

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்6 கருத்துகள்:

 1. இதுவரை அறிந்திராத
  அற்புதக் கலைப்பொருட்கள் குறித்து
  அறிந்து மிக மகிழ்தோம்
  ஒரு பதிவுக்கான தங்கள் அர்ப்பணிப்பு
  பிரமிப்பூட்டுகிறது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. அழகான கலைப் பொருட்கள்.

  கீதா: சொம்பும் குவளையும் இப்போதும் கிடைக்கும் இல்லையா? எங்கள் வீட்டில் எனக்குத் தந்தார்கள்... காரைக்குடி கூடை என்று, நாரால் முடைந்து இருப்பது போல் எவர்சில்வரில் அதே போன்று...அதன் பெயர் ஏதோ சொல்லுவார்கள் அது மறந்து விட்டது...இப்போதும் அதில்தான் நாங்கள் அக்ஷ்ய பாத்திரம் என்று சொல்லி ரூபாய் போட்டு வைத்திருக்கின்றோம்.

  பதிலளிநீக்கு
 3. நன்றி ரமணி சகோ

  நன்றி துளசி சகோ & கீத்ஸ். அதன் பெயர் வேவுக்கடகாம். :)

  பதிலளிநீக்கு
 4. பதிவும் படங்களும் அழகு.

  மெத்தைப் பாய் தாழை ஓலையால் பின்னப்படும்.

  பதிலளிநீக்கு
 5. அரிக்கன் லாந்தர் விளக்கு பற்றி சொல்லவும்

  பதிலளிநீக்கு

 6. https://honeylaksh.blogspot.com/2015/08/chettinad-heritage-houses-6.html

  இந்த இணைப்பில் பாருங்கள்.

  140. ஹரிக்கேன் விளக்கு -- அரிக்கேன் விளக்கு என்று பேச்சுவழக்கில் சொல்வார்கள். முன்பு எல்லாம் கைக்குழந்தைகள் இருக்கும் வீட்டில் கட்டாயம் முட்டைக்கிளாஸ் விளக்கோ அரிக்கன் விளக்கோ கட்டாயம் இருக்கும். இரவில் நன்கு துடைத்து மண்ணெண்ணெய் ஊற்றி ஏற்றி வைப்பார்கள். கரண்டுப்போய்விட்டால் குழந்தைகள் பயந்து போய்விடுவார்கள் என்று இரவு முழுவதும் இவை எரியும். நைட்லாம்ப் எஃபக்டில் :)

  இதன் கைப்பிடி மிக அழகானது, இடம் விட்டு இடம் தூக்கிச் செல்லலாம். கம்பெனி பேர் எல்லாம் கூட கொடுத்திருக்கிறார்கள் பாருங்க. ஆயுத பூஜை சமயத்தில் இவற்றுக்கெல்லாம் கூட சந்தனம் குங்குமம் வைப்பதுண்டு :)

  141. காடா விளக்கு, முட்டைக்கிளாஸ் விளக்கு, மெழுகுதிரி விளக்கு, குத்துவிளக்கு , காமாட்சி விளக்கு, ஸ்லேட்டு விளக்கு என்று எத்தனை இருந்தாலும் இந்த ஹரிக்கேன் விளக்கு ஏனோ ரொம்பப்பிடிக்கும். கரண்டுப் போய்விட்டால் இதன் பக்கம் அமர்ந்து பாடம் படிப்போம். இரவு உணவு கூட இதைச்சுற்றி அமர்ந்து உண்போம். மிக நெகிழ்வான தருணங்கள் இதனுடன் வாய்த்திருக்கின்றன.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...