செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

மன வடிவ முத்தம்.

முன்னொரு நாள்
முன் மாலைப்போதும்
பின்னொரு நாள்
பின்னிரவுப்போதும்
இன்னொருநாள்
இளங்காலைப் போதும்
உன் குரல் அனுப்பி
விழுந்து கிடந்த
எனை தூக்கினாய்
குழந்தையைப்
போலானேன்
சினேகிதியே
தாயானாய்
வார்த்தைகளால்
தாலாட்டி
இதம்தந்தாய்
இன்னமுதே..
உன் இதழ் குவித்து
வலப்பக்கம் நீ இட்ட
ஐஸ்க்ரீம் முத்தம்
உன் அன்பைப் போல
காயாமல் தேனாய் மதுவாய்.
தொடும்போதெல்லாம்
உன் மன வடிவாய்..
நன்றி மது.


4 கருத்துகள் :

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அட! என்ன இனிமையான ஐஸ்க்ரீம் போன்ற ஒரு கவிதை...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

பகிர்வுக்கு மிக்க நன்றி...

Geetha Ravi சொன்னது…

தோழமை தரும் மனபலத்தை அழகாகச் சொன்னீர்கள்! அருமை! :)

Thenammai Lakshmanan சொன்னது…

அஹா நன்றி கீத்ஸ்

நன்றி துளசி சகோ

நன்றி கீதா ரவி. :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...