எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 19 டிசம்பர், 2020

வீழ்தலின் நிழல் - நூல் திறனாய்வு.

 தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளையும் சிட்னி தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து பல்வேறு நூல்களை ஆய்வு செய்கிறார்கள். நம் தோழி திருமதி. பவளசங்கரி தமிழர் வாழிவியல் ஆய்வு அறக்கட்டளையின் நிறுவனர். ஈழத்துக் கவிஞர் திரு. ரிஷான் ஷெரீஃப் அவர்களின் நூலை  (முன்பே வலைத்தளத்தில் விமர்சனம் வெளியிட்டுள்ளேன் ) நூல்களின் நண்பர்களின் குழுமத்துக்காக ஆய்வு செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. 

முனைவர் திருமதி லதா, முனைவர் திருமதி வள்ளி, சிட்னி தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த திரு அன்பு ஜெயா , திருமதி வாசுகி ஜெயரத்னம் ஆகியோரு பங்கு பெற்றார்கள். அறிமுக உரையை தோழி பவளா அழகாக வழங்கினார். திரு அன்புஜெயா அவர்கள் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். முனைவர் வள்ளி கவிஞர் பற்றிய அறிமுகம் கொடுக்க முனைவர் லதா விமர்சகர் (என்னைப்) பற்றிய அறிமுகம் வழங்கினார். அதன் பின் நான் விமர்சனம் செய்ய வாசுகி அம்மையார் நன்றியுரை நவின்றார். மிக கட்டுக்கோப்பான நிகழ்வில் பங்கேற்றமை குறித்து மகிழ்கிறேன். அருமையான வாய்ப்பை வழங்கிய தோழி பவளாவுக்கு நன்றி

////இன்று மாலை 4.30 மணிக்கு சகோதரர் ரிஷானின் நூலை அன்புத் தோழி தேனம்மை திறனாய்வு செய்கிறார்கள். வாருங்கள் யு டியூப் நேரலையில் https://www.youtube.com/watch?v=RnYGVDplJOM சந்திப்போம்.

உங்கள் நூல் திறனாய்வு செய்ய வேண்டுமானாலும், நீங்கள் திறனாய்வு செய்யும் நூலை வெளியிட விரும்பினாலும் என்னை தொடர்பு கொள்ளலாம்.
தமிழர் வாழ்வியல் அறக்கட்டளை பக்கத்திலும் பதிவிடலாம்.


<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/RnYGVDplJOM" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

நிகழ்வைப் பார்த்துவிட்டு நண்பர்கள் கவிஞர், பொறியாளர் திரு பால சுப்ரமணியன், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் திரு சித்தார்த்தன் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தார்கள். 

நன்றி பவளா. நன்றி அன்பு ஜெயா சார். நன்றி வள்ளி மேம். அழகான முகவுரை வழங்கியமைக்காக மிக்க அன்பும் நன்றியும் லதா மேம். நிகழ்வைத் தொகுத்து செறிவான நன்றியுரை வழங்கியமைக்கு நன்றி வாசுகிமேம். யூட்யூபில் நிகழ்வைப் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது எனக் கருத்துக் கூற வேண்டுகிறேன் சக பதிவர்களே, தோழிகளே & நண்பர்களே :) 

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...