திங்கள், 16 மே, 2011

கல்கி கவிதை கஃபேயில் எனது இரவு கவிதை...

நதி வட்டப்பனையோலைத்
தடுக்குகளாய் முடைகிறது
அலையை..


மரம் கலைத்துக் கலைத்து
சீட்டுக்கட்டுக்களாய் வீசுகிறது
இலையை..

வானம் நதிக்குள்
வெள்ளிக்கிண்ணமாய்க் கவிழ்க்கிறது
பால் நிலவை.

சில்வண்டுகள் ஒளிந்திருந்து
சுரண்டிக் கொண்டிருக்கின்றன
இரவை..

கோட்டான்கள் ஹைடெசிபல்களில்
அதிரடிக்கிறது நெளிக்கோலங்களாய்
குளத்தை..

துருவன் நுண்ணோக்கிக்
கொண்டிருக்கிறான் தினம் பிரளும்
பூமியை..

டிஸ்கி:- இந்தக் கவிதைகள் 8.5.2011., கல்கி கவிதை கஃபேயில் வெளிவந்துள்ளன. நன்றி கல்கி..:)

22 கருத்துகள் :

Chitra சொன்னது…

Super! Congrats, akka! :-)

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! சொன்னது…

கவிதை அருமை . கல்கியில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் அக்கா

ரிஷபன் சொன்னது…

மரம் கலைத்துக் கலைத்து
சீட்டுக்கட்டுக்களாய் வீசுகிறது
இலையை..

அருமை. கல்கி பிரசுரத்திற்கு நல்வாழ்த்துகள்.

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

அசத்தலான கவிதை..
வாழ்த்துக்கள்..

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

நன்றாகவுள்ளது.

வாழ்த்துக்கள்..

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

அருமையான கவிதை

சமுத்ரா சொன்னது…

வாழ்த்துக்கள்

தமிழ் உதயம் சொன்னது…

இரவு - அழகு...
கவிதை - சிறப்பு...

ஸ்ரீராம். சொன்னது…

நான் அப்பவே வாழ்த்துச் சொல்லிப் பாராட்டிட்டேனே...!

Rathnavel சொன்னது…

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

நேசமித்ரன் சொன்னது…

நன்று ! வாழ்த்துகள் !


ஒரே ஒரு எழுத்துப் பிழை :)

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். கல்கியிலேயே படித்துப்பார்த்து மகிழ்ந்தேன். மீண்டும் படிக்க வாய்ப்புக்கிடைத்துள்ளது. நன்றி.

//மரம் கலைத்துக் கலைத்து
சீட்டுக்கட்டுக்களாய் வீசுகிறது
இலையை..//

நல்ல அழகிய கற்பனை.

ஹேமா சொன்னது…

நதி முடையும் பனையோலைத் தடுக்கு அருமை !

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமை. நானும் முன்னரே பாராட்டியாயிற்று:)!

திகழ் சொன்னது…

அருமை

middleclassmadhavi சொன்னது…

வாழ்த்துக்கள்

vettha. சொன்னது…

nalla vatikal. vaalthukal..
Vetha. Elangathilakam.
Denmark.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி சித்து

நன்றி சங்கர்

நன்றி ரிஷபன்

நன்றி சௌந்தர்

நன்றி குணசீலன்

நன்றி ராஜா

நன்றி சமுத்ரா

நன்றி ரமேஷ்

நன்றி ஸ்ரீராம்

நன்றி ரத்னவேல் சார்

நன்றி நேசன்

நன்றி கோபால் சார்

நன்றி ஹேமா

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி திகழ்

நன்றி மாதவி

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

ஜிஜி சொன்னது…

இயற்கையைப் பற்றிய நல்ல கவிதை.வர்ணனை அழகு.கல்கியில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் அம்மா.

Ramani சொன்னது…

"துருவன் நுண்னோக்கிக்கொண்டிருக்கிறான்
தினம்புரளும் பூமியை"
இறுதி வரிகள் நெஞ்சைவிட்டு நீங்க மறுத்து
நிறையச் சொல்லிப்போகின்றன
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி ஜிஜி

நன்றி ரமணி.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...