கடந்த வெள்ளியன்று நமது பெரும் ப்லாகர்.,எழுத்தாளர்., பள்ளி ஆசிரியையாக பணி புரிந்து ஓய்வு பெற்ற ருக்கு அம்மாவின் ( ருக்மணி சேஷசாயி. -- பாட்டி சொல்லும் கதைகள்) பேரன் உதய்சரணுக்கு உபநயனம் நடந்தது மிதிலாபுரி கல்யாண மண்டபத்தில். சில இலக்கிய ஆர்வலர்கள் வந்திருப்பதாக அம்மா சொன்னார்கள்
அங்கு உரத்த சிந்தனை நண்பர்களை சந்தித்தேன். அதன் தலைவர் எஸ்வி ராஜசேகரன்., உறுப்பினர் பாண்டுரங்கன் மற்றும் நம் ருக்மணி அம்மா. போன வாரம் உறவினர் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். உரத்த சிந்தனை சார்பில் கன்னிமரா நூலகத்தில் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்படுகிறது என்று. என் ஆர் கே ( கிருஷ்ணன்) விருது சிறந்த நூலுக்காகவும்., அமரர் சேஷசாயி விருது ( 2 விருதுகள் ) சிறந்த படைப்புகளுக்காகவும் வழங்கப்படுகிறது.
எஸ் வி ராஜசேகரும்., உதயம் ராமும் சேர்ந்து இந்த இலக்கிய அமைப்பை ஆரம்பித்தவர்கள். கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் ஆகிறது. மிகச்சிறப்பாக செயல்படும் இது மதுரை., கோவை., திருவண்ணாமலை., திருச்சி போன்ற தமிழகத்தின் பல ஊர்களிலும் இருக்கிறது. மாதாந்திரக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் இலக்கிய சம்பந்தமான புத்தக விமர்சனங்கள்., கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன. வருடச் சந்தாவும் ஆயுள் சந்தாவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இன்னும் நிறைய சமூக சேவைகள் ., ஆதரவற்றோருக்கான உதவிகள்., கல்வி உதவிகள்., மருத்துவ உதவிகள் ., வழங்கப்படுகிறது. ரத்த தான முகாமும் நடத்தப் படுகிறது.
ஒவ்வொரு துறையிலும் சிறப்பாகப் பணியாற்றுபவர்களையும் ஊக்குவிக்கும் பொருட்டும் அவர்களை வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தும் பொருட்டும்., அவர்களின் சேவைகளின் சிறப்பை வெளிப்படுத்தவும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
குமுதம் சிறுகதைப் போட்டியில் நடுவர்களில் ஒருவராகவும் இந்த உரத்த சிந்தனை அமைப்பில் இருந்தவர் ஒரு முறை பங்கேற்றதாக ருக்கு அம்மா சொன்னார்கள். இலக்கிய ஆர்வலர்களும் ., சமூக சிந்தனையாளர்களும் சென்னையின் பெரிய மனிதர்களும் நிரம்பிய சபையாய் இருக்கிறது இது.
நல்லோர் வங்கி என்ற அமைப்பும் இதனுடன் சேர்ந்து செயல்படுகிறது. அதை ஆரம்பித்து 10 வருடங்கள் ஆவதாக ராஜசேகர் சொன்னார். இதில் சென்னையைச் சேர்ந்த 100 பேருக்கு மேல் உறுப்பினராக இருப்பதாகவும்., 70 ஆண் உறுப்பினர்களும் 30 பெண் உறுப்பினர்களும் இருப்பதாக சொன்னார். மிக நல்ல முயற்சி என அவர்களை வாழ்த்தினேன்.
ஜூன் மாதம் ஓவியர் ஸ்ரீ ( ஸ்ரீகாந்த்) அவர்களுக்கு ஓவியர் அரஸ் கையால் விருது வழங்கவிருப்பதாகவும். அது ஜூன் 19 ., தேவநேயப்பாவாணர் அரங்கில் நடைபெறும் என்றும் கூறினார் பாண்டுரங்கன். விருப்பமிருப்பவர்கள் கலந்து கொள்ளுங்கள். திறமையாளர்கள் எங்கும் வெல்வார்கள்.. வாழ்த்துக்கள் ஸ்ரீ..
இதில் முக்கியமாக குறிப்பிட நினைத்த விஷயம் நமது ப்லாகர்களில் ஒருவர் . திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் திரு . ருக்மணிசேஷசாயி அவர்கள் கையால் மே 22 அன்று கன்னிமரா லைப்ரரியில் நடைபெற்ற கூட்டத்தில் விருது வாங்கியிருக்கிறார். வலைப்பதிவர்கள் சார்பாக வை. கோபால் சாருக்கு பாராட்டுக்கள். நல்ல கட்டுக்கோப்பான எழு்த்து நடை இவருடையது . இந்த ப்லாகில் இவருடைய படைப்புக்களை படிக்கலாம்.
வாழ்த்துக்கள் வை. கோபால் சார்.. வாழ்க வளமுடன்.
மிகச்சாதாரணமானவனும், வலைப்பூவினில் கடந்த 5-6 மாதங்களாக மட்டுமே எழுதிவரும் புதிய பதிவராகிய என்னை, மற்ற வலைப்பூ நண்பர்களுக்கு, மிகப்பிரபலமான மற்றும் மிகச்சிறந்த எழுத்தாளராகிய தாங்கள் அறிமுகம் செய்து வைத்துள்ளதற்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள்.
பதிலளிநீக்குதங்களின் இந்தச்செயல் என்னை மேலும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. தங்களின் பெருந்தன்மையையும், மற்ற பதிவர்கள் மேல் தங்களுக்கு உள்ள அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
மிக்க நன்றி !
அன்புடன்,
வை.கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.com
வை.கோபாலகிருஷ்ணன் ஐயாவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
பதிலளிநீக்குநல்ல பதிவு.பகிர்வுக்கு நன்றி.
really a good job thenammai, oru kavithai eluthi irukiren paarththu karuththu sollungalen
பதிலளிநீக்குநல்ல பதிவு...பகிர்வுக்கு நன்றி...!
பதிலளிநீக்குநன்றி கோபால் சார்
பதிலளிநீக்குநன்றி ஜிஜி
நன்றி ரூஃபினா
நன்றி பிரியா