எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

தேன் பாடல்கள்.பாசமும் பிரிவும் ( ரொமான்ஸ் வெள்ளி :)

221. மானூத்து மந்தையிலே மான்குட்டி பெற்ற மயிலே.
கிழக்குச் சீமையிலே அண்ணன் விஜயகுமார் தங்கை ராதிகாவுக்குப் பெண் குழந்தை பிறந்த செய்தி கேட்டு சீர் கொண்டு வரும் பாடல் காட்சி. ஒவ்வொரு வரியும் வைரம். ( பாடல் வைரமுத்து )

222. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
பாசமலரில் சிவாஜியும் சாவித்ரியும் அண்ணன் தங்கை. தனக்குக் குழந்தை பிறந்ததும் மாமன் சீர் கொண்டு வருவார் என்று பாடுவார். தனக்கும் அண்ணனுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை ஒவ்வொரு வரியும் உணர்த்தும்.

223. பெண்ணே அழகிய தீயே
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வந்த பெரும்பாலான பாடல்கள் எனக்குப் பிடிக்கும். அதில் இது ஏ க்ளாஸ் பாட்டு. மின்னலேயில் மாதவனும் ரீமாசென்னும்கூட செம க்யூட்.

224. வெண்மதி வெண்மதியே நில்லு.
இதுவும் மின்னலேதான். பிரிவைப் பாடும் பாடல்.  பாத்ருமில் உக்கார்ந்து அழும் காட்சியில் ரீமா செமயாக நடித்திருப்பார். மாதவனும் சோகத்தைப் பிழிந்திருப்பார். // அவள் அழகைப் பாட ஒரு மொழியில்லையே. அளந்து பார்க்க பல வழி இல்லையே// என்ற வரிகள் பிடிக்கும்.


225.வேறென்ன வேறென்ன வேண்டும்
இதுவும் மின்னலே. இந்தப் படத்தில் வரும் எல்லாப் பாடல்களும் பிடிக்கும். இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக.// என்னைப் பிடிச்சிருக்கா பிடிக்கலையா ஒரு முறை சொல்லிவிடு..// பாடல் முழுதுமே அழகு. இசை , காட்சியமைப்பு நடிப்பு எல்லாமே.

226.ஐயையோ என் உசுருக்குள்ள தீய வச்ச ஐயையோ.
பருத்தி வீரனில் ப்ரியாமணியும் கார்த்தியும் நடித்த பாடல், காலைச் சுத்தும் நிழலைப் போலத் தொட்டுத் தொட்டு உன்கூடவே தங்கிடவா என்ற இடத்தில் கனவில் வரும் காட்சி போலப் படமாக்கப்பட்டிருப்பது அழகு. ஸ்பெஷலாக ப்ரியாமணியின் வெட்கமும்  கார்த்திக்கின் தெனாவெட்டான நடிப்பும் அழகு.

227.கண்ணன் வரும் வேளை.
பாவனா ஆடும் காட்சி. மிக அழகாகப் படமாக்கப்பட்டிருக்கும். பாவனா க்யூட். குட்டி பொம்மை போலிருப்பார். :)

228 விழி மூடி யோசித்தால்.
அயனில் தமன்னாவும் சூர்யாவும் செம ஆட்டம் போடும் காட்சி. காதலில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் எண்ணெய்க் குடுவையில் அரிசி அளப்பார் சூர்யா.. சூர்யாவுக்கு இருட்டில் முத்தம் கொடுத்துவிட்டுத் தமன்னா வாங்கும் பல்ப் என சுவாரசியமான காட்சிகள் நிறைய. சில நாட்கள் என் ஃபோனில் காலர் டியூனாக இந்தப் பாட்டு இருந்தது. அவ்ளோ பிடிக்கும். 


229. என்னமோ ஏதோ மின்னி மறையுது விழியில்
மிக அருமையான லயத்தோடு கூடிய பாடல். ஹம் பண்ணத் தோன்றும். ஜீவாவும் ராதாவின் மகள் ( பேரென்ன? ) நடித்திருப்பார்கள். கோவாவில் நடித்த ஒரு பெண்ணும் ( பேர் தெரியல ) இதில் நடித்திருப்பார். இளமை துள்ளும் அழகு மூவருமே. 

230.இதயம் இந்த இதயம் இன்னும்
மென்மையான பாடல். யுவன்சங்கர்ராஜா இசை. ஸ்வேதா பண்டிட்டின் குரலில் ///ஆசைத் தூண்டிலில் மாட்டிக் கொண்டு தத்தளித்தேதான் துடிக்கும் சிறு இதயம்.. ///
பிரிவுத் துன்பத்தைக் கொண்டு வரும் பாடல்.

  டிஸ்கி:- இவற்றையும் கேளுங்க. :)

1. தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.  

2. தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.

3. தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.

4. தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்

5. தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்

6. தேன் பாடல்கள். நிலவும் மயிலும். 

7. தேன் பாடல்கள். காற்றும் காதலும்.  

8. தேன் பாடல்கள். ஆசையும் ஆட்டமும்.    

9. தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆற்றங்கரை மரமும்.

10. தேன் பாடல்கள் தலைவர்களும் தலைவியும் கெமிஸ்ட்ரியும்.

11. தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.  

12. தேன் பாடல்கள். தேடலும் துடிப்பும்.  

13. தேன் பாடல்கள். கண்ணழகும் கண்ணனும்.

14. தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.  

15. தேன் பாடல்கள். யமுனையும் ஓடமும்.  

16. தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.

17. தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலய மணியும். 

18. தேன் பாடல்கள். மார்கழியும் மல்லிகையும். 

19. தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.    

20.  தேன் பாடல்கள். காதலும் மயக்கமும்.

21. தேன் பாடல்கள். மாலையும் மலரும்.

22. தேன் பாடல்கள். நாணமும் தவிப்பும்.

23. தேன் பாடல்கள். பாசமும் பிரிவும். ( ரொமான்ஸ் வெள்ளி )

24. தேனே உனை நான் தேடியலைந்தேனே.

25. தேன் பாடல்கள். பொன்வீதியில் மானும் முயலும் மயிலும்.



5 கருத்துகள்:

  1. எல்லாமே அருமையான (தேன்)பாடல்கள். மின்னலே எனக்கும் பிடித்த பாடல்கள்.வாலி,தாமரை வரிகள் சூப்பரக்கா. ஜீவா,கார்த்திகா(ராதாமகள்) நடித்த 'கோ' படம்.

    பதிலளிநீக்கு
  2. // மலர்ந்தும் மலராத பாதி மலர் போல // அழாமல் பார்க்க முடிவதில்லை...

    பதிலளிநீக்கு
  3. நன்றிடா அம்மு :) இன்னொரு பெண் கோவாவில் நடித்திருப்பார் அவர் பெயரும் தெரியலை டா :)

    நன்றி தனபாலன் சகோ. பாச மலர் என்றாலே அந்தப் பாடல்தானே ஞாபகம் வரும் நம் அனைவருக்குமே. :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. நல்ல தொகுப்பு. சில பாடல்கள் எனக்கும் பிடித்தவை.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...