எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

ஏற்றுமதி டாகுமெண்டேஷன் - இலவச வழிகாட்டி கருத்தரங்கம். HOW TO MAKE EXPORT DOCUMENTS WITHOUT MISTAKES.- FREE SEMINAR.

நிறைய பேர் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி வியாபாரம் செய்வாங்க. ஆனா அதுல அடிப்படையா சில விஷயங்களைத் தெரிஞ்சிகிட்டா இன்னும் சிறப்பா செய்யலாம். சில சமயம் தரமான பொருளை அனுப்பியும் டாகுமெண்டேஷன் சரியில்லைன்னு சொல்லி அனுப்பின பொருளுக்கான பணம் திரும்ப வராம பலர் அல்லாடுறதும் உண்டு.



பொதுவா ஒரு பொருளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யணும்னா ஹண்ட்ரட் பர்சண்ட் பர்ஃபெக்டான பொருளை மட்டும் கொடுத்தா போதாது. தவறில்லாத தஸ்தாவேஜுகளையும் கொடுக்கணும். தரமான பொருளும் தவறில்லாத டாகுமெண்டேஷனும் முக்கியம்னு சொல்றார் சர்வதேச டாகுமெண்டேஷன் பயிற்சியாளர் திரு சேதுராமன் சாத்தப்பன் அவர்கள்.

டாகுமெண்டில் ஏதும் தவறு நேர்ந்தால்  நாம் அனுப்பிய பொருளுக்கான பணம்  கிடைக்காமல் போய்விடலாம். எனவே டாகுமெண்டேஷன் தயாரிக்கும்போது கவனிக்க வேண்டியவை, குறிப்பிட வேண்டியவை , தவறில்லாமல் டாகுமெண்டேஷன் தயாரிப்பது எப்பிடி என்னென்னன்னு  இந்த ஒரு நாள் பயிற்சியில் கற்றுக் கொடுக்கிறார் சேதுராமன் சாத்தப்பன்.

இண்டர்நேஷனல் சேம்பர் ஆஃப் காமர்ஸ் விதிகளான யூ. சி. பி 600, ஐ .எஸ். பி .பி,  இன்கோடெர்ம்ஸ் 2010 குறித்து தெளிவாக விளக்கப்படும். டாகுமெண்டேஷன் மாதிரிகளும் வழங்கப்படுமாம். ஏற்றுமதி டாகுமெண்டேஷன் குறித்து ஏற்படும் சந்தேகங்களை போக்க இது ஒரு வாய்ப்பா எடுத்துக்குங்க.

இது ஒரு இலவச வழிகாட்டி கருத்தரங்கம் . எனவே தெரிஞ்சவர்களுக்கு எல்லாம் சொல்லுங்க. கோவை தினமலர் ஏற்பாடு செய்திருக்கும் இக்கருத்தரங்கம் 22.2. 2015 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு நடைபெறுது. இடம் :- IKF வளாகம் , திருமுருகன் பூண்டி, திருப்பூர்.

இதைப் பதிவுசெய்து கொள்ள படிவமும் இத்தோடு இணைத்திருக்கேன். கலந்துகொண்டு சந்தேகங்களைத் தீர்த்துக்கிட்டு சரியான டாகுமெண்டேஷன் செய்து உங்க எக்ஸ்போர்ட் பிஸினஸில் வெற்றியடைய வாழ்த்துகள். :) 

(SUB :- HOW TO MAKE EXPORT DOCUMENTS WITHOUT MISTAKES. )

டிஸ்கி :- இவர பத்தி எழுதின இன்னும் இரு கட்டுரைகளையும் இங்கே பாருங்க

1. ஏற்றுமதி ஆலோசனைகள் சேதுராமன் சாத்தப்பன்.

2. டாலர்ஸ் & யூரோஸ் கொட்டித்தரும் ஏற்றுமதியும் இறக்குமதியும்



5 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...