எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 25 ஜூலை, 2014

தேன் பாடல்கள்.நாணமும் தவிப்பும்

211. பார்த்த முதல் நாளே.
வேட்டையாடு விளையாடுவில் கமலும் கமலினி முகர்ஜியும் பாடும் அற்புதமான பாடல். மனமொத்த தம்பதிகளின் கனிவு அழகாக இருக்கும். இருவரின் புன்னகையும் மனதைக் கொள்ளை கொள்ளும்.

212. தனிமையிலே இனிமை காண முடியுமா.
ஜெமினியும் சரோஜாதேவியும் பாடும் பாடல்.  இரவில் நிலவில் கொள்ளை அழகாக இருக்கும். மாடியில் ஜெமினியும் ஏணியின் கீழ் சரோஜாதேவியும் நிற்பார்கள். கடல் இருந்தால் அலை இருக்கும் உலகில் எதுவும் தனிமை இல்லை எனப்பாடுவது அழகு.

213. என்னை விட்டு ஓடிப் போக முடியுமா.
இந்தப் பாடலைக் கேட்டால் எனக்கு மணியனின் இவள் அல்லவோ பெண் ஞாபகம் வரும்.அதில் ட்ரான்சிஸ்டரில் பாட்டுக் கேட்கும் ஹீரோ அதைக் கேட்கவென்றே வரும் ஹீரோயின் சியாமளா. படத்தில் எஸ் எஸ் ஆரும் விஜயகுமாரியும்.
214. சுந்தரி கண்ணால் ஒரு சேதி..
தளபதியில் ஷோபனாவும் ரஜனியும்  நடித்த காட்சி. பிரிவையும் தனிமையையும் போரையும் காட்டும் காட்சி. காதலும் தாபமும் நிறைந்த காட்சிகள் அழகு. 


215. சந்தோஷம் காணாத வாழ்வுண்டா.
வித்யாசமாக சட்டைக்கு வெளியே சட்டைப் பை கொண்ட சட்டை அணிந்து மோகன் பாடும் பாடல். மனதைத் தொடும் வரிகள். புன்னகை போதும். பூ மொழி போதும். போர்களும் கூட ஒழிந்துவிடும். 

216. நீயில்லாத உலகத்திலே.
எஸ் எஸ் ஆரும் விஜயகுமாரியும் நடித்த காட்சி. தெய்வத்தின் தெய்வம் படம். மாங்கல்யத்தைத் தொட்டு வணங்கிப் பாடுவார். அவர் தனியாக யாரையோ நினைத்துப் பாடுகிறார் என்று தவறாக நினைக்கும் எஸ் எஸ் ஆர் முடிவில் உண்மை உணர்வார்.

217.கண்கள் இரண்டும். இன்று.
மன்னாதி மன்னனில் பத்மினி பாடும் பாடல். கறுப்பு வெள்ளைப் படம் என்றாலும் காட்சியும் இசையும் மனதைக் கொள்ளை கொள்ளும். பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன். பாடி வரும் தென்றல் தேரேறி  ஓடுவேன். என்று இங்கே பத்மினி பாடிக் கொண்டிருக்க அங்கே எம்ஜியார் கோட்டைக்குள் சிக்கி சண்டை போட்டுக் கொண்டிருப்பார்.தனிமையும் துயரத்தையும் வெளிப்படுத்தும் பாடல்.

218. மயங்குகிறாள் ஒரு மாது.
பாசமலர் படத்தில் சிவாஜிக்கும் வரலெக்ஷ்மிக்கும் திருமணம் ஆனபின் சாவித்ரி பாடும் பாடல். ஜெமினியும்  வீணை வாசித்துக் கொண்டு இருப்பார். வெட்கம் , நாணம் என்றால் என்ன என்று இன்றைய தலைமுறைப் பெண்களுக்குத் தெரியாது. இதில் முதலிரவு அறையில் தங்கை படத்தைத் திருப்பி வைத்துவிட்டு வருவார் சிவாஜி. தங்கை பார்க்கிறாள் என்ற நினைப்பில். :)

219. நினைவாலே சிலை செய்து
அந்தமான் காதலி படத்தில் சுஜாதாவும் சிவாஜியும் உண்மை ஜோடி போலவே வாழ்ந்திருப்பார்கள். ஜேசுதாசின் குரலில் கம்பீரமான காதல் பாடல். 

220. அந்தமானைப் பாருங்கள் அழகு.
அவர்கள் இருவரும் காதலிக்கும் போது பாடும் பாடல். சுஜாதா படகு ஓட்டியபடி ஊரைச் சுற்றிக் காட்டியபடி பாடும் பாடல் அழகு.

  டிஸ்கி:- இவற்றையும் கேளுங்க. :)

1. தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.  

2. தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.

3. தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.

4. தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்

5. தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்

6. தேன் பாடல்கள். நிலவும் மயிலும். 

7. தேன் பாடல்கள். காற்றும் காதலும்.  

8. தேன் பாடல்கள். ஆசையும் ஆட்டமும்.    

9. தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆற்றங்கரை மரமும்.

10. தேன் பாடல்கள் தலைவர்களும் தலைவியும் கெமிஸ்ட்ரியும்.

11. தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.  

12. தேன் பாடல்கள். தேடலும் துடிப்பும்.  

13. தேன் பாடல்கள். கண்ணழகும் கண்ணனும்.

14. தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.  

15. தேன் பாடல்கள். யமுனையும் ஓடமும்.  

16. தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.

17. தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலய மணியும். 

18. தேன் பாடல்கள். மார்கழியும் மல்லிகையும். 

19. தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.    

20.  தேன் பாடல்கள். காதலும் மயக்கமும்.

21. தேன் பாடல்கள். மாலையும் மலரும்.

22. தேன் பாடல்கள். நாணமும் தவிப்பும்.

23. தேன் பாடல்கள். பாசமும் பிரிவும். ( ரொமான்ஸ் வெள்ளி )

24. தேனே உனை நான் தேடியலைந்தேனே.

25. தேன் பாடல்கள். பொன்வீதியில் மானும் முயலும் மயிலும்.


5 கருத்துகள்:

 1. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 2. தளபதில ஷோபா இல்லீங்க...... ஷோபனா!

  பதிலளிநீக்கு
 3. நன்றி யாழ்பாவண்ணன்

  நன்றி ஸ்ரீராம் திருத்திவிட்டேன். :)

  நன்றி உமேஷ் :)

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...