121. நினைக்கத் தெரிந்த மனமே.
ஆனந்த ஜோதியில் தேவிகா பாடும் பாடல். சோகத்தைப் பிழிந்து உருக வைக்கும் பாடல். எம்ஜியார் தேவிகா புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார். இதில் ஜப்லா என்ற கழுத்து டிசைன் வைத்த ரவிக்கையை அணிந்திருப்பார் தேவிகா. ” பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா. இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா.. “ என்ற பதில் கிடைக்காத கேள்விகளோடு முடியும் பாடல்.
122. வாராதிருப்பானோ வண்ணமலர்க் கண்ணனவன்.
மெல்லிய இசையோடு இருக்கும் பாடல். மனதை வருடும் காட்சிகள். கண்ணழகு பார்த்திருந்து .. காலமெல்லாம் காத்திருந்து .. என்று மயங்கிப் பாடுவார் எஸ் எஸ் ஆர் .. விஜயகுமாரியைப் பார்த்து.
123. உன்னிடம் மயங்குகிறேன்.
ஜேசுதாசின் சந்தனக் குரலில் இனிமையான பாடல். தேன் சிந்துதே வானம் படம். இசையும் குரலும் குழையும் அற்புதம். வஞ்சி உன் வார்த்தை எல்லாம் சங்கீதம். வண்ணவிழிப் பார்வை எல்லாம் தெய்வீகம். என்ற வரிகள் பிடிக்கும்.
124. வெண்ணிலவே வெண்ணிலவே.
காதலுக்குத் தூது போனவரே காதலராகிப் பாடும் பாடல். இந்தப் பாட்டின் நடுவில் நடனத்தில் இருவரும் ஒரு ட்விஸ்ட் எடுத்து ஆடுவார்கள். அது எனக்குப் பிடிக்கும். காஜோலின் கண்ணும் முடியும் செம கவர்ச்சி. முடிவில் அழகான ஸ்டெப்களோடு நான் உலகை ரசிக்க வேண்டும் உன் போன்ற பெண்ணோடு என்று முடிப்பார்.
125. ஓ மரியா. ஓ மரியா.
காதலர் தினம் படத்தில் ரம்பா நெட் செண்டரில் தோன்றி ஆடும் காட்சி.குட்டிப் பசங்க கூட நெட்டில் உலவுவதும் ஒரு க்யூட் பேபி மௌசை இயக்கி நடனமாடுவதும் ( கிராஃபிக்ஸில்தாங்க ) அழகு.
126.மலர்களே மலர்களே.
லவ் பேர்ட்ஸ் படம். நக்மாவின் கண்ணுக்குக் காணும் இடமெல்லாம் பிரபுதேவா தெரிவார். ஒரு இடத்தில் மறைந்து பக்கத்திலேயே இன்னொரு காஸ்ட்யூமில் தோன்றுவார். காணும் இடமெல்லாம் கண்ணுக்குள் காதலன். :) உருகியதே எனதுள்ளம் பெருகியதே விழிவெள்ளம் விண்ணோடும் நீ, மண்ணோடும் நீ, கண்ணோடும் நீ என்ற வரிகள் டச்சிங்.
127. அடி பெண்ணே பொன்னூஞ்சல்
முள்ளும் மலரும் நான் மிகவும் ரசித்த படம். ஷோபா நடித்த படம் என்றாலே இயற்கை அழகோடுதான் இருக்கும்.சிக்கென்ற மேனியும் வெள்ளந்திச் சிரிப்பும் வெகுளிப் பார்வையும் செம செம. கிராமத்து அழகு.
128. தேசுலாவுதே, தேன் மலராலே
இந்தப் பாட்டின் ஃபாஸ்ட் ரைமிங்குக்காகப் பிடிக்கும். தேசுலாவுதே தேன் மலராலே. உல்லாசமாய் சல்லாபமாய் என ஆலாபனை பிடிக்கும்போது சேர்ந்து பாடத் தோன்றும்.
129. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
திருடா திருடாவில் ஹீராவும், பிரசாந்தும், ஆனந்தும் செம குறும்பு க்ரூப். மணிரத்தினத்துக்கு அரை இருட்டில் படம் எடுப்பது மட்டுமல்ல .. ரெண்டு ஹீரோ படம் என்றால் கொள்ளை இஷ்டம். :) நல்ல ரிதமிக்கான பாடலும் காட்சியமைப்பும்
130 ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்.
கமலா என்ன ஆச்சுன்னு எம்ஜியார் சரோஜா தேவியைப் பார்த்துக் கேட்க அவங்க. “ ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம். அது எப்பிடி எப்பிடி எப்பிடி வந்தது எனக்கும்னு கேப்பாங்க. “ அதுக்கு எம்ஜியார் ”இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் கண்ணை இழுத்து வளைச்சு என்னைப் பாரு புரியும்”னு பாடுவார். ”என்னது கண்ணை இழுத்து வளைச்சுப் பார்க்குறதா... :)” மகா குறும்பு கொப்பளிக்கும் பாடல். முழுப்பாடலும்குளத்திலேயே படமாக்கப்பட்டிருக்கும் . கறுப்பு வெள்ளைப் படம் என்றாலும் சரோஜாதேவியின் கண் அழகு சொக்க வைக்கும்.வெய்யிலுக்கு இதமான ஜில் ஜில் மயக்கம். :)

Excellent choices.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குபாடலும் விளக்கமும் நன்று.. தேடலுக்கு பாராட்டுக்கள் த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
முதல் பாடல் என்றும் இனிமை...
பதிலளிநீக்குகடைசி ஆகா..!
நன்றி பெயரில்லா
பதிலளிநீக்குநன்றி ரூபன் சகோ
நன்றி தனபாலன் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
அத்தனைப் பாடல்களும் தேன் சிந்துதே வானம்!!!
பதிலளிநீக்கு