எனது நூல்கள்.

புதன், 4 மார்ச், 2015

பணிமனை.

விதியை மீறி
ஓய்வு ஒழிச்சல் இல்லாமல்
ஓடிய வண்டிகள்
ஓவராயிலிங்குக்காகக்
காத்திருந்தன..

புதிதாயும்.,
தூசிபடிந்தும்.,
இளமையாயும்.,
முதுமையாயும்..

எதையோ காயப்படுத்தும்வரை
தான் உடைந்து வீழும்வரை.
பாகங்கள் உராய்ந்து தேயும்வரை.
பற்சக்கரங்கள் தவழும்வரை..பெட்ரோல் கசடுகள்
நுரையீரலில் படிந்து
இதயத்தமனிகள்
சுவாசத்துக்கு ஏங்கி..

பாதம்தேய பாதம்தேயப்
பலவருடங்கள் ஓடி
மூச்சுவாங்கி வீழ்ந்து கிடந்தன..
முட்டிக்குமுட்டி ஓய்ந்து கிடந்தன..

லாடம்இல்லா குளம்புகள்தேய
கழிவுகள் கீழே கசியக் கசிய..
புதிய உறுப்புக்கள்
சிரமத்தோடு மாட்டி..

சுவாசத்தை செருமி சீராக்கியும்
சில ஓய்ந்து விடுகின்றன..
சில ஓய்வெடுக்கின்றன..
சில ஓய்ந்து படுக்கின்றன.

சில மட்டுமே
உறுமலோடு கிளம்புகின்றன
பணிமனையிலிருந்து
சிலிர்த்தபடி..
 
டிஸ்கி:- ஆகஸ்ட் 5, 2014, அதீதத்தில் வெளியானது.

3 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆமா... எந்த மருத்துவமனைக்கு சென்று பார்த்தீர்கள்...? ஹிஹி...

// உறுமலோடு... சிலிர்த்தபடி... // அப்படித்தான் இருக்கோணும்...! மன உறுதி...!

Thenammai Lakshmanan சொன்னது…

ஹாஹா இது சர்வீஸ் செண்டர் சகோ :) பஸ் ஷெட் மாதிரி இடத்துல பார்த்தது.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...