எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 2 மார்ச், 2015

க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.

141. கொடைக்கானலில் கோக்கர்ஸ் வாக் மாதிரி இந்த ஹோம்பேஜ் லைக்கர்ஸ் வாக்.. ஹிட் அண்ட் ரன்..:)

142. ஒரு முறை ருசித்துவிட்டால் பணத்தின் ருசியைப் போல எந்த உணவும் ருசிப்பதில்லை.

143. நெருங்கி வருபவர்களுக்கெல்லாம் ஒன்றென்றால் துடிக்கும் மனது. அவ்வப்போது அனைத்திலிருந்தும் விலக்கி வைக்கிறது.


144. வேலை செய்பவர் விம்பாரைக் கரைப்பதும் பிள்ளைகளைக் காய் வாங்க அனுப்பினால் விலையும் பெரிதாகத் தெரிவதில்லை. -- கடமையைத் தட்டிக்கழிச்சிட்டோம்னு சந்தோஷமோ.. :)

#நாமே இவற்றைச் செய்யும்போது எல்லாத்திலும் கஞ்சூஸாகி விடுகிறோமே..:)

145.  வஸ்தாதுகளையும் பிஸ்கோத்து ஆக்கிவிடுகிறது காலம்.
பிஸ்கோத்துகளையும் வஸ்தாது ஆக்கிவிடுகிறது காதல்..:)

# Fakhrudeen Ibnu Hamdun அருமை.

இதையே வெண்பாம்'ல சொல்லப் பார்க்கிறேன்:


வஸ்தாதும் பிஸ்கோத்தே வன்மைமிகு காலத்தில்
பிஸ்கோத்தே பிஸ்தான்னா லவ்வு


146. ---எங்க அண்ணன் க்ளார்க்ஸ் டேபிள் கேட்டுச்சு.
---அப்பிடின்னா.. அப்பிடி ஒரு டேபிள் எங்க வீட்ல இல்லையே..
---லாகிர்தம் புக் இருக்கா.. அதுதான்..
--- அதுவா இருக்கே.. இந்தா.. ( ஙே)
--‪#‎எட்டாம்_வகுப்பிலேயே_பல்பு_வாங்கியோர்_சங்கம்‬.

147. யார் சொல்வதையும் காது கொடுத்து ஒருவர் கேட்காவிட்டால் அவர் சொல்வதைக் கேட்க கடைசியில் யாரும் மிஞ்ச மாட்டார்கள்.

148. மழை நூலைப் பிரித்து விளையாடுகிறது காற்று.
நிறுத்தி வைக்கப்பட்ட இடத்திலிருந்து கிளம்பி நாளை மழையோடு மழையாய் ஹுசைன் சாகரில் கரைந்து விட
ஆயத்தமாயிருக்கிறார் விநாயகர். சாய் குடித்தபடி காத்துக்கொண்டிருக்கிறார்கள் வாத்தியமிசைத்து நடனமாடி இரவை உடைப்பவர்கள். பழக்கமில்லாத ஒவ்வொன்றும் பழக்கப்பட்டதாகி விடுகின்றது. ஒவ்வொரு ஊருக்கும் நாம் புதியவர்களாகிவிடுகிறோம் ஆண்டொன்று போனால் வயதொன்று ஆனாலும் . அறியாதவர்களின் விழி விரியும்போது நம் முகங்களும் புதிய முகங்களாய் மாறிவிடுகின்றன. நாமும் காத்திருக்கிறோம் விநாயகரைப் போல்.

149.அட அப்ரெண்டீசுகளா. 2013 , 2009 ல வந்த போஸ்ட் எல்லாம் கமெண்ட் போட்டு நோட்டிஃபிகேஷன் வருது.நீங்கள்ளாம் இத்தன நாளா தூங்கிட்டுருந்தீங்களா.


#‎டாக்_புண்ணியவான்களே_எத்தனைபேரு_கிளம்பியிருக்கீங்க__
ரிலீஸ்_ஆகி_ஆகி_கைவலிக்குது‬.

150. தமிழே தெரியாத நம் நண்பர் லிஸ்டில் இல்லாத சிலர் நம் தமிழ்ப் பதிவை லைக் பண்ணும்போது தோணுது .. மொழிபெயர்த்துப் படிச்சு லைக் போடுறாங்களோ என்னா ஒரு தமிழ்ப் பற்று.. அடடா.. !!!

151. டின் டின், ஆஸ்ட்ரிக்ஸ், ஹாரி பாட்டர், வேதாளர், ரிப்கெர்பி, சிஸ்கோ பாஞ்சோ,இரும்புக்கை மாயாவி, லேடி மாடஸ்தி, மாண்ரெக் லொதார், ஜானி,
இவங்க புத்தகம் எல்லாம் & பாப்பா மலர், பாலமித்ரா, அம்புலி மாமா, கோகுலம். இதெல்லாமும் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சது மலர் அடிக்க வராதீங்க.

152. மனசைக் கொடுமைப்படுத்த எத்தனை வழி வைத்திருக்கிறோம். அதில் நான் யார் எதைச் சார்ந்திருக்கிறேன். என் பெருமிதம் என்ன என்ற இசைகேடு எண்ணமும் பங்கு வகிக்கிறது.

153. கற்பிதப் பெருமைகள் கர்ணனின் கவசமாய்ப் பொருந்தி இருக்கின்றன. ப்ரபஞ்சத்துடன் கலந்து கிடக்கிறது ஆன்ம நிர்வாணம். மரண பர்யந்தம் உரிக்க இயலா உடையுடன் போராடிக்கொண்டிருக்கிறது உடல்.

154. மதம் பீடித்து மடிந்து கிடக்கிறது சாதீ. ஒட்டிக்கொண்டிராத ஒன்றின்மேல் பற்றுதலாய் மொய்த்துக்கொண்டிருக்கிறது மன ஈ.

155. பட்டாம்பூச்சிகள் பறந்தபின்னும் பூக்களின் வெளியில் சிதறிக்கிடக்கின்றன நிறங்கள். மகரந்தமெடுத்த கால்களில் தொற்றிச் செல்கின்றன தேன் துளிகள். பறக்குமுன் சிதறிய முன் மகரந்தங்களால் சூலுற்றுக் குவிகிறது பூ. இரவின் ரகசியத்தில் எங்கோ சிறகடித்துக்கொண்டிருக்கிறது ஏதோ ஒரு பட்டாம் பூச்சியும் நாணமுற்றுக் கவிழ்கிறது ஏதோ ஒரு பூவும்.

156.நிறைய விஷயங்களில் நாம ஞானத் தெளிவோட இருக்கதா நாமே நினைச்சுக்குறோம். விஷயம் வீர்யமா தாக்கக்கூட வேண்டாம். வெளிப்பட்டாலே போதும் நாம் எவ்வளவு அஞ்ஞானியா பாசம் வச்சிருக்கோம்னு புரியும்.
‪#‎ஞானம்_பிறக்காத_கதை‬.

157. ஃபேஸ்புக் மட்டும் இல்லைன்னா வாழ்கை போரடிச்சுக்கிட்டுத்தான் இருந்திருக்கும்.
அப்பப்ப இங்கேயும் எரிச்சல் வரத்தான் செய்யுது.
ஆயிரம் இருந்தும்..
ஐ லவ் யூ ஃபேஸ் புக்.

158. தலைக்கு மேலே எப்பவும் சில நல்ல தேவதைகள் சுற்றிக்கொண்டிருக்கும் என்பது உண்மைதான் போல. #FEELING BLESSED. :)

159. வார்த்தைகள் ஸ்தம்பித்த
மௌன உரையாடல்
தொடர்ந்து செல்கிறது
தன்னைத் தான் விடுவித்து
நாட்காட்டி திசைகாட்டி இன்றி
கனத்துச் சோம்பியிருக்கும்
கரடியைத் தூக்கிப் பறக்கும்
பட்டாம்பூச்சியின் பின்.


160.
"I" படத்துக்கு கமல் ஏன் வரல தெரியுமா.
.
.
ஏன்னா
.
..அர்னால்டா வந்ததே அவர்தானாம் ! :)

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும். 

31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.




3 கருத்துகள்:

  1. அனைத்தும் அருமை...

    நல்ல தேவதைகள் மேல் அப்படி தான்... சுற்றாமலா இருக்கும்...? வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அஹா மிக்க நன்றி தனபாலன் சகோ. !!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...