எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சிந்தனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிந்தனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 ஜூலை, 2016

2065 ம் ஆறு லட்சமும். !!!

841.ஸ்டேடஸை லைக் பண்ணி போடுறோமோ இல்லையோ லைக்ஸை லைக் பண்ணிப் போடுறதில்லை.

#மெக்கானிக்கல்_லைக்.

842. நமது லைக்ஸெல்லாமுமே நமது லைக்ஸில்லை.

#சிச்சுவேஷன்_லைக்ஸ்

843. தர்க்கரீதியா, கொள்கை ரீதியா, வேதாந்த ரீதியா சித்தாந்தரீதியா விருப்பப்பட்டு எப்பவுமே லைக்ஸ் போடுறதில்லை.

#நட்புரீதி_லைக்ஸ்.

844. என்ன விட்டுட்டு சாப்பிட்டதாலதான் வவுத்துவலின்னு சந்தோஷப்படும் பிள்ளை நட்புகளை என்ன செய்வது ? ப்ளாக் ஃபாரெஸ்ட், ரெட் வெல்வெட்னு கேக் ஃபோட்டோ போட்டு இன்னும் கடுப்பேத்துறதுதான் சரி :P

845. மாஃபியாவா..நோ நோ.. என் ஃப்ரெண்ட்ஸ்தான் போனா போகுதுன்னு கொஞ்சம் லைக்ஸ் போடுறாங்க. அதையும் கெடுத்திடுவாங்க போல இருக்கே.

846.அடையாளங்களை மறைக்க/மறுக்க விரும்புகிறோமோ நாம்...# சில சமயங்களில்..

புதன், 6 ஜூலை, 2016

சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

801. ஒரு சில ஃபேக் ஐடிக்கு ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களோ இல்லையோ ஃபாலோயர்ஸ் இருக்காங்க. !!!  :)

802. சில விஷயங்கள் சாண்ட்விச் மாதிரி, மனசுக்குத்தான் அசல் ருசி புரிபடும்.

803. எதையாவது படிச்சி சம்பந்தா சம்பந்தமில்லாம நாம ஏன் இங்க வந்து மண்டைய ஒடைச்சிக்கிறோம்னு சமயத்துல புரில. பட் புடிச்சிருக்கு.

804.  விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்பே முன்பே..
.
.கண்ணெதுக்காலயே இருக்கேன்.. ஏன் கஷ்டப்படுறே..
..

ஹிஹி சும்மா பாட்டு பாடினேன்..


805. உங்க கிராமத்து தெய்வங்கள், குல தெய்வங்கள் சிறப்புப் பற்றி சொல்லுங்க.. மக்காஸ்.



806. விலகி நின்று பார்க்கும்போது நமக்கு நாமே அந்நியமாகத் தோன்றுகிறோம்.

807. காம்பழகா
மொட்டழகா
கண்விரிக்கும் சூரியன்முன்
நாணிக் கவிழ்கிறது
புதிதாய்ப் பூத்த செடி.

வெள்ளி, 24 ஜூன், 2016

99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.

781. X Y Z AND ZIG ZAG AA ORU ROAD .. PERU DOCTOR MOORTHY SALAI. EAST WEST NORTH SOUTH ELLA PAKKAMUM TWIST..AND TURNINGS..

782. ethai athigam nesikiromoy athai athgam verukirom.. ethai athigam verukiromoy atheiyee athigamayum nesikirom.. ESK ithu

783.விட்டு விடுதலையாகி அந்தச் சிட்டுக் குருவியைப் போலே...பறக்கணும் பறக்கணும்..
>
>
ஃபேஸ்புக்லேருந்து..

784. விதம் விதமான கீரைகள். முளைக்கீரை, அது போக தண்டுக்கீரை,அரைக்கீரை, லச்சகெட்ட கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, பாலக், பசலை, கருவேப்பிலை, புதினா, கொத்துமல்லி, முள்ளங்கிக் கீரை, பார்ஸ்லி, சீலரி, வெங்காயத்தாள், பருப்புக் கீரை, வல்லாரை,கோங்குரா,கடுகுக்கீரை, சோம்புக் கீரை,முடக்கத்தான், முள்ளுமுருங்கை, முசுமுசுக்கை, தூதுவளை , கரிசலாங்கண்ணி, கையாந்தரை, கீழாநெல்லி, என்று விதம் விதமான கீரைகள். பச்சைத் தண்ணியா பார்த்ததுமே சாப்பிடவேண்டும்போல் இருந்தன.

#சந்தை.

785. நலமா இருக்கீங்களா மக்காஸ்..

எப்பவும் அவசரம்தான்.

சில நாள் கழித்து மீண்டும் சந்திப்போம்.. -cag pride.

786. துக்கத்தை
இரவு அதிகமாக்குகிறது.
தூக்கம் தொலைத்துவிடுகிறது.

‪#‎தூங்குமூஞ்சி‬

787.  சந்தோஷமா இருந்தா ஒரு ஸ்வீட் சாப்பிடணும். ரொம்ப சந்தோஷமாயிட்டா ஒவ்வொன்னிலிருந்தும் ஒன்னு. :) ரொம்ப கோவமாயிட்டா டப்பாவோட காலி பண்ணிடனும். :)

‪#‎SUGAR_CRUSH‬

சனி, 30 ஏப்ரல், 2016

மாயக் குடுவையும் மனமீனும்.

721. காதலர்களின் கரங்கள் பிரிவதேயில்லை
அவர்களின் காந்தப் பார்வைaும்.
நூற்றாண்டுகளாய் நிலைத்தே இருக்கின்றன
கண்காட்சியில் கண்ட ஒரு ஓவியத்தில்.

722. திரிவேணி :-

ஒரு பூவைபோல
உன்னைப் பிரிகின்றேன்.
உன் காலடிமண்ணை முத்தமிட்டபடி.

கம்பீரச் செடியாய் நின்றிருக்கிறாய்
உதிர்ந்த கண்ணிகள்
எண்ணிக் கொண்டு.
.
உன்னடியைச் சுற்றிலும்
என்னைப் போன்ற பூக்கள் கண்டு
நானும் உரமாகிறேன்.

அடுத்து ஒரு பூஜென்மமிருந்தால்
சந்திப்போமெனச்செல்கின்றன
மகரந்தச்சேர்க்கை வண்டுகள்.


723. எத்தகு விதைகளும்
முளைப்பதில்லை
ஒரு மரத்தை வெட்டிய இடத்தில்.

724. மொழிகளை விட்டுப் பிரிவது
எளிதானதல்ல
அதைவிடத் துயரம்
மொழிகளற்ற
விழிகளைப் பிரிவது.

725. விடிகிறது ஒரு காலை
பூக்கின்றன உன் நினைவுகள்;
ஒளிவட்டமிடுகிறது மகிழ்ச்சி
தலையைச்சுற்றி வெய்யிலைப் போல.

திங்கள், 21 டிசம்பர், 2015

ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.

 581.தானாடாவிட்டாலும் தசையாடுகிறது., நட்புலகத்திலும்.

582.என்னோடு இருப்பவர்கள் என்னானார்களோ தெரில. நான் மட்டும் சேஃபா இருக்கிறேன்னு முகநூலில் குறிப்பது அபத்தமானதுன்னு ஸ்டேடஸ் போட்டிருந்தார் ஒரு நண்பர்.

///உங்களைத் தேடும் மற்றவர்களுக்காகத்தான். நிம்மதியின்மை சூழ இருப்பவர்கள் தன்னோடு தொடர்புடையவற்றைத்தானே தேடுவார்கள் ஒரு பற்றுக் கோடாக அப்பாடா நிம்மதி என்று. தனக்குத் தெரியாதவர்களும் நலமுடன் இருக்கவேண்டும் என்பது பிரபஞ்சக் காதல். அது சித்தித்தாலும் முதல் தேடல் தன்வீடு தன் மக்கள் தன் மனைவி தன் “நட்பு” இதுதானே.///

583.கதறிக் கதறிக் கொட்டுன மழைக்கு வணக்கம்
பதறிப் பதறிக் கேட்ட மார்க்குத் தம்பிக்கு வணக்கம்
சிதறிச் சிதறிக் கிடந்த சென்னையச் சேர்த்த வெள்ளத்துக்கு வணக்கம்
கதறாமப் பதறாமச் சிதறாம ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களுக்கும் வணக்கம்.

#நெம்பப்_பிடிச்சவங்கள்ளாம்கூடப்_பிடிக்காமப்_போயிடும்போல
_ஆக்கின_இயற்கைக்கும்_வணக்கம்.

584.அழகில் அன்பிருக்கலாம். ஆனால் அன்பில் அழகு பொங்கி வழிகிறது.


585. சென்னை கடலூர் மக்காஸ் நலமா..

586. பெய்த பெருமழையில் எழுதிக் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச பதிவர்களையும் காணோம் . ஹ்ம்ம்

587. எழுத்தில் ஒருவிதமாகவும் பேச்சில் ஒருவிதமாகவும் நிஜத்தில் ஒரு விதமாகவும் வெளிப்படுகிறோம். நாம்  முப்பரிமாண வடிவங்கள் என்பது உண்மைதான். ! :)

#3D.

வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

541. வெள்ளாட்டுக்குட்டிகளாய்
மேய்கின்றன மேகங்கள்.


துணைக்கு மேய்கிறது
மஞ்சள் வெய்யிலும். 


ஈரவால் குட்டியாய்
கொறிக்கிறது விழுதுகளை ஊதக்காற்றும்.


மழைக்கோல் நனைக்கத்துவங்க
கிடைக்குள் அடங்குகின்றன வானவில்லாய்.


542. At Jaslok hospital --Mumbai..-- left knee contusion.. enjoying the pain

543. தங்க நிற வெளிச்சம்
தூவுகிறது சாலை.
சிவப்பில் நிறுத்தப்பட்ட
வாகனம் காத்திருக்கிறது
பச்சையின் ஆமோதிப்புக்காய்.
சீறலாய்ப் பச்சை உமிழ்ந்து
நேர்க்கோடாய்க் காட்டுகிறது
பயணத்தின் பாதையை.
திசை தெரிந்தும்
விசை மீறிப்பறக்கிறது
கைமீறிப்போன வண்டி.
பக்கத்து வண்டிகளைப்
பக்கத்துணையெனக்
கற்பிதம்கொண்டு
ஒளியின் வழிகாட்டலில்
கட கடப்புடன்
ஒவ்வொரு மஞ்சள் வெளியிலும்
காத்திருந்து பெருமூச்சுடன்
அடைகிறது தனக்கான இடத்தை.


544. Thenammai Lakshmanan
Lives in Chennai
1,913 followers|13,368,861 views
-- G+ la varra intha views unmaithana.. ?

அஹா இப்போ

நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.

521. ரெய்ச்சூரின் அருகில் உள்ள கர்நாடக கிராமத்தில் நேற்று விவசாயிகள் பவர் கட்டை எதிர்த்து ஸ்ட்ரைக்.. நாம் போக வேண்டிய ஊருக்கு 40 கிலோமீட்டர் சுத்திப் போக வேண்டி வந்தது.

கிராமங்களை ஊடுருவிப் போகும்போது வருத்தமாக இருந்தது. பஞ்சு பயிரிடப்பட்ட நிலங்களைக் கடந்தோம். மோசமான குடிசையாகக் கூட இல்லை அவர்களின் வீடுகள். எங்கே வசிக்கிறார்கள்.. ஹ்ம்ம்ம்
முன்பு கும்பகோணத்தில் இருந்தபோது அங்கே டிசம்பரில் குறுவைப் பயிருக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் கஷ்டப்பட்டார்கள்.

மின்சாரமும் தண்ணீரும் வழங்கப்பட்டால்தான் விவசாயம் செய்ய முடியும். விவசாயி வாழ்க்கை செழிக்கும் என்று சொல்லி கார் ட்ரைவர் தெலுங்கில் & ஹிந்தியில் வருத்தப்பட்டார்.

இன்னும் இரு தினங்களில் இங்கே விவசாயிகள் தர்ணா செய்யப் போறாங்க. கிட்டத்தட்ட 3 மாதங்களில் 300 விவசாயிகள் தற்கொலை. தீபாவளி அன்னிக்கு 13 விவசாயிகள் தற்கொலை.. எங்கே போயிட்டு இருக்கோம் நாம்.

நதி நீரையும் மின்சாரம் வழங்குவதையும் மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் வைக்கணும்.. மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கான மின் சலுகைகள் வழங்கவும் மற்ற சலுகைகள் வழங்கவும் உடனடியா முடிவு எடுக்கப் படணும்..இதைத்தான் கோரிக்கையா சொல்ல முடியுது.

522. நோக்கு வர்மம் பொல்லாதது...

அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.

481.யாருக்கு ஃபோன் செய்தாலும் போகலையே. சென்னை மக்களே நலமா இருக்கீங்களா.. ?

482. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாயே ஞானத்தங்கமே.. :))

483. எந்த ப்ரத்யேக இடமும் நமதில்லை..

484. ஆண் அரசாண்டால் எல்லாரும் பெரியவருக்குத்தெரியும் என சும்மா இருக்கிறார்கள். பெண் அரசாண்டால் சாமான்யன் கூட ராஜகுருவாய் அட்வைஸி ஆகிவிடுகிறான்.. இது இந்தியக் குடும்ப மனோபாவம் . எல்லாவற்றையும் பெண் தன்னைக் கேட்டு செயல்படவேண்டும் என்பது..

485. அம்மா பாசம் அய்யா பாசம் என்பதெல்லாம் இல்லை.. பிடித்தவர்கள் செய்யும் எல்லா செயலும் உவப்பானதாய் இருப்பதில்லை. பிடிக்காதவர் செய்யும் எல்லா செயலும் வெறுப்பதுமில்லை..

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

461 . திருமண நாளில் காலையில் பாடிய ஒரு ஒலி பெருக்கிப் பாடல்..பல வருடம் கழித்துக் கேட்கையிலும் ஜில்லென்று..:))
https://www.youtube.com/watch?v=tYzLPhMUTgE

462. LAWN MOVER MAN.. EVERYTIME ITS NICE TO WATCH BROSNAN'S SHINING EYES, GLASSES, HAIRSTYLE RATHER THAN HIS ACTING..:)))))

463. 1.Go to Google. 2. Type "Top 50 women on internet" 3. Click on the first link. 4. Look at seventh Rank. 5. Like before u die laughing !!

464. சில ஆன்மீகவாதிகளின் பதில்களைப் படித்தால் அகங்காரவாதிகள் போலத் தோன்றுகிறதே. !

465. Spraysssssssssssssssssssssss.....பூச்சிக்கு இல்ல.. ஹிஹி இதெல்லாம் போன 3 மாசம் வீட்டுல இருக்குற எல்லாரும்தான் உபயோகப்படுத்தினது.. :)) சும்மா அப்லோட் செய்தேன்..;)))))

466. மிக எளிமையானது என் உலகம். .. சில பாட்டுக்களோடு.. சந்தோஷமானதாய்.. வாழ்க பாடகர்கள்., பாடலாசிரியர்கள்., இசையமைப்பாளர்கள்., நடிகர்கள்., இயக்குனர்கள்.. விஷுவல் ட்ரீட்..:))

467. கமல்தான் நடிகர். கேபிதான் டைரக்டர்., ஜெயகாந்தன்., சுஜாதாதான் எழுத்தாளர்.. என சொல்லும் பெட்டர் ஹாஃபுக்கு என்ன பதில் சொல்லலாம்.. ப்ளீஸ் கொஞ்சம் சஜஷன் கொடுங்க மக்காஸ்

சனி, 19 டிசம்பர், 2015

தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

501. சத்சங்கத்வே நித்சங்கத்வம்
நித்சங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஷ்சலசித்தம்
நிஷ்சல சித்தே ஜீவன் முக்தி..!!!

502. படகுகளும் கார்களும் சரிந்து ஓடியது கண்கொண்டு பார்க்க முடியவில்லை.. மண் சரிவில் எத்தனை மனிதரோ ..:(((

503. It's dificult... To wait for someone..
It's dificult to forget someone...
But most dificult thing is to decide
Whether to wait Or to forget...
" lovely.. Good .. Morning...Chellvagalaaa.."
------thx Rajikkaaaaaaaaaaaaaaaa

504. ஆராய்ச்சி.. ஆராய்க..!!!

505. அணைப்பது போலே கரமிருக்கும்.. அங்கே கொடுவாள் மறைந்திருக்கும்.

506. LOOK WITHIN...

507. சமையலும் மையலும்
கலந்து தரும் தையலே..
நீ எங்கள் வாழ்வில்
நிறைவான புதையலே..
மன்னன் மனராணியே
மயக்கும் மது தேனீயே.
அன்னமிட்ட தங்ககைக்கு
அடுக்கட்டுமா வளையலே..

செவ்வாய், 15 டிசம்பர், 2015

கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.

441. சிம் கார்டு சொல்லிக்கிட்டா என்ன செய்றது..? செல்லிலிருந்து கழட்டிட்டு திரும்பப் போட்டாலும் நோக்கியான்ன்னே நிக்குதே.. any idea plz makkalee.. என்னவோ எந்த நம்பரும் ஞாபக வேற இல்லை.:((

442. பழைய சினிமாக்களில் கச்சையைப் போல பயமுறுத்துகிறது இன்றைய இளைஞர்களின் கால்சராய்.. எப்போ ஃபேஷன் மாறுமோ..

443. PLZ RADIATE POSITIVE THINKING AND POSITIE ENERGY..WHILE CRITICIZING OTHERS DONT USE THE WORDS.. அவன், அவள், அது..GIVE RESPECT TO ELDERS.

444. SITTING ON THE PILLIAN OF YAMAHA SPACER IS LIKE SITTING IN KAROREPATHY STOOL..

445. பியர்ஸ் இருக்கு., பொண்ணுதான் இல்லை.. கன்னத்தோடு குட்டிக் கன்னமிழைச்சு சோப்புநுரை தேய்க்க...ஹ்ம்ம்ம்

செவ்வாய், 8 டிசம்பர், 2015

நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

561. தேவதை தெய்வம்
முயல்குட்டி கோழிக்குஞ்சு
பூம்பாவை தேன்சோலையவள்


தேவன் சாமி
கந்தர்வன் காதலன்
அன்பன் கருணைக்காரனவன்



அவள்
யட்சிணியாகும்போது யட்சனாக
காளியாகும்போது கருப்பனாக,
பூதமாகும்போது பேய்பிசாசாக
வேட்டைக்காளியாகும்போது சுடலைமாடனாக
முருதாடியாகும்போது ராட்சசனாக
ரூபம் எடுக்கிறான் அவனும்.


ராட்சசம் ஆடிப் போரிட்டுமுடிந்து
சாந்தமாகும் இருவரிடத்தும்
அதே ராட்சச வேகத்தில்
தெய்வமும் புகுந்துகொள்கிறது .

562. ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா..
,
,
,
,எதுக்குன்னு புரியல எல்லாரும் இன்னிக்கு ஹிந்தி பத்தி பேசி இருக்காங்க.. நானும் ஹிந்தி பேசிட்டேன். 

563. எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்டு ரெண்டு பேரை வேற கோத்து விட்டுருக்கு எஃப் பி... யாருடாது பார்த்தேன். ஆடிக்கொருக்கா அமாசிக்கு ஒருக்கா லைக் போடுறவங்க. நாம கோக்காம அதுவே நமக்கு க்ளோஸ் ஃப்ரெண்டுன்னு கோக்க முடியுமா தெரில.

திங்கள், 30 நவம்பர், 2015

இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

421. அஹா எனக்கு இன்னிக்கு ஃபேஸ்புக் குட்மார்னிங் சொல்லிருக்கு.. மெய்யாலுமே.

////GOOD MORNING, THENAMMAI !
THANKS FOR BEING HERE - ENJOY FACEBOOK TODAY.////
உங்க யாருக்காவது வந்திருக்கா..?!!!!!!

422.கோவை இலக்கிய சந்திப்பில் அகிலா எனது நூலினைப் பற்றி மதிப்புரை செய்தபோதுதான் உனது பெயரைத் தெரிந்தேன். நீ இருக்கும்வரை உனக்கு ஒரேயொரு பிறந்தநாள் வாழ்த்தைத்தான் அளித்திருக்கிறேன் நண்பா.

இருப்பதும் இறப்பதும் மனிதர் இயல்பென்றாலும் கலம்பகம் போல் மரணத்தையும் அறமாகப் பாடிச் சென்றவன் நீ. நாணற்காடன் சரவணன் எழுதி போல் இன்று நீ நாளை நாங்கள் என்றாலும் பூர்த்தி செய்யாத உன்னிரு கவிதைகளைக் காணும் துணிவற்றிருக்கிறோம்.


பெயரெழுத்தில் பூக்களைத் தூவிச் சென்றவன் நீ ஒருவனாகத்தான் இருக்கமுடியும். என்ன சொல்லித் தேற்றுவது நீ விட்டுச் சென்ற மலர்க்கொடியை. ஹ்ம்ம். 


ஜான் சுந்தரின் வார்த்தைகளை இங்கே பகிர்ந்திருக்கிறேன். 
/////வணக்கம்,
கவிஞர் ப.தியாகு அவர்களின் மனைவி திருமதி.மலர்க்கொடி அவர்களது வங்கிக் கணக்கு எண்ணை தியாகுவின் பெற்றோருடைய அனுமதியைப் பெற்றுக் கொண்டு பதிவிடுகிறேன். குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பயனுள்ள வகையில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டுமென விரும்புகிறேன். பெரிய மனதோடு நீங்கள் செய்யப் போகும் உதவிக்காக முன் கூட்டியே உங்கள் திசை நோக்கி கை கூப்புகிறேன். நன்றி!


NAME : MALARKODI
W/O THIYAGARAJ.P
A/C NO : 5480101001056
CANARA BANK- COIMBATORE KOVAIPUDUR BRANCH
IFSC CODE : CNRB0005480
MICR CODE :641015053
முகவரி:
11/20 பழனியப்ப நாயக்கர் தெரு
குளத்துப் பாளையம்
கோயம்புத்தூர்-641042 ///

423. வான்நிலா நிலா அல்ல.. பாடலின் கடைசி வரிகளில் சிவச்சந்திரன் பின்னோக்கிப் படிகளின் மேலே ஏறுவார்..

#பின்னோக்கிப் போதல் இனிமையானது. சமவயதுக்காரர்களுடன் இணைந்து கொள்ளுதலும்..

 424. ஒரு கப் காஃபி.. தெளிவை உண்டாக்குதோ இல்லையோ ஆசுவாசத்தை உண்டாக்குது.. HAVE A NICE DAY MAKKASS.

425. பிரசவ வைராக்கியம், மயான வைராக்கியம். இதெல்லாம் கூட தோத்துப் போயிடும்போல இருக்கு ஃபேஸ்புக் வைராக்கியத்துக்கு முன்னே. !

அரை நாள் கூட விட்டுட்டு இருக்க முடிலயே. அப்ப அப்ப லாகின்.. ஐ லவ் யூ ஃபேஸ்புக். :) :)

#திட்டணும்னா ரீஜண்டா திட்டுங்கப்பா.

புதன், 18 நவம்பர், 2015

எருக்கஞ்செடியும் வெற்றிலைக்கொடியும்.

381. கற்பக விநாயகர் நகர். இது ஒரு ஏரியா பேர். அங்கே இருக்க வீடுகள்ல எல்லா இடத்திலும் கற்பக விநாயகர். வாசல்ல, கேட்ல, நிலையில ஏன் க்ரில்லுல கூட..  :) 
 
கற்பக மூர்த்தி கற்பக மூர்த்தி கற்பக மூர்த்தி சரணம்.


382. கவர்ன்மெண்டை எதிர்பார்க்காம சொந்த செலவுல கான்க்ரீட் ரோடு போட்டுருக்காங்க.

டேமேஜே ஆகாது.. இத வசதி இருக்க எல்லாரும் ஃபாலோ பண்ணலாம். பெட்டிஷன் மேல பெட்டிஷன் போட்டு கெஞ்சிக்கிட்டு இருக்காம.. :)
 
‪#‎முட்டுசந்து_சொகுசு_குடியிருப்புவாசிகள்‬


383.ஏதோ லாரி புகுந்து போற மாதிரி ஒரு சத்தம்..

பதறி ஓரங்கட்டினா..

சுவேகா சாம்ராட்டுனு ஒரு வண்டிதான் போச்சு பக்கத்துல.:)

இதுக்கெல்லாம் ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்குதா என்ன..


384. பால்கனிங்கிறத நம்ம மக்கள் பழைய சாமான் போடுற இடம்னு வைச்சிருக்காங்க. அதுவும் வீட்டோட அங்கம் இல்லையா.

அழகான ஃப்ளாட்டுகளோட எண்ட்ரன்ஸ்ல இருக்க எல்லா முதல் வீட்டு பால்கனியும் கழிவை குப்பையை அடைச்சுவச்சு இருக்கு . திருஷ்டி பரிகாரமே தேவையில்லை. .


385. வெள்ளைக் கார்டு வைச்சிருக்கவங்களுக்கு ஏன் 5 கிலோ ஜீனி.

#சுகர்_அதிகமாகட்டும்னா :P


386 சட் சட்னு எதுக்கெடுத்தாலும் கோப வயப்படுறவங்க காதல் வயப்படுறவங்களுக்கு கவிதை எழுதுறது தீ மாதிரி.. பொறி பறக்கும்.

புதன், 11 நவம்பர், 2015

தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.

361. வயதாக வயதாக சிலரின் ரசனைத் திறன் மட்டரகமாக ( வாசிப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இணையம் ) மாறிவருவது குறித்து பேரதிர்ச்சியாக இருக்கிறது. இந்த மூன்றாந்தர பாடாவதிகளை வெளியிடுபவர்கள் & ரசிப்பவர்கள் என்ன மாதிரியான மனிதர்கள்.?
அவர்களுக்குள்ளே ‪#‎தனி_ஒருவன்‬. ஹ்ம்ம்.

362. வறுமையிலும் கொடுமை
,
,
முதுமையில் தனிமை.

363. வீட்டுக்குள்ளே உக்கார்ந்துகிட்டு வீட்டைத் திருடுவது எப்பிடி
தங்கச்சி வீட்டுக்காரரை ஆள் வைத்து அடிப்பது எப்படி.
சொத்துக்காகவும் பணத்துக்காகவும் கொலை கூடச் செய்யலாம் எனச் சொல்லும், மிக மிக அழகான கொடூர வில்லிகள்
மிடிலப்பா..
சின்னத்திரைக்கும் தணிக்கை அவசியம்.

364. மீதியை நம் எண்ணங்களில் உறையவிட்டு பாதி உரையாடலில் விளையாட ஓடிவிடும் குழந்தைகள் கொள்ளை அழகு :)

புதன், 9 செப்டம்பர், 2015

பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.

341.பணத்தை அடித்து உழைப்பை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறார்கள். ஆனால் முகஸ்துதியை வீசி எதையுமே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் வித்தைக்காரர்களும் இருக்கிறார்கள்.

‪#‎உழைத்துக்_களைத்தவர்கள்_ஐ_மீன்_நம்மைப்போலே_ஏமாளி_எவனுமில்லே‬

342. சரக்கில்லாத முகநூல் சரக்கே கிடையாது போலிருக்கே. ஓ மை காட். ஒரே சரக்குதான்..


343.தானே சோகத்தோடு அமர்ந்து தோசை ஊத்தித் தின்னும் ஆத்தாவைப் பார்த்த ஒரு மகன் தாய்க்காக ஒரு க்ளோன் ஆத்தாவைக் கண்டுபிடிக்கிறார்.


சந்தோஷமாக ஆத்தாவிடம் ஓடி வந்து ”ஆத்தா ஆத்தா இனி நீங்க கடைசியா தனியா உக்கார்ந்து தோசை ஊத்தித் திங்க வேண்டாம். உங்களுக்கும் சுடச் சுட முருகல் தோசை ஊத்திக் கொடுக்க ஒரு க்ளோன் ஆத்தாவை உருவாக்கிட்டேன்.”

புதன், 29 ஜூலை, 2015

முகமூடிகளும் மனப்பூக்களும்.

321. கன்னியாகுமரியை நான் ஒரு ரயில் பயணத்தில் படித்தேன் . அவர் சொன்ன ஒரு விஷயம் ஆச்சர்யப்பட வைத்தது. பெண்ணை முழுமையாக யாருமே உணர்ந்ததில்லை., அவள் மனதின் அடி ஆழத்தை உணரவே முடியாது எல்லாவிதத்திலும் என்ற இடம் பிடித்தது. ஆனால் ஆரம்பம் ஏனோ கொஞ்சம் பிடிக்கல. சைக்கலாஜிக்கலா ஒரு ஆண் அதுவும் காதலன் , (கணவன் இல்லை ) இப்படியும் தன் காதலி பத்தி அவளுக்கு ஒரு சிதைவைச் சிந்திக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது. ஆனால் பல மனிதர்களின் இயல்பைப் பார்த்தா அது உண்மையான விஷயமாகவும் இருக்கலாம் என  இப்பத் தோணுது.

322.  இனி எதுவும் செய்து திருத்திவிடமுடியாது அம்முகத்தை.

தனக்கு மட்டுமே தெரிந்த கோணல், தனக்கு மட்டுமே தெரியாத அழுக்கு,பிறருக்குத் தெரியும் இனிப்பும் கசப்பும் பூசிக்கிடக்க பலவருடங்களாக தேய்த்துக் கழுவிக் கழுவிச் சுத்தம் செய்த அம்முகத்தில் சுருக்கங்கள் சேரத்துவங்கி இருக்கிறது வயோதிகத்தின் வலியாய்.

திருத்தமுடிந்த சிலவும் திருத்தமுடியாத பலவும் நிறைவேறாத கனவுகளும் எதிர்பாராத நிகழ்வுகளும் அசைக்க நதியில் மிதக்கும் சருகாய் காயத்துவங்கி இருக்கிறது அவ்வுடல்.

மீட்டெடுக்க முடிந்த சொச்ச ஞாபகங்களை அசைபோட்டுக்கொண்டிருக்கிறது அந்த மனம்.

வீட்டின் ஒரு பகுதி இளையோர் உலகமாயிருக்க
இன்னொரு பாகம் முதியோர் இல்லமாய் ஆகிக்கொண்டிருக்கிறது.

323. புதுக்கவிதைகளை எள்ளி நகையாடியவர்கள் இன்று பாராட்டுக் கட்டுரைகள் எழுதுகிறார்கள் :)
காலத்தின் கட்டாயம். :)

324. நடிகர்கள் பெருகிவிட்டார்கள் எல்லாத் துறையிலும்.

திங்கள், 22 ஜூன், 2015

ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்

281. சுகத்துல வாழ்த்தவும் சோகத்துல பங்கெடுத்துக்கவும் நமக்குன்னு மக்கள் இருக்காங்கன்னு முகநூல்ல பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு மக்காஸ் வாழ்க வளமுடன். :)

282. ஒரே ஒரு தரம் 250 லைக் எல்லாம் வந்ததும் see more,see more nu  க்ளிக் பண்ணிப் பார்க்க முடியலையே. 1000, 2000 லைக்ஸ் வாங்குறவங்க எல்லாம் பொறுமைசாலிதான். :)

283. ட்விட்டர்ல இன்னிக்கு 45 நோட்டிஃபிகேஷன் ஓ மை கடவுளே.. நன்றி மக்காஸ். நம்மள யாருமே படிக்கிறதில்லையோன்னு நினைச்சு சோகமா இருந்தேன். :)

284. எழுத்தாளரே இப்பவெல்லாம் நாளானா மதம் பத்திதான் எழுதுறாங்க. துறவிகள் என்ற நினைப்பில். :)

வியாழன், 18 ஜூன், 2015

அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

261. கண்ணுக்குக் கண் , பல்லுக்குப் பல் மாதிரி ஆயிடுது சில லைக்குக்கு லைக். :) மொய் லைக் ..:)

262. கசியும் புன்னகைக் கீற்றொன்று போதும் மனிதர்களைப் ப்ரகாசமாக்க.

263. கொஞ்சம் அக்கறை, கொஞ்சம் முயற்சி கூட எல்லாவற்றையும் சாதிக்கும்

264. நட்புடா நண்பேன் டா என்பதெல்லாம் சினிமாவில்தான். உரிய நேரத்தில் போடாத ஒற்றை லைக் முறித்துவிடுகிறது முகநூல் நட்புக் கிளையை.

265. சில கதைகள் கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள் படிக்கும்போதே அதன் தாக்கத்தில் மனச் சிக்கலுக்கு ஆளாகி விடுவோம்
போலிருக்கிறதே. சிறந்த எழுத்து என்பது என்ன..? இதுதானா. ?

266. think twice b4 sharing. _ எனக்கு சொல்லிக்கிட்டேன். :)

267. அப்போதைய பிள்ளைகளுக்கு பெரியவர்களிடம் பயம் இருந்தது.
இப்போதைய பெரியவர்களுக்குப் பிள்ளைகளிடம் பயம் இருக்கிறது.
ஆகக்கூடி இருக்கும் ஒரே விஷயம் பயம் மட்டுமே.

செவ்வாய், 2 ஜூன், 2015

மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

இன்னிக்கு தெலுங்கானாவுக்கு பர்த்டே. ஜெய் தெலுங்கானான்னு இங்கே சொல்லிட்டா எந்த ப்ராப்ளமும் இல்லை.. :) :) :) 

301. இன்னிக்குக் காலையிலதாங்க உங்களுக்கு ஃபோன் பண்ணனும்னு நினைச்சேன்.
.
ஒரு மூணு நாலு பேர் ரெண்டு நாளா நான் ஃபோன் பண்ணும்போது இப்பிடியே டயலாக் விடுறாங்க.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... நான் சாயங்காலம் ஃபோன் பண்றவரைக்கும் என்னதான் பண்ணாங்களோ.

302. சிலருக்கு அம்மாகிட்ட இருந்து ஃபோன் வந்திருக்கு. உங்களுக்கு வந்திச்சா..எனக்கும்தான் வந்திச்சு..
!
!எங்க அம்மாகிட்டயிருந்துங்க.