எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
17 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
17 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 ஜூலை, 2015

முகமூடிகளும் மனப்பூக்களும்.

321. கன்னியாகுமரியை நான் ஒரு ரயில் பயணத்தில் படித்தேன் . அவர் சொன்ன ஒரு விஷயம் ஆச்சர்யப்பட வைத்தது. பெண்ணை முழுமையாக யாருமே உணர்ந்ததில்லை., அவள் மனதின் அடி ஆழத்தை உணரவே முடியாது எல்லாவிதத்திலும் என்ற இடம் பிடித்தது. ஆனால் ஆரம்பம் ஏனோ கொஞ்சம் பிடிக்கல. சைக்கலாஜிக்கலா ஒரு ஆண் அதுவும் காதலன் , (கணவன் இல்லை ) இப்படியும் தன் காதலி பத்தி அவளுக்கு ஒரு சிதைவைச் சிந்திக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது. ஆனால் பல மனிதர்களின் இயல்பைப் பார்த்தா அது உண்மையான விஷயமாகவும் இருக்கலாம் என  இப்பத் தோணுது.

322.  இனி எதுவும் செய்து திருத்திவிடமுடியாது அம்முகத்தை.

தனக்கு மட்டுமே தெரிந்த கோணல், தனக்கு மட்டுமே தெரியாத அழுக்கு,பிறருக்குத் தெரியும் இனிப்பும் கசப்பும் பூசிக்கிடக்க பலவருடங்களாக தேய்த்துக் கழுவிக் கழுவிச் சுத்தம் செய்த அம்முகத்தில் சுருக்கங்கள் சேரத்துவங்கி இருக்கிறது வயோதிகத்தின் வலியாய்.

திருத்தமுடிந்த சிலவும் திருத்தமுடியாத பலவும் நிறைவேறாத கனவுகளும் எதிர்பாராத நிகழ்வுகளும் அசைக்க நதியில் மிதக்கும் சருகாய் காயத்துவங்கி இருக்கிறது அவ்வுடல்.

மீட்டெடுக்க முடிந்த சொச்ச ஞாபகங்களை அசைபோட்டுக்கொண்டிருக்கிறது அந்த மனம்.

வீட்டின் ஒரு பகுதி இளையோர் உலகமாயிருக்க
இன்னொரு பாகம் முதியோர் இல்லமாய் ஆகிக்கொண்டிருக்கிறது.

323. புதுக்கவிதைகளை எள்ளி நகையாடியவர்கள் இன்று பாராட்டுக் கட்டுரைகள் எழுதுகிறார்கள் :)
காலத்தின் கட்டாயம். :)

324. நடிகர்கள் பெருகிவிட்டார்கள் எல்லாத் துறையிலும்.

Related Posts Plugin for WordPress, Blogger...