எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 7 ஜனவரி, 2010

வாடகை புத்தகம்

பழைய நாட்குறிப்புகளைத்
திறக்கும் போதெல்லாம்
ஒரு பறவையின் இறக்கையாயும்
குட்டி போடும் மயில் தோகையாயும்
பாடம் செய்யப்பட்ட அரச இலையாயும்
நழுவி விழுகிறது உன் நினைவு...
நூலில் இங்க் வைத்து பக்கங்களில்
இழுத்து மகிழும் வினோத பிக்காஸோவாய்
அப்பிக்கிடக்கும் உன் நினைவுகள் ...

லெண்டிங்க் லைப்ரரி புத்தகங்களுடன்
உன் விரலையும் சேர்த்துத் தருவாய் ..
நான் தொடத் தகாத சயனடைப் போல்
பயந்து பெற்றுக்கொள்வேன்..
அழகாக வளைக்கப்பட்ட என்
நகங்கள் பட்டால் கூட புல்லுக்கு
வியர்த்தது போல புன்னகைப்பாய் ...
பூனையைப் போல பயந்து நானும்
புலியைப்போல சிலிர்த்து நீயும்...
தடம் மாற்றிவிடப் பட்ட
தண்டவாளங்களைப்போல
இரு வேறு திசையில் பிரிந்து ...
பால்பாய்ண்ட் .,ஜெல்பென் .,மைக்ரோபென்.,
யூனிபால் என்கிற காலத்தில் எப்படிப்
புரிந்து கொள்வார்கள் நம் கைகளைக்
கறையாக்கிய இங்க்கின் காயங்களை....

54 கருத்துகள்:

  1. இங்க்கின் காயங்களை ..
    அழகான பதிவு. தொடரவும்.

    பதிலளிநீக்கு
  2. கவிதை அருமை, குறிப்பாக

    //நூலில் இங்க் வைத்து பக்கங்களில்
    இழுத்து மகிழும் வினோத பிக்காஸோவாய்//

    ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  3. வெற்றிவேல் சொன்னது…
    one of the classic poems of ur collection//

    வழி மொழிகிறேன்..:)))

    பதிலளிநீக்கு
  4. நன்றி வெற்றிவேல் சார்

    உங்க இலவு காத்த கிளி என்ற இடுகையும் அருமை

    வைகோவை பற்றிய அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  5. உங்க வரவுக்கும் கருத்துக்கும் நன்றி டாக்டர் கருப்பும் சிவப்பும் பற்றிய கருத்துப் பதிவு அருமை டாக்டர் சொல்லமலே புரிய வைக்கும் உங்கள் உத்தி அருமை
    என் சின்ன மகனுக்கு ஏனோ கறுப்பு நிற உடைகள் மிக பிடிக்கும் ஏன் இவன் எல்லா சமயத்திலும் இதையே தேர்ந்து எடுக்கிறான் என நினைப்பேன் இதற்கு ஏதேனும் உளவியல் காரணம் இருக்கிறதா டாக்டர்

    ஏடிபஸ் காம்ப்ளக்ஸ் பற்றி என் கல்லூரிப் பருவத்தில் அறிந்தேன் எல்லாவற்றிற்கும் உங்கள் வலைத்தளத்கில் விடை இருக்கிறது டாக்டர்

    ஒரு நிகழ்வு ஒருவருக்கு எழுத்தாய் மாறுகிறது ஒருவருக்கு சேவை செய்யும் வாழ்க்கையாய் மாற்றுகிறது அருமையான பகிர்வு டாக்டர்

    பதிலளிநீக்கு
  6. //புரிந்து கொள்வார்கள் நம் கைகளைக்
    கறையாக்கிய இங்க்கின் காயங்களை..// :)

    பதிலளிநீக்கு
  7. விரல் மை எழுதிய காதல் லிபி

    விரல் மையினால் அரசுகளும் வீழ்த்தப்படும்

    விஜய்

    பதிலளிநீக்கு
  8. மையிடப்பட்ட மெய்
    இங்க்கு உரைத்ததும்
    உறைந்ததும்
    உண்மைதான்

    தேனம்(மை)...

    பதிலளிநீக்கு
  9. சொடுக்கி வலிக்கிறது,தேனு!

    கிரேட்!

    பதிலளிநீக்கு
  10. OLD IS GOLD தான். இதயத்தில் தூங்காமல் இருப்பது நினைவுகள் மட்டுமல்ல. இம்மாதிரியான கறைகளும் தான்

    பதிலளிநீக்கு
  11. புல்லுக்கு
    வியர்த்தது போல புன்னகைப்பாய் ...
    பூனையைப் போல பயந்து நானும்
    புலியைப்போல சிலிர்த்து நீயும்............யக்கோவ்., பின்னி பெடல் எடுத்துட்டீங்க. சூப்பர்.

    பதிலளிநீக்கு
  12. வண்ணாங்குறியின் சூட்சுமம் சொல்லும் புதிர் அடையாளம் ஒரு வம்சம்தோறும் தொடர்புடையது சமையத்தில் வீட்டின் முகங்களுடன் மையின் ரகசியங்கள் புறம் சார்ந்ததல்ல அகம் சார்ந்தது
    இந்த கவிதையின் சொல்லாத விடுபட்ட சொற்களைப் போல

    பதிலளிநீக்கு
  13. கவிதை நல்லாருக்கு. இன்னும் கொஞ்சம் சுருக்கமாக இருந்திருந்தால் தாக்கம் இன்னும் அதிகமாக இருந்திருக்குமோ.

    பதிலளிநீக்கு
  14. கரைக்டா சொன்ன மாதிரியே.. இந்த சின்னபுள்ளைக்கு புரியுற மாதிரி எழுதிட்டீங்க..

    நாம் இங்க் பேனாவை மட்டும் அல்ல.. பேனாவையே மிஸ் பண்றோம்!!

    பதிலளிநீக்கு
  15. எப்பூடிங்க தினமும் ஒரு கவிதை எழுத முடிகிறது..

    அருமையான சொல்லாடல்கள்.

    நல்லாயிருங்க.. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. என்னா கூட்டம் இங்க? எதாவது ரஜினி போட்டா வந்துருக்கா? இல்லயா பின்ன? என்னது ... கமெண்ட் போடறவங்களுக்கு 500 ரூவா தராங்களா? நானும் போட்டேன்.. எங்க போய் வாங்கனும்?

    பதிலளிநீக்கு
  17. //நூலில் இங்க் வைத்து பக்கங்களில்
    இழுத்து மகிழும் வினோத பிக்காஸோவாய்
    அப்பிக்கிடக்கும் உன் நினைவுகள்...//

    ரொம்ப பிடிச்சிருக்கு தேனக்கா :)

    பதிலளிநீக்கு
  18. எப்படிப்
    புரிந்து கொள்வார்கள் நம் கைகளைக்
    கறையாக்கிய இங்க்கின் காயங்களை....
    எழுத்துக்குத்தான் எத்தனை வலிமை!

    பதிலளிநீக்கு
  19. நூலில் இங்க் வைத்து பக்கங்களில்
    இழுத்து மகிழும் வினோத பிக்காஸோவாய்//

    இந்தவரிகள் அட்டகாசம்
    தேனம்மை

    பதிலளிநீக்கு
  20. வாவ். ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு, ஒவ்வொரு வரியும்.

    பதிலளிநீக்கு
  21. கடைசி இரண்டு வரிகளில் கிழிச்சி தொங்க விட்டு்டிங்க மேடம்...

    பதிலளிநீக்கு
  22. //திறக்கும் போதெல்லாம்
    ஒரு பறவையின் இறக்கையாயும்
    குட்டி போடும் மயில் தோகையாயும்
    பாடம் செய்யப்பட்ட அரச இலையாயும்
    நழுவி விழுகிறது உன் நினைவு...//

    எனக்கும் ஞாபகம் வந்திடிச்சு.

    எப்பிடித்தான் இவ்ளோ ஞாபகசக்தியோ தேனுவுக்கு !

    பதிலளிநீக்கு
  23. கன்னத்தில் முத்தமிட்டால் படம் மற்றும் தாணு பற்றிய பதிவு அருமை பட்டியன்

    பதிலளிநீக்கு
  24. நன்றி ஷங்கர்

    வாவ் ..அருமை ஷங்கர் எனக்கு மாட்டு பொங்கலன்று மாடுகளுக்கு பொங்கல் கொடுத்த ஞாபகமெல்லாம் வருது

    பதிலளிநீக்கு
  25. நன்றி ஸ்டார்ஜன் ஊர் பேர் விளக்கமெல்லாம் அருமை

    பதிலளிநீக்கு
  26. நன்றி அஷோக் புத்தக வெளியீட்டுக்கு சென்று வந்து ஆளாளுக்கு இடுகை போட்டு கலக்குறீங்க

    பதிலளிநீக்கு
  27. நன்றி விஜய் அடுத்த இடுகை எப்போ

    பதிலளிநீக்கு
  28. சந்தான சங்கர் ஒரு பிடி காற்றுக் கோளம் அருமை

    பதிலளிநீக்கு
  29. கேள்வியின் நாயகன் நல்லா இருக்கு பாரா

    பதிலளிநீக்கு
  30. பிடித்தவைகளும் பிடிக்காதவைகளும் அருமை தமிழுதயம்

    பதிலளிநீக்கு
  31. அட இன்னைக்குத்தான் சாலமோனுக்கு உங்க கண்ணாவுக்கு பிறந்த நாளா சித்து உங்க திருமண நாளுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள் டா சித்து

    வாழ்நாள் பூராவும் இதேபோல சந்தோஷமா இருங்க

    பதிலளிநீக்கு
  32. நேசன் விக்னெஷ்வரிக்கு வாழ்த்தும் பாரா ரசித்த பதிலும் அருமை

    பதிலளிநீக்கு
  33. தாய்லாந்து மலேஷியா டூர் அனுபவம் அருமை ரிஷபன்

    பதிலளிநீக்கு
  34. நன்றி ராம் அரசியல் வாதிகள் பற்றிய உங்கள் இடுகை அருமை

    பதிலளிநீக்கு
  35. ரொம்ப சரிதான் கலை

    அய்.. சந்தடி சாக்குல எங்களையும் சேர்த்துட்டா நாங்க உங்களைவிட்டுடுவமா..

    பையனோட பஜாஜ் டிஸ்கவர் பைக்கை பற்றி ஃப்ரெண்ட்டுக்கிட்ட சொல்லும் போது இண்டர்னெட் எக்ஸ்ப்ளோரர்னு சொன்னவங்க ஆச்சே நாங்க

    பதிலளிநீக்கு
  36. நன்றி மணிகண்டன் பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  37. நன்றி நேசன் பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  38. ஆமாம் ரிஷபன்
    தாய்லாந்தும் டைகர் டெம்பிளும் நல்ல பதிவு ரிஷபன்

    பதிலளிநீக்கு
  39. புத்தகக் கண்காட்சி பற்றிய பதிவு அருமை ராம்

    பதிலளிநீக்கு
  40. நன்றி சூர்யா வரவுக்கும் வாழ்த்துக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  41. 500 ரூபாய் ஏன் 1000 ரூபாயா வாங்கிக்குங்க அண்ணாமலையான் ஏன்னா என்னோட பின்னூட்ட பதில்தான் உங்களுக்கான 1000 ரூபாய்

    பதிலளிநீக்கு
  42. நன்றி சிவாஜி சங்கர் வரவுக்கும் வாழ்த்துக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  43. நன்றிம்மா விதூஷ் பொங்கல் பற்றி நிறைய தகவல்களைத்தெரிஞ்சுக்கிட்டேன் விதூஷ் நன்றிம்மா பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  44. நன்றி வசந்த் வரவுக்கும் வாழ்த்துக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  45. நன்றி நவாஸ் வரவுக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  46. நன்றி ஜாக்கி சேகர் வரவுக்கும் வாழ்த்துக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  47. நன்றி ஹேமா வரவுக்கும் வாழ்த்துக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  48. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...