எனது நூல்கள்.

திங்கள், 30 மார்ச், 2015

பூதமும் பிசாசுகளும் பேய்க்கதைகளும்:- ( மலைகள் இதழ் )

பூதமும் பிசாசுகளும் பேய்க்கதைகளும்:-
****************************

பக்கத்தில் நெருக்கி அமர்ந்து
பேய்க்கதைகள்
பேசத்துவங்கினார்கள்
இருள் அடர்ந்த இரவில்.


கம்மாய்ப் பேய்,
ஊரணிப் பேய்,
ஆலமரத்துப் பேய்,
அரசமரத்தடிப் பேய்,
மயானப் பேய்,
முச்சந்திப் பேய்,
எக்ஸார்சிஸ்ட் பேய்
விட்டலாச்சார்யா படத்தில்
அடுப்பில் கால்விட்ட பேய்,
பக்கத்துத் தெரு
அக்காவைப் பிடித்து
கொதிக்கக் கொதிக்க
கறிக்குழம்பு தின்ன பேய் தொட்டு
பிசாசுக் கதைகளில்
மயிர்க்கால்கள்
குத்திட்டு நிற்கப்
புகுந்த நேரம்
மெழுகு பிடித்து
சோத்துச் சட்டி எடுத்து
அதட்டலோடு வரும்
அம்மாவின் பின்னால்
விசுவரூபமெடுக்கத்துவங்குகிறது
ஒரு பூதம்.


கவளம் வாங்கும்
பிள்ளைகளின் பின்
சுவற்றில் நிழலாய் அமர்ந்து
உண்ணத்துவங்குகின்றன
சேட்டைக்காரக்
குட்டிப் பிசாசுகள்.

டிஸ்கி:- இந்தக் கவிதை 7,ஏப்ரல் 2014 மலைகள் இதழில் வெளியானது.

7 கருத்துகள் :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

எத்தனை எத்தனை பேய்கள்! :)

ரசித்தேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஐயோ... பயம்ம்ம்மா இருக்கு...!

sharkswami சொன்னது…

அருமை

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

பேய்கள் அழகு! இத்தனை பேய்களா?!!!!! மக்கள் தொகையை விட அதிகமாக இருக்கும் போலத் தெரிகின்றதே! ஹஹஹ்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ

நன்றி தனபாலன் சகோ. இது கார்டூன் பேய். நிழலில் வரும் உருவம் பேய் பூதம் போல் தெரியுமில்லையா அதான் :)

நன்றி சார்க்ஸ்வாமி

நன்றி துளசிதரன் சகோ :) :) :) மக்கள் தொகையை விட அதிகமாவா :) ஈக்வலா இருக்கும் :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...