எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 3 மார்ச், 2015

இனமான போராளி திரு சுபவீயின் பேருரை – செய்க பொருளை.

இனமான போராளி திரு சுபவீயின் பேருரை – செய்க பொருளை.



காரைக்குடி திருக்குறட் கழகத்தின் 61 ஆம் ஆண்டுவிழாவில் சந்தன சுப்பையா எனப்படும் இராம சுப்பையா அவர்களின் மைந்தர் சுப வீரபாண்டியன் அவர்களின் உரை மிகுந்த பொருட்செறிவோடு இருந்தது.

கம்பர் விழா என்றால் கூட்டம் அதிகமிருக்கும் கதை கேட்டு வளர்ந்தவர்கள் நாம். அங்கே அடுத்தவன் பெண்டாட்டியைத் தூக்கிப் போன கதை சுவாரசியம். ஆனால் இங்கே குறளில் பொய் சொல்லாதே, திருடாதே என்றுதான் கூறி இருக்கும். கூட்டம் சேருமோ என்று நினைத்தேன். மிக நல்ல கூட்டம்தான் அதிலும் நிறைய இடம் கொடுத்தாலும் 33 சதவிகிதம் இல்லை இங்கே பத்து சதவிகிதம்தான் பெண்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

மறைந்த குன்றக்குடி அடிகளாரின் உரை கேட்டு மார்க்சிய கருத்துக்களையும் பெரியார் பற்றிய சிந்தனைகளையும் பெற்றதாகக் குறிப்பிட்டார்.

அழகப்பா கல்லூரியில் பேராசிரியர் சாரங்கபாணியார் கொடுத்த ஊக்குவிப்பால் புத்தகங்கள் படித்து நிறைய தெரிந்துகொண்டதாகக் கூறினார்.

ராம சுப்பையா , என் அப்பா ஆரம்பித்து வைத்த இந்தக் குறட் கழகத்தின் ஆண்டுவிழாவில் அவர் மகன் நான் பேசக் கொடுத்து வைத்தவன் என மகிழ்ந்தார்.

வள்ளுவனே ஆணையிட்டிருக்கிறான் செய்க பொருளை என்று கூறிய அவர் ஆதாரமாக பொருள் செயல் அதிகாரம் 76 இல் சொல்லியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

பழ கருப்பையா கருப்புச் சட்டை போட்டு தான் பேசவேண்டியதை எல்லாம் கதர்ச்சட்டை போட்டு காலையில் பேசிவிட்டார் என்றார். அவருக்கும் தனக்கும் சித்தாந்த வேறுபாடுகள் இருந்தாலும் தாம் அவர் பேச்சைக் கேட்க வேண்டியே காலையில் வந்ததாகக் கூறினார்.

கரூரில் மேலை பழனியப்பன் அவர்கள் இதுவரை குறள் சார்ந்த 50,000 புத்தகங்கள் வெளியிட்டிருப்பது குறளுக்குச் செய்யும் தொண்டு என்று பாராட்டினார்.

செய்க பொருளை என்றால் பணம் பண்ணு இதுதான் அர்த்தம். யாரும் அறம் செய் புத்தகம் படி என்று சொல்வதில்லை. பணம் பண்ணு என்றுதான் சொல்கிறார்கள். பொருளைச் சேர்க்க விரும்புபவர்கள்தான் அனைவரும்.

அறச் செயல் மட்டும் அன்று இருந்தது என்றால் புறங்கூறாமை, பிறன்மனை நயத்தல், திருடாமை பற்றிப் பேச வேண்டிய அவசியம் இல்லை.

திருக்குறள் அறநூல், அதில் அறத்துப் பால், பொருட்பால், இன்பத்துப்பால் மூன்றுமே அறத்துப் பால்கள்தான்.

” கற்க கசடறக் கற்க “ “ கற்பவை கற்க “ “ கற்றிலன் ஆயினும் கேட்க “ அதிலும் “ எனைத்தானும் நல்லவை கேட்க “ என்று கூறி இருக்கிறார் வள்ளுவர்.

முதலில் செய்க பொருளை. என 8 அதிகாரங்களில் பொருள் செயல் வகை என முழுக்கப் பொருள் செய்வது பற்றிக் கூறி இருக்கிறார்.

“இல்லானை இல்லாளும் வேண்டாள் “

“இல்லானை எல்லாரும் எள்ளுவர் “

பொருள் அல்லவரைப் பொருளாகக் காட்டும். “ முட்டாப் பயலை எல்லாம் தாண்டவக் கோனே காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக் கோனே “

”பொருள் என்னும் பொய்யா விளக்கு இருள் அறுக்கும் அறியாமை போக்கும். “ பணம் இருந்தால் அனைவரும் மதிப்பர்.

அறம் நல்லது தவம் நல்லது ஆனால் உழைப்பில்லாமல் இந்த உலகம் அடுத்த கட்டத்துக்குப் போகுமா.

நீ பணம் சேர். உழைத்துப் பணம் சேர்,எல்லாரும் ஞானியானால், தவ யோகியானால் சித்தரானால் துறவியானால் உலகம் எப்படி நகரும் ?

“ அழக்கொண்ட தெல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. ”

”தீதின்றி ஈட்டல் பொருள்” – என்றார் அவ்வையார்.

“ அறம் ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.

--உழைப்புக்கேற்ற பணம் சிறந்தது.

பொன்னம்பல அடிகள் சொன்னார்கள் திருவள்ளுவர் இறைவன் நம்பிக்கை உடையவர் என்று. அதே வள்ளுவர்தான் சொன்னார் முயற்சி திருவினை ஆக்கும் என்றும்.

சமஸ்கிருதத்தின் முகம் வேதம். தமிழின் முகம் திருக்குறள் என்றார் பழ கருப்பையா இக்கருத்தோடு ஒத்துப் போகிறேன்.

’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றது திருக்குறள். ’அவனின்றி ஓரணுவும் அசையாது’ என்றது வேதம்.  ‘தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும் ‘ என்றது திருக்குறள். பெரியாரை விட அழுத்தமாக உழைப்புதான் கடவுள் என்பதைச் சொல்லியது திருக்குறள். வள்ளுவன் இறைவன் பற்றி நுட்பமாகச் சொல்லியதால்தான் இது அனல் வாதம் புனல்வாதத்தில் போகாமல் இருந்தது. !

( எதிரிகள் சந்திக்கிறார்கள் என்று குங்குமத்தில் அட்டைப்படம் போட்டு இராம கோபாலன், சுபவீரபாண்டியன் ( நானும் ) எழுதி இருந்தார்கள். அது சும்மா சந்திப்புதான். தலைப்புத்தான் அப்படிக் கொடுத்திருந்தார்கள். ! )

“ ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்
தாழாது உஞற்று பவர்.”

“ஊழின் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும். ”

வினைப்பயன் என்பது விதைப்பதை அறுப்பாய். விதிப்பயன் என்பது நல்லதோ கெட்டதோ எழுதியது நடக்கும் என எண்ணுவது.

“ முற்பகல் செயின் பிற்பகல் விளையும் “

”வல்லான் வகுத்தவகை யல்லால் கோடிதொகுத்
தார்க்கும் துய்த்தல் அரிது. ”

”அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும். ”

வள்ளுவர் இந்த வினைப்பயன் விதிப்பயன் பற்றிக் கூறும்போது உழைத்து வாழ் முன்னேறுவாய் என்று கூறிகிறார்.

“ முயற்சி திருவினை ஆக்கும் ”

“தீதின்றி செய்க பொருளை “

“ முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும் 

“ பணம்தான் பொய்யா விளக்கு “

” செய்க பொருளை செருநர் செருக்கறுக்கும்
எஃகதனின் கூரிய தில். “ எனவே செய்க பொருளை.

துய்த்தலுக்காகப் பொருள் தேவை.

சரஸ்வதி பூஜையன்று படிப்பது கஷ்டம் கும்பிடுவது எளிது. படி படி என்று பிள்ளைகளைத் துன்புறுத்துவது பணத்தின் மீதுள்ள காதலால்.

முகநூலில் ஒருவருக்கு ஆயிரக் கணக்கில் நண்பர்கள். ஆனால் பல்லாயிரம் நண்பர்களும் ஒரு அவசரம் என்றால்  ஓடி வர மாட்டார்கள். பக்கத்துவீட்டுக்காரர்கள்தான் ஓடி வருவார்கள். ஆனால் அமெரிக்கா இன்று அடுத்த வீடாகிவிட்டது  அடுத்த வீடு அமெரிக்காவாகிவிட்டது.

செய்க பொருளை என்று வள்ளுவர் ஏன் சொல்லி இருக்கிறார் என்றால் இரண்டு விஷயங்களுக்காக. துய்த்தலும் ஈதலும்.

கொடுத்தலும் துய்த்தலும் இல்லாது அந்தச் செல்வத்தால் பயனில்லை. 

“குணம்நாடிக் குற்றமும் நாடி “ நல்ல சொந்தங்களைக்கொள்ள வேண்டும். என்று திருவள்ளுவர் எல்லாருக்குமான அறிவுரை சொல்கிறார்.

”கடிதோச்சி மெல்ல எறிக” என்று குழந்தையை அடிப்பது பற்றி கூறும் திருவள்ளுவர் அவ்வாறே சுற்றத்தினரிடமும் நடந்துகொள்ளச் சொல்கிறார்.

”அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்”

நஷ்டத்தை முதலில் பார் இது வாழும் கலை.

தமிழருக்கு அடையாளம் திருக்குறள். இது தமிழர்களின் அடையாளமாய் வீடுதோறும் இருக்க வேண்டும்.

{முன்பு சினிமாவில் ஆண் வில்லன்கள்தான் அதிகம் இருப்பார்கள். இன்று தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்தால் அதில் பூரா பெண் வில்லிகள்தான். ஆணின் இடத்தை இன்று பெண்கள் எடுத்துக் கொண்டார்கள். }

குறுந்தொகை குறிப்பிடுவது போல ஈதலும் துய்த்தலும் இல்லோருக்கு இல். “ என வள்ளுவரும் சங்க இலக்கியமும் ஓங்கிச் சொல்லி இருக்கின்றன.

ஒன்று துய்த்தல் இரண்டாவது ஈதல் மூன்றாவது நம் பிள்ளைகளுக்குச் சேமிப்பு. இயல்வது கரவேல் ஈவது விலக்கேல், உடையது விளம்பேல் என ஔவை ஆத்திச் சூடியில் சொல்லி இருக்கிறார்.

86 இல் டாக்டர் பட்டம் கொடுத்தார்கள். நான் பேராசிரியர் இல்ல பெரியாரின் மாணவன். திருக்குறள் மாணவன்.

”ஏதிலார் ஆரத்தமர் பசிப்பது போல “ உன்னோடு உழைப்பவனைப் பார். இல்லையெனில் பேதைகள் சேர்த்த பெருஞ்செல்வம் போலத்தான் அது.

”வீட்டின் பெயர் அன்னை இல்லம்.
அப்பா அம்மா முதியோர் இல்லத்தில் ” என்ற புதுக்கவிதை போலத்தான் அது.

பிள்ளைகளுக்கு இன்று செல்லம்கொடுத்து செல்லும் கொடுக்கிறோம். ஆனால் அவர்கள் எப்போதும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கின்றார்கள். இதுதான் உறவுகளின் நிலை.

லஞ்சம் என்பது கையூட்டு என்பது போய் இன்று பையூட்டு ஆகிவிட்டது. அது தேவைக்கு வாங்குவது போய் வசதிக்காக வாங்கி பழக்கமாக ஆகி இப்போது தீர்க்கமுடியாத நோய் ஆகிவிட்டது.

“ இல்லாரை எல்லாரும் எள்ளுவர் ” அதே போல் உள்ளோரை அனைவரும் சிறப்பு செய்வர். பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க குடும்பம் சிறப்பாக இருக்க சேமிப்பு அவசியம்.

”செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து. ”

என்று நடுநிலைமை அதிகாரத்தில் கூறி இருக்கிறார். “இன்றும் வருவது கொல்லோ” முன்பு கொடுமைப்படுத்திய வறுமை நம்மை இன்றும் தொடர்ந்து வராமலிருக்க சேமிப்பு அவசியம்.

“ நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன் றும்கண் பாடு.”

நெருப்பினுள் கூட தூங்கிவிடலாம் ஆனால் வறுமையில் ஒரு நாளும் தூங்க முடியாது. அதே சமயம் நேர்மையாய்ப் பொருளைச் செய்தல்பற்றி வள்ளுவர் சொல்லி இருக்கிறார்.

பொருள் சேர்ப்பதில் எல்லாருக்கும் வேட்கை உண்டு. எப்படியும் சேர்க்கலாம் என்ற எண்ணம் உண்டு. புறநானூற்றில் குமரன் கொடுத்த செல்வம்  பற்றிப் பெருஞ்சித்திரனார்

“இன்னார் எண்ணாது என்னையும் சூடாது
பல்லாண்டு வாழும் என்காது ”

இன்னார் இனியார் எனப் பார்க்காது என்னையும் பார்க்காது நீயும் கொடுமதி என் மனைகிழவோளே. எனவே ஈதல் வாழ்க்கையின் ஒரு பகுதி. செய்க பொருளை ஈதலும் செய்க. அறம் செய்க. என்று கூறி தன் இன்னுரையை முடித்தார்.
டிஸ்கி :- இவரை ஏன் இனமான போராளி என்று கூட்டத்தில் பேசியவர்கள் குறிப்பிட்டார்கள் என்று கூகுளில் தேடினேன். கிடைத்தது விபரம் இந்த இணைப்பில். http://www.thiruma.in/2013/11/blog-post_5.html

///தொண்ணூறுகளில் ‘விடுதலைக் குயில்கள்’ அமைப்பைத் தொடங்கி தமிழ் இனம் மானம் காக்கக் களத்திற்கு வந்த போராளி சுபவீ, கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தாலும் மாணவர்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர். இதற்காகவே பலமுறை கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கைக்குள்ளானவர். 1992 மார்ச் மாதம் புலிகளை ஆதரித்து தமிழர் ஒற்றுமை மாநாடு நடத்தினார். கல்லூரிக்குப் போய்விட்டு போராட்டக் களம் நோக்கியே வந்து களமாடிய போராளி சுபவீ 1993ஆம் ஆண்டு மாவீரன் கிட்டு வீரச்சாவையொட்டு இரங்கல் நிகழ்ச்சி நடத்துவதற்காக, புலவர் புலமைப்பித்தன் உள்ளிட்ட உணர்வாளர்களோடு ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டார். அடிக்கடி போராட்டங்களினால் சிறைக்குப் போவதால் ஆசிரியர் பணி இடையூறாக இருப்பதாக உணர்ந்து, 1997ஆம் ஆண்டு தம்முடைய 45ஆம் வயதில் விருப்பு ஓய்வு கொடுத்துவிட்டு தீவிர இனவிடுதலைப் போராட்டத்தில் இறங்கினார்.///

///தமிழகத்தில் பெரியார், அம்பேத்கர் கொள்கையை உயிர்மூச்சாகக் கொண்டு தலித்துகள் விடுதலையிலும், சமூக மாற்றத்திலும் அக்கறையுள்ள தலைவர்களாக வாழ்ந்து வருபவர்கள் ஆசிரியர் கி.வீரமணி, தொல்.திருமாவளவன், பேராசிரியர் சுபவீ. தலித்துகள் விடுதலையடைந்தால்தான் தமிழ்ச் சமூகம் முழுமையான விடுதலை அடையும் என்கிற கொள்கை நம்பிக்கையோடு களமாடி வருபவர்கள். அதனால்தான் தருமபுரி, மரக்காணத்தில் தலித்துகளுக்கெதிராக நிகழ்த்தப்பட்ட சாதிவெறியாட்டத்தை முதலில் கண்டித்துக் குரலெழுப்பினார்கள் ஆசிரியரும், பேராசிரியரும். ஈழவிடுதலைக் களம் என்றாலும், தலித்துகளின் விடுதலைக் களமானாலும், பெண்ணிய விடுதலைக் களமானாலும் முன்னணியில் நிற்பவர்கள்.///

6 கருத்துகள்:

  1. சுப.வீ அவர்கள் பேசியதை அழகாக தொகுத்துத் தந்திருக்கிறீர்கள்...
    பழ.கருப்பையா அருமையான பேச்சாளர்... அவரின் பேச்சைக் கேட்க இவர் வந்தது சிறப்பு..

    பதிலளிநீக்கு
  2. இனமான போராளி திரு சுபவீ அவர்களின் பேருரையை அழகாக சுருக்கி சிற்றுரையாகத் தந்துள்ளீர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. நன்றி குமார் :) அப்படி ஒரு நயக்கத்தக்க நாகரீகம் இருக்கு அவர்களுக்கிடையில். :)

    கருத்திட்டமைக்கு நன்றி நடனசபாபதி அவர்களே.

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. திண்ணையில்

    ramu says:
    December 12, 2014 at 10:24 am

    naan alagappaa kalloriyil padikkum naatkail mahar nonbu pottalil nadakkum antha vizhaa vaazhththuukal
    Reply
    ramu says:
    December 12, 2014 at 10:52 am

    திருக்குறள் ஒரு உலக மகா இலக்கியம் என்பதில் எனக்கு உடன்பாடு அதனால் தான் வாழ்த்து தெரிவித்தேன் சென்ற கடிதத்தில். நான் அழகப்பா கல்லூரியில் 1952-56 இல் படித்தவன் அப்போதே மகர்நோன்பு பொட்டலில் நடந்தது இந்த விழா ஒரு உண்மை என்ன என்றால் ” இதன் நோக்கம் சா கணேசன் நடட்த்திகொண்டிருந்த கம்பன் விழா வுக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்டது என்பது உண்மை ஏன் ? அந்த காலகட்டத்தில் கம்பனுக்கு எதிர்ப்பு திராவிட கழகம் பிறகு தி மு கவிடம் இருந்தது ரா பி சேது பிள்ளையோடு அண்ணா ” தீபரவட்டும் என்ற விவாதம் நடத்தியவர் எவ்வளவு கம்பனி இழிவு படுத்த வெண்டுமெஒ அவ்வளவு செய்தார்கள் ஏன்? கம்பன் ஒரு ஆரிய தாசன் திருப்பாவை பற்றி சொற்ப்பொழிவு நிகழ்த்திய ஐயம் பெறமால் கோனாருக்கு ( கோனார் நோட்ஸ் புகழ்) ” ஆரிய தாசன்” என்று பெயரிட்டார்கள் சா கணேசனுக்கே பல எதிர்ப்புகள் இப்படியாக தோன்றியது இந்த விழா நோக்கம் எப்படியோ நல்லதை செய்தார்கள்
    Reply

    ஷாலி says:
    December 14, 2014 at 4:04 am

    //”(திருக்குறட் கழகம்) இதன் நோக்கம் சா கணேசன் நடட்த்திகொண்டிருந்த கம்பன் விழா வுக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்டது என்பது உண்மை ஏன் ? அந்த காலகட்டத்தில் கம்பனுக்கு எதிர்ப்பு திராவிட கழகம்…..//

    அய்யா ராமு அவர்களே! உண்மையில் திராவிடக் கழக கொள்கைகளுக்கு போட்டியாகவே சா.கணேசன் அவர்கள் கம்பன் கழகத்தை ஆரம்பித்தார் என்றுதான் வரலாறு சொல்கிறது.பின்பு 15 வருடம் கழித்தே திருக்குறட் கழகம் துவக்கப்பட்டது.

    “1937 ஆம் ஆண்டில் முதன்முறையாக, அன்றைய, சென்னை மாகாணத்தில் இராசகோபாலாச்சாரி தலைமையில் இந்திய தேசிய காங்கிரசுஆட்சிப் பொறுப்பேற்றது. 1938 ஆம் ஆண்டில் அவ்வரசாங்கம் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தது. அதனை எதிர்த்து தமிழறிஞர்களும் பெரியார் ஈ.வே.இரா. போன்ற சமூகச் செயற்பாட்டாளர்களும் போராடினர். அப்போராட்டத்தில் வடமொழி – வடபுலம் – வடவர் பண்பாட்டு ஆதிக்கம் ஆகியவற்றை எதிர்த்து “திராவிடர்நாடு திராவிடர்க்கே” என்னும் சிந்தனை மேலோங்கியது. அச்சிந்தனையின் ஒரு பகுதியாக, இராமாயணம் வடவர் பண்பாட்டை முன்மொழிகிறது எனக்கூறி, பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தினர் இராமாயணத்தை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்நிலையில் கம்பனது இலக்கிய ஆளுமையை தமிழர்களிடையே பரப்புவதற்காக காரைக்குடி சா. கணேசன் கம்பன் கழகம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.[1] ( சிவம் சுகி., கம்பன் நேற்று – இன்று – நாளை, வானதி பதிப்பகம் சென்னை, ஐ.பதி. நவ 2006, பக். 20-23)
    Reply

    பதிலளிநீக்கு
  6. 1 மார்ச், 2015 ’அன்று’ 1:30 பிற்பகல்
    Thenammai Lakshmanan சொன்னது…



    தேனம்மைலெக்ஷ்மணன் says:
    December 14, 2014 at 5:07 pm

    திரு ராமு அவர்களுக்கு

    தங்களின் அரிய தகவல்கள் கொண்ட பின்னூட்டத்துக்கு நன்றி. முகப்பில் இந்த இடுகை எனக்குத் தெரியவில்லை. தாங்கள் பின்னூட்டமிட்டபின்பே வெளியானது தெரிந்தது.

    திருக்குறளின் மேல் கொண்ட ஆர்வமும் ஈர்ப்புமே என்னை அந்த நிகழ்வில் குறிப்பெடுக்கச் செய்தது.

    நன்றி. :)
    Reply
    kathirvel says:
    December 15, 2014 at 7:13 am

    மனிதன் வாழ்வதற்கு வழிகாட்டிய நூல் திருக்குறள் ,,திருஅருட்பா வாழ்ந்து காட்டிய நூல் ,,ஆனால் இந்த தமிழ் நாட்டில் உள்ள ஆன்மீக பெரியவர்களும் அறிஞர் பெருமக்களும் .வள்ளலாரின் சுத்த சன்மார்க்க உண்மை நெறிகளை கண்டு கொள்ளாதது ஏன்.என்று புரியவில்லை .
    Reply
    kathirvel says:
    December 15, 2014 at 7:27 am

    தவத்திரு பொன்னம்பல அடிகள் அவர்கள் வள்ளலார் எழுதிய திருஅருட்பாவை படிக்க வில்லையா ? உலகத்திற்கு நல்வழிக் காட்ட இரண்டு நூல் மட்டும் இருந்தால் போதும் .பாரதியார்,பாரதிதாசன் ,தந்தை பெரியார் போன்றவர்கள் ,வள்ளலார் எழுதிய திருஅருட்பாவைப் படித்து தெரிந்து கொண்டு தாங்கள் சொல்லுவது போல் பகுத்தறிவுக் கொளகைகளை மக்கள் மத்தியில் விதைத்து உள்ளார்கள் .எப்படியோ மக்கள் நலமுடன் வாழ்ந்தால் சரி …பகுத்தறிவு ஆன்மீகத்தை உலக மக்களுக்கு உணர்த்தியவர் வள்ளல்பெருமான்.கதைகளையும் ,கற்பனைகளையும் சொல்லி மக்களை ஏமாற்றி வாழ்ந்த ஆன்மீக வாதிகளுக்கு சவக்குழி தோண்டி புதைத்தவர் வள்ளல்பெருமான் ..அவரைப் பற்றி பேசாத ஆன்மீக வாதிகள் ஆன்மீக வாதிகள் அல்ல …போலியானவர்கள் என்பது பொருள் .வள்ளலார் சொல்லாத வாழ்க்கை நெறி உலகத்தில் எங்கும் இல்லை .மனிதன் மனிதனாக வாழ்ந்து மரணத்தை வெல்ல முடியும் என்ற உண்மையை அறிவியல் ரீதியாக விஞ்ஞான ரீதியாக கண்டு பிடித்து வாழ்ந்து காட்டியுள்ளார் .மனிதன் பிறப்பு என்பது உயர்ந்த பிறப்பு அந்த பிறப்பினால் அடைய வேண்டிய ஆன்ம லாபத்தை காலம் உள்ள போதே அனுபவித்து பின் இறை நிலையை எப்படி அடைய முடியும் என்ற உண்மையை தெளிவுப் படுத்தி ..சொன்னால் மட்டும் போதாது வாழ்ந்து காட்டவேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் வள்ளல்பெருமான்.அவருடைய சன்மார்க்க நெறியைப் பின் பற்றாதவன் தமிழன் அல்ல !…நன்றி ஈரோடு கதிர்வேல்.
    Reply
    IIM Ganapathi Raman says:
    December 28, 2014 at 6:09 am

    இக்கட்டுரையில் தலைப்பு ஏதோ டாகுமென்ட்ரி ரைட்டிங் என நினைக்கும்படி செய்து என்னை விரட்டிவிட்டது. கூகுலில் பாரதியார் கவிதை வரிகளைத்தேடும்போது இது கிடைத்தது. படிக்க வேண்டிய திண்ணைக்கட்டுரை.

    தமிழக ஆன்மிக வாதிகளில் இருவகை: ஒருவர், தன் உரைகள்; பேருரைகளில் தான் சேர்ந்திருக்கும் மதத்தின் கருத்துக்களை ஆழ்ந்த புலமையோடு எடுத்தியம்பினாலும், வடமொழிச்சொற்களை விரவி பேசுபவர். மற்றவர்: தூய தமிழில் மட்டும்- ஆனால், எளிதில் புரியும்படியான – தமிழில் பேசுவார்கள். ஆதினங்கள் இந்த இரண்டாம் வகை.

    நான் இருவகையினர் உரையரங்குகள‌யையும் தேடிச்சென்று கேட்பவன். எனக்கு வடமொழி பிரச்சினையில்லை. அதே சமயம், தூயதமிழ் சுவையும் திகட்டாதது.

    பொன்னம்பல அடிகளாருக்கு முன் குன்றக்குடி அடிகளாரைப் பலமுறை கேட்டு இன்புற்றதுண்டு. பொன்னம்பல் அடிகளாரை ஓரிரு தடவைகள் கேட்டதுண்டு. அவரின் திருக்குறள் பற்றிய உரையின் சாரம் இங்கே கிடைக்கிறது. ஆதினங்களில் மதக்கொள்கைகள் எனக்கு ஒவ்வாத்தது என்றாலும், திருக்குறளின் மீது எனக்கு கடுமையாக காட்டம் இருந்தாலும், தேனம்மை இலட்சுமணன் ஆதினத்தில் பேச்சையும் பிற அறிஞர்களின் பேச்சுக்களையும் சிறிது தொகுத்தளித்ததது நன்று. நன்றிகள்.

    தமிழ் வாழ்க! தமிழ்ப்பணி சிறக்க !!
    Reply
    தேனம்மைலெக்ஷ்மணன் says: Your comment is awaiting moderation.
    March 1, 2015 at 7:51 am

    அரிய தகவல்களுக்கு நன்றி ஷாலி

    வள்ளலார் போற்றுதலுக்குரியவர். இதில் எனக்கேதும் மாற்றுக் கருத்து இல்லை கதிர்வேல் சார். ஆனால் அங்கே நிகழ்ந்தது திருக்குறள் கழகத்தின் 61 ஆம் ஆண்டு நிறைவு. எனவே அதைப் பற்றி மட்டுமே அங்கே உரையாற்றினார்கள் என்பதை உங்கள் மேலான கவனத்துக்குக் கொண்டு வர விழைகிறேன்.

    மதிப்பிற்குரிய கணபதி சார் அவர்கட்கு,

    எனக்கும் ஆதீனங்கள் மடாதிபதிகள் என்றால் பெரும் வெறுப்பு உண்டு என்றாலும், அங்கே கொண்டாடப்பட்டவர்கள் கூறிய நற்கருத்துக்களை அவர்கள் வார்த்தையிலேயே பதிவு செய்ய விரும்பினேன். திருக்குறள் மீதும் மிக்க அபிமானம் உண்டு. எனவேதான் தொகுத்தேன். கருத்தளித்தமைக்கும் பாராட்டுக்கும் நன்றி :)
    Reply

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...