இனமான போராளி திரு சுபவீயின்
பேருரை – செய்க பொருளை.
காரைக்குடி திருக்குறட்
கழகத்தின் 61 ஆம் ஆண்டுவிழாவில் சந்தன சுப்பையா எனப்படும் இராம சுப்பையா அவர்களின்
மைந்தர் சுப வீரபாண்டியன் அவர்களின் உரை மிகுந்த பொருட்செறிவோடு இருந்தது.
கம்பர் விழா என்றால்
கூட்டம் அதிகமிருக்கும் கதை கேட்டு வளர்ந்தவர்கள் நாம். அங்கே அடுத்தவன் பெண்டாட்டியைத்
தூக்கிப் போன கதை சுவாரசியம். ஆனால் இங்கே குறளில் பொய் சொல்லாதே, திருடாதே என்றுதான்
கூறி இருக்கும். கூட்டம் சேருமோ என்று நினைத்தேன். மிக நல்ல கூட்டம்தான் அதிலும் நிறைய
இடம் கொடுத்தாலும் 33 சதவிகிதம் இல்லை இங்கே பத்து சதவிகிதம்தான் பெண்கள் அமர்ந்திருக்கிறார்கள்
என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.