சித்திரப் பாவை என்ற அகிலனின் நாவல் கல்லூரிக் காலத்தில் படித்தது. மிகப் பிடித்த வார்த்தை அது. கலைஞர் ஒரு அரசியல் கூட்ட சுற்றுப் பயணமொன்றில் ஒரு ஊருக்கு வர தாமதமான போது “ மாதமோ சித்திரை மணியோ பத்தரை உங்களுக்கோ நித்திரை எனக்கோ யாத்திரை “ என்று கூறிச் சென்றதாக உறவினர் ஒருவர் சொல்லக் கேள்வி. இந்தச் சித்திரமும் சித்திரையும் மிகப் பிடித்துப் போனதால் அதிலிருந்து எனக்குப் பிடித்த சில பாடல்கள் உங்களுக்காகவும் இங்கே.
சித்திரைச் செவ்வானம். - இதை என் தோழி வஹிதா ரெஹ்மான் பாடி கேக்கணும். பதின்பருவப் பாடல். ஆனா படமாக்கப்பட்டவிதம் சொதப்பல். கவிதாவும் முத்துராமனும். ஆனால் கவிதா பயந்து ஒதுங்கி நம்மையும் பதட்டப்பட வைத்திருக்கிறார் காட்சியமைப்பில். கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் எல்லாம் வொர்க்கவுட் ஆகலை போல. :) மாக்ஸி என்னும் உடையணிந்த கவிதாவும் ( ஃபுல் ஃபார்மல்ஸில் ) பாண்ட் ஷர்ட்டில் முத்துராமனும் நம்ம தமிழ் சினிமா டூயட்டின் விநோத ஸ்பெஷல். :) ஒவ்வொரு வரியையும் பிசகாமப் பாடுவோமாக்கும். :)
சித்திரமே சொல்லடி. பி பி ஸ்ரீனிவாசின் தேன் குரலில் மயக்கும் பாடல். ஸ்ரீகாந்தும் நிர்மலாவும். ஆனால் இதிலும் நிர்மலாவின் பயப்பார்வை. ஹ்ம்ம் முதல் சினிமா ஷீட்டிங். கண் என்னவோ திரு திருவென விழிப்பது போல் ஒரு தர்மசங்கடம்.. :) அதைப் பொருட்படுத்தாமல் ஸ்ரீகாந்த் ரொமான்ஸாக பாடியிருப்பார். :)
ஸ்ரீதர் ( டைரக்டர் ) படங்களில் ஹீரோயினுக்கு டைட்டான சுரிதார் ஸ்பெஷல். அதிலும் தலையையும் உடலையும் ஆட்டி ஆட்டி நடனம் ஆடுதல் இன்னும் ஸ்பெஷல். ( ரிப்பன் வைத்து மடித்துப் பின்னிய இரட்டை சடையும் கூட )
சித்திரைபூச் சேலை. மஞ்சள் பூசும் இடமெல்லாம் என் மனம் பூசல் ஆகாதா. கொஞ்சம் என்னைக் குங்குமமாய்க் குழைத்தெடுத்தால் வாரேனா. என முழுப்பாடலும் காதல் தோய்ந்த காவியம். காமமும் கலந்திருக்கும் கவிதை. இந்தப் பாடலுக்கு உரிய காட்சியமைப்பு எதுன்னு தெரில. ஆனா யூ ட்யூபில் கருப்பன் என்பவர் பதிந்திருக்கும் பாடல் காட்சியமைப்பு உறுத்தாமல் இருக்கிறது. :)
சித்திரம் பேசுதடி. என் மனம் நீ அறிவாய் உந்தன் எண்ணமும் நானறிவேன். இன்னமும் ஊமையைப் போல் மௌனம் ஏனடி தேன்மொழியே என்ற இடத்தை எப்போது கேட்டாலும் தன்னையறியாமல் என் முகத்தில் புன்னகை பூத்துவிடும்.:)
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்.வளர்ந்த குழந்தையைப் போலிருக்கும் விஜயாம்மா நடித்த அழகுப் பாடல். :) ட்ரெயின் எனக்குப் பிடித்த அழகான ராட்சசன். இந்தப் பாடல் ரயில் ப்ரயாணத்தில் இடம்பெறுவதோடு அந்த ரிதமிக்கிலும் இசை அமைந்திருக்கும். 70 - 90 விஸ்வநாதன் காலகட்டத்தில் பல பாடல்களின் இசை இப்படி விதம் விதமாக நிகழ்வோடு இயைந்து விருந்தாகவும் இருக்கும். :)
"பூமாலைகள் உன் தோளில் விழுந்து ஊரெங்கும் பேர் பாடும் நன்னாளிலே பாமாலைகள் பல்லாக்கு வரிசை ஒன்றல்ல பலகோடி உன் வாழ்விலே. "
மனதார எந்த ஈகோவும் இல்லாமல் வசீகரப் பார்வையோடு அழகு கொஞ்ச காதல் பொங்க ஒவ்வொரு வரியையும் விஜயாம்மா பாடும் விதம் ( உச்சரிக்கும் விதம் ) அருமை.
சுஜாதா சொன்னது போல சினிமா ஒரு கனவுத் தொழிற்சாலை. தமிழ் சினிமாவில் பாடல்கள்தான் அதன் உற்பத்தித் தரத்தின் அளவுகோல். பாடல் ஹிட்டாகி படம் சொதப்புவதும் உண்டு பார்வை ஒன்றே போதுமே படப்பாடல்கள் போல.
சினிமாப் பாடல்களை பாடல்களாக மட்டுமே ரசிப்பது நல்லது. காட்சியமைப்பைப் பார்த்தால் மனதில் பூக்கும் மெல்லிய உணர்வுகள் கூட வாடிப் போய்விடும் என்பதால் அநேக பாடல்களை கேட்க மட்டுமே செய்யுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன். :) :) :) :) :) :) :)

பாதிப் பாடல்களின் காட்சிகளைப் பார்த்தால் பாடலை ரசிக்க முடியாது.
பதிலளிநீக்குசித்திரப்பூ சேலை பாடலை எழுதியவர் ஜெயகாந்தன். எஸ் பி பியும் ரசிக்க வைப்பார்.
பாடு நிலாவே படத்தில் ஒரு பாடல் "சித்திரை மாதத்து நிலவு வருது, மேகமே மேகமே வழி விடு"
அருமையான பாடல்கள்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குசித்திரைப் பாடல்கள் அனைத்தும் அருமை. பாடல் காட்சிகளைப் பார்த்தால் பிடிக்காமல் போய்விடும் - உண்மை. கேட்க மட்டுமே இனிக்கும் பாடல்கள் பல! பார்க்கவும் பிடிக்கும் பாடல்கள் வெகு சில!
பதிலளிநீக்குஆம் ஸ்ரீராம். புதிய பாடலுக்கும் விளக்கத்துக்கும் நன்றி :)
பதிலளிநீக்குநன்றி சுரேஷ் சகோ
நன்றி வெங்கட் சகோ. உண்மைதான் :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
மீன் கடிக்கும் மெல்லிதழை நான் கடித்தால் ஆகாதா?தேனின் ருசி தெரிந்தவன் நான் தேனீயாய் மாறேனா😊😊 எஸ்.பி.பி யின் இதமான குரல் மனசெங்கும் மயிலிறகால் வருடுவது போலயிருக்கிறது. இரவில் மெல்லிய வெளிச்சத்தில் கேட்க சுகம்.
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி பெயரில்லா :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!