எனது நூல்கள்.

திங்கள், 16 நவம்பர், 2015

சல்லிகள்.7.5.86.

30.*தெருவைச் சூழும்
குப்பைகளாய்
இன்றின் திரைப்படங்கள்.


*தூய்மைப்படுத்துவோன்
இல்லாமல்
நாறிக்கிடக்கும் தெரு.

*வயலெங்கும் பயிர்கள்,
பயிரிடப்பட்டவையோ
பூஞ்சைக்காளான்கள்.

*களையென்று
எதனைக் களைய ?

*ரோட்டோரச் சல்லி
விமர்சகனின் காலில் உதைவாங்கும்.

*எல்லாமே ரோட்டோரச்
சல்லிகளானால்,
அவை நடப்படுவது
நல்ல அஸ்திவாரத்திற்கல்ல,
உயர்ந்த கட்டிடங்களுக்கல்ல.

*வாகனங்களாலும்
விலங்குகளாலும்
மிதிபட்டுக் கிடக்கவே

5 கருத்துகள் :

Dr B Jambulingam சொன்னது…

ரோட்டாரச் சல்லி.. நாம் இன்னும் எதிர்கொள்கிறோம்.

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

அன்று சொன்னது இன்றும் பொருந்துகிறது! அருமை!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை... பாராட்டுகள் சகோ.

Thenammai Lakshmanan சொன்னது…

உண்மைதான் ஜம்பு சார்

ஆம் சுரேஷ் சகோ

நன்றி வெங்கட் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...