சனி, 7 நவம்பர், 2015

வெட்கச் செடியும் சன்யாசி மரமும். :-


வெட்கச் செடியும் சன்யாசி மரமும். :-

மழைவரும்போல் தெரிகிறது
பாதையோர குறுநீலப் பூக்கள்
பாவாடைப் பச்சையில் விரிகின்றன.

ஆழ்ந்த குளிருக்குள் தோய்கிறது வனம்.
தினத்தீர்வை முடித்து நீலப்பகலைச்
சுருட்டிச்செல்கிறது செங்காந்தள் அந்தி வானம்.
இறுக்க மூடிவரும் இரவில் மோதிப்
போதவிழக்காத்திருக்கிறது ஒற்றை மொக்கு.


தொடப்போகும் மரவிரல் பார்த்து
சிணுங்கிச் சலிக்கிறது சர்க்கரைத் தீர்வு.
காதல் சீண்டலில் வெட்கித் தலைகுனிகிறது
காணாமலே உணரும் காமவர்த்தினி.


பரஸ்பரத் தொடுகையில் பூத்து விரிகின்றன
குறுஞ்சாமரங்களாய் இளஞ்சிவப்புப் பூக்கள்
உறங்கப் போகும் பறவைகள் தாலாட்டில்
மோனத்தில் ஆழ்கிறது மழை மரம்.

மேகமாய் உறைந்து மரத்தின் மேல்
பொழிகிறது வெள்ளை நிலாச்சாரல்.


சடைப்பிடித்து நிஷ்டையில் மூழ்குகிறது
சதா தூங்குமூஞ்சி மரமென.
ராஜாவுடன் ராணியாய் கைபிடித்துத்
துயில்கிறது தொட்டாற்சுருங்கியும்.

டிஸ்கி :- இந்தக் கவிதை மார்ச் 1 - 7 , 2015 புது திண்ணையில் வெளியானது.

7 கருத்துகள் :

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

Geetha M சொன்னது…

நல்ல கவிதை வாழ்த்துகள்..

Dr B Jambulingam சொன்னது…

நல்ல ஒப்புகை.

Chellappa Yagyaswamy சொன்னது…

"நீலப்பகலைச் சுருட்டிச்செல்கிறது செங்காந்தள் அந்தி வானம்.." என்ற வருணனை எவ்வளவு ரம்மியமாக இருக்கிறது! - இராய செல்லப்பா

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சுரேஷ்

நன்றி கீதா

நன்றி ஜம்பு சார்

நன்றி இராய செல்லப்பா சார் :)

Thenammai Lakshmanan சொன்னது…


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையான கவிதை சகோ..பகல்...வானம் வரிகள் அழகு...

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...