7.5.86.
34.*இருட்டுவதற்குள்
படித்திட
வேண்டும்.
*வயோதிகம்
எனும்
இருள்
எனைச் சூழுமுன்,
சூழ்நிலைத்
திரைகள்
என்
பார்வை பறிப்பதற்குள்,
சுற்றச்
சுவர்கள்
எனைப்
புத்தகங்களிலிருந்து
பிரிப்பதற்குள்
சிந்தனைச்
சக்திகள்
பறிபோவதற்குள்,
எதிர்ப்புக்
கரையான்கள்
எரித்து
விடுவதற்குள்
*கண்ணாடிப்
பார்வைகளில்
புகுந்தாவது
என்
கைகள்
பல கணிகளைத்
தொட்டுவிடல்
வேண்டும்.
*புத்தக
விரல்களின்
ஸ்பரிசத்திலேயே
நான்
*இருட்டுறதுக்குள்
படித்திடல்
வேண்டும்.
சின்ன ஆசைதானே.....
பதிலளிநீக்குசிந்திக்க வைக்கும் கவிதை .
பதிலளிநீக்குஅருமை அக்கா...
பதிலளிநீக்குசில வரிகளில் எதிர்மறைச் சிந்தனைகள் இருப்பதுபோலத் தெரிகின்றனவே. இருப்பினும் சிந்திக்க வைக்கின்றன.
பதிலளிநீக்குஅருமையான கவிதை சகோ...முதுமை என்பது அத்தனை இருட்டாகிவிடுமோ....முயற்சி செய்வோம்...
பதிலளிநீக்குஆம் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குநன்றி முரளிதரன் சகோ
நன்றி குமார் சகோ
நன்றி ஜம்பு சார் .. ஆம் அப்படித்தான் அமைந்துவிட்டது :)
நன்றி துளசி சகோ & கீத்ஸ். பயமா இருக்கு. படிக்க எழுத முடியாட்டா இருந்து என்ன பயன் ஹ்ம்ம்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
நல்ல ஆசை.....
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ :)
பதிலளிநீக்கு