எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 1 நவம்பர், 2015

பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.

N.Rathna Vel added 2 new photos — with Thenammai Lakshmanan.

நான் படித்த புத்தகம்.

பெண் பூக்கள்
(கவிதைகள்)

ஆசிரியர்: திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் (honeylaksh@gmail.com)

புத்தகம் கிடைக்குமிடம்:
புதிய தரிசனம் பதிப்பகம்,
10/11, அப்துல் ரசாக் 2வது தெரு, சைதாப்பேட்டை,
சென்னை – 600 015.
போன்: 044 42147828 - மின்னஞ்சல்: puthiyadharisanam@gmail.com
வலைத்தளம்: www.puthiyadarisanam.com

பக்கங்கள்: 54 - விலை ரூ.60

புத்தகத்தைப் பற்றி:

இந்த புத்தகம் எங்கள் மூத்த பதிவர் , முகநூல் நண்பர்
திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின்
4வது வெற்றிப் படைப்பு.புதிய தரிசனம் பதிப்பக்கத்தால் வெளியிடப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கிறது.

பூக்களையும் பெண்ணையும் ஒப்பிட்டு மெல்லிய காதல் உணர்வுடன் எழுதப்பட்ட அருமையான கவிதைப் புத்தகம். எல்லா பூக்களையும் (கிட்டத்தட்ட 64 பூக்களை கவிதைகளுடன் கோர்த்திருக்கிறார்) படத்துடன், தக்க கவிதையுடன் எழுதி, பூக்களை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள், அருமையான முயற்சி. பூக்களின் அந்தந்த வண்ணங்களுடன் வெளியிட்டிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும், ஆனால் புத்தக விலை வெகுவாகக் கூடியிருக்கும்.

அருமையான கவிதைகள். நண்பர்கள் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டுகிறேன்.
படித்து நமது நண்பருக்கு தகவல் // பாராட்டுகள் // feed back கொடுக்க வேண்டுகிறேன்.

அதிலிருந்து ஒரு துளி:

மல்லிகை (பக்கம் 15)

கல்லூரி வகுப்பறை
நண்பர்கள் பேப்பர் அம்புகளை
எய்து கொண்டிருந்த போது
நீ பார்வை அம்புகளை எய்தாய்...

உன் பார்வை விடு
தூதில் ஒவ்வொன்றும்
மல்லிகையாய் மெத்தென்று
என் மனதில்...

உன் பார்வைகளில்
உதிர்ந்த மல்லிகைகளை
என் பார்வைகளில்
வாங்கிக் கோர்த்த போது,
நம் காதலின் கிரீடம் ஆனது அது...

அதை அணிந்து
உலா வந்தோம்
ஒளி வட்டம் போல
பார்வை வட்டம் சூடி...

மகிழ்ச்சி & வாழ்த்துகள் திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் (honeylaksh@gmail.com)
நன்றி நண்பர்களே.

**************************************************

மிக்க நன்றியும் அன்பும் மகிழ்ச்சியும் ரத்னவேல் சார். !!! 

இத்துடன் டபிள் தமாக்கா வாக நமது மதிப்பிற்குரிய மூத்த பதிவர், மூன்று நூல்களின் ஆசிரியர், தொடர்ந்து வலைப்பூக்களில் சிறப்பாக செயல்பட்டு வரும்  திரு. கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுடைய வலைப்பூவில் பெண்பூக்களுக்கான புகழுரை நேற்று வெளியாகி உள்ளது. மிக்க நன்றியும் அன்பும் வணக்கங்களும் மகிழ்ச்சியும் சார்.

இதை பாருங்க. 

தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’

************************************************************

என்னுடைய கவிதைத் தொகுதியான பெண் பூக்கள்
 

My books  available at

Discovery Book Palace
New Book Land
Aashiq book centre, vadapalani
Maran book centre, kodambakkam

சென்னை கே கே நகரில் இருக்கும் டிஸ்கவரி புத்தக நிலையம்,

ந்யூ புக் லேண்ட்,

ஆஷிக் புக் செண்டர், வடபழனி

மாறன் புக் செண்டர், கோடம்பாக்கம்

Pen Pookkal available at

Chennai
New Book land
maran book centre
Aashiq book centre
Discovery book palace
UG book stall
Panuval book shop
Kanthalagam book shop

Madurai
Malligai Book centre
Bharathi Puththagaalayam


Kanchipuram.
Pathi book shop


NCBH, Vellore
Book Station, Vellore. 
எனது நாலாவது நூல் “பெண் பூக்கள்  கவிதைத் தொகுதி 

சென்னையில்

நியூ புக் லேண்ட்
மாறன் புக் செண்டர்
ஆஷிக் புக் செண்டர்
டிஸ்கவரி புக் பேலஸ்
யூஜி புக் ஸ்டால்
பனுவல் புக் ஷாப்
காந்தளகம் புக் ஷாப் 

மதுரையில்

மல்லிகை புக் செண்டர்
பாரதி புத்தகாலயம்


காஞ்சிபுரம் 
பதி புத்தக நிலையம்.

வேலூர்
என்சிபிஹெச்
புக் ஸ்டேஷன்.
 
ஆகியவற்றில் கிடைக்கும். 


--- என்றும்  உங்கள் பேராதரவை வேண்டுகிறேன் மக்காஸ்  :) 

 அன்பும் நன்றியும். தேனம்மைலெக்ஷ்மணன். 6 கருத்துகள்:

 1. இனிய வாழ்த்துகள் தேனம்மை... ஒற்றைப்பூவே மனம் கொள்ளை கொள்கிறதே.. ஒரு தோட்டமே எனில்... எப்படியிருக்கும்... வாசிக்கும் வாய்ப்புக்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. நூல் விமர்சனம் அருமை. நூலாசிரியருக்கு வாழ்த்துக்கள். பகிர்ந்த திரு ரத்னவேல் ஐயாவுக்கு நன்றி. வாய்ப்பு கிடைக்கும்போது விக்ரமம் என்னும் இடத்தில் நாங்கள் பார்த்த புத்தர் சிலையைப் பற்றிய அனுபவப்பகிர்வைக் காண வருக. http://ponnibuddha.blogspot.com/2015/11/blog-post.html

  பதிலளிநீக்கு
 3. நன்றிப்பா கீதா

  நன்றி ஜம்பு சார் வருகிறேன் :)

  நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றி வெங்கட் சகோ

  நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...