ஞாயிறு, 1 நவம்பர், 2015

உணர்வுகள் :-உணர்வுகள் :-

*இனம் தெரியாத்
தாவரங்கள்
வேர் பதிக்கும்.
மண்புழுவாய்
யதார்த்தம் கிளறும்.
கப்பும் கிளைகளும்
பூக்களுமாய்ச் சிரிக்கும்.
நிழல் கிடைக்கத்
தலை கொடுக்கும்.

*சித்திரையின்
பாளங்களில்
வேர்கள் சாம்பலாகும்.
அணுவெடித்த
பாலைகளாய்
ஊனம் உறையும்
மரம் குச்சிகளாய்
மாற்றம் பெறும்.


4 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ரசித்தேன்.

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

அருமை!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ

நன்றி சுரேஷ் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...