எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

உறவுகள் முக்கியம் எனக் கூறும் மணிவிழாத் தம்பதி புவனேஸ்வரி மணிகண்டன்

 உறவுகள் முக்கியம் எனக் கூறும் மணிவிழாத் தம்பதி புவனேஸ்வரி மணிகண்டன்

 





புவனேஸ்வரி மணிகண்டன் எனக்கு முகநூலில் அறிமுகமான தங்கை. இளமையானவர், இனிமையானவர். புத்தகப் பிரியை. எப்படி என்றால் அலுவலக வேலை, வீட்டு வேலை இவற்றுக்கு இடையிலும் இடையறாது வாசிப்பவர். வாழ்க்கையை அதன் நுட்பங்களோடு சுவாசிப்பவர். உறவுக்ளை நேசிப்பவர். அவர் கணவர் மணிகண்டன். இருவரும் ஒருவரை ஒருவர் ஆத்மார்த்தமாகப் புரிந்து கொண்ட ஆதர்சத் தம்பதிகள்.

 

புவனாவுடன் கூடப்பிறந்தவர்கள் நால்வர். மணிகண்டனுடன் கூடப்பிறந்தவர்கள் ஏழு சகோதரிகள். இவர்கள் அனைவருக்கும் திருமணமானபின்புதான் புவனா மணிகண்டன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இப்போது இவர்கள் அனைவரும் சூழ இத்தம்பதிக்கு சஷ்டியப்தபூர்த்தியும் சிறப்பாக நடந்தது. உறவுகளுக்கும் உடன்பிறந்தவர்களுக்கும் இவர்கள் கொடுத்த முக்கியத்துவமும் அவர்கள் இவர்களைக் கண்ணெனக் கருதுவதும் விழாவில் வெளிப்பட்டது. இந்த நெகிழ்வில் மகிழ்ந்த நான் புவனாவிடம் அவரது குடும்பம் பற்றி விசாரித்தேன்.

 

”தென்னார்க்காடு மாவட்டம் கடலூர்ல பிறந்தேன்அப்பா ஹோட்டல் வைத்திருந்தார்அம்மா முதல்ல ஹவுஸ் ஒய்ப்பின்னாளில் ஓட்டலுக்கு தோசை மாஸ்டர் மற்றும் கடைக்கான எல்லா வேலையும் செய்வாங்கநாங்க மொத்தம் 5 பேர்நான் முதல் பெண். எனக்கு அடுத்த தங்கை பரதநாட்டிய ஆசிரியைஅடுத்து தம்பி india piston laவேலை பார்த்துக்கொண்டு இருந்தவன் வாலண்டரி ரிடையர்மெண்ட் வாங்கி விட்டு அப்பாவின் வழியில் அவனும் ஒட்டல் வைச்சிருக்கான்அடுத்த இரு தங்கைகளும் ஹவுஸ் ஓய்ப் தான்படித்தது அரசுப்பள்ளி கடலூர்அப்பா ஹோட்டல் வைத்து இருந்ததால் எல்லா புத்தகங்களும் வாங்குவார்அதனால அப்பலேர்ந்து கையில புத்தகம் இருந்தா வேறு தேவையில்ல ரகம்.

 

அப்பாவின் சாயலில் இருப்பேன் நான்இப்போது அப்பா இல்லாவிட்டாலும் எல்லோரும் அவர் மகளாக என்னை அடையாளம் காண்பது மகிழ்ச்சிஅப்பா பார்ட் டைம் நாடக நடிகர்அழகு மைனா எனும் நாடகத்தில் மெயின் கேரக்டர் அவர் என்பதால் அழகு தண்டபாணி என சொன்னால் கடலூரில் பலரும் அறிவார்கள்.

 

மனோகரின் நாடகங்களை இவர்கள் ரீக்ரியேட் பண்ணி நடித்திருக்கிறார்கள்நான்கு பெண்களையும் ஒரே விதமாகப் பார்த்துக் கொண்டவர்கள்.எங்க வகுப்பில் கெளசல்யா சுமதி மற்றும் நான் என முதல் மூன்று ரேங்க் எங்களுக்குத்தான் இருக்கும்.

 

அப்பா எங்களைத் தனியே எங்கும் அனுப்ப மாட்டார்அனைவருமாகத்தான் எங்கும் போவோம்வெள்ளிக்கிழமை புதுப்படம் ரிலீஸ் என்றால் அன்று இரவு அல்லது சனிக்கிழமை இரவு குடும்பமாகப் படம் பார்ப்போம்தீபாவளி ரிலீஸ் நிழல்கள், வெள்ளை ரோஜா என்று படங்களுடனும் புத்தகங்களுடனும் வாழ்ந்த காலம்

 

பாலகுமாரனின் அகல்யாவை, முதல் முதலாக அவர் எழுத்தை படித்து அவரோட ரசிகையானேன்கல்லூரிப் படிப்பும் கடலூர்லதான்ஆங்கில இலக்கியம் படித்தேன்கூடவே டைப்ரைடிங் மற்றும் ஷார்ட் ஹேண்ட் ஹையர்அதுதான் இப்ப சோறு போடுது

 


காலேஜ்
 முடித்தவுடன் அப்போ பாங்க் ஆப் மதுரா இப்போ ஐசிஐசிஐ வங்கியா  மாறி இருக்கு.அங்க லீவ் வேகன்சி ஜாப் பண்ணினேன்எல்லா செக்ஷன் வேலையும் செய்து இருக்கேன்கேஷ் தவிர. நடுவுல அரசு வேலைக்கான தேர்வுகள் எழுதியும் எதுவும் சரிப்படாம தம்பிக்கித் தெரிஞ்சவங்க வேலை இருப்பதாகச் சொல்ல 1995 சென்னை வந்தேன் இப்போ இருக்கும் கம்பெனில சேர்ந்தேன்கிட்டத்தட்ட 28 வருடம்

 

நான் ஆபிஸ்ல சேரும் போது ஒனர் நரேந்திர குமார் ஜெயின்மார்வாடிகளுக்கு நம்ம மேல நம்பிக்கை வந்ததுன்னா நமக்கு நம்ம வாழ்க்கைக்கான உதவிகளைச் செய்வாங்க. முதல்ல டைப்ரைட்டர் மட்டும்தான்அதுல வேலை பண்ணிக்கொண்டு ஆபிஸ்ல இருக்கும் மற்ற வேலைகளையும் கத்துக்கொண்டு செய்தேன்.98 computer வாங்கப் போறேன் நான் பணம் கட்டறேன் நீ கத்துக்கோன்னு அவர் என் முன்னேற்றத்திற்காகச் சொன்னார்.

 

அதுக்குள்ள தங்கைகள் திருமணம் முடிந்ததுஇரண்டாவது தங்கை அம்மாவின் தம்பியையே திருமணம் செய்துக்கொண்டாள்அடுத்தவள் அம்மாவின் மாமா மகனைகடைசித் தங்கை காதல் திருமணம். 2000த்தில் தம்பி திருமணம் அதுவும் காதல் திருமணமேஅப்பாவும் அம்மாவும் எல்லாரும் சந்தோஷமா இருந்தா போரும் என பிள்ளைகளுக்கு விட்டுக் கொடுத்தார்கள் அவர்கள் சந்தோஷங்களை. தம்பி டிரெயினிங்க்கு சென்னை வந்து அந்தப் பணத்தில் முதல் கறுப்பு வெள்ளை டிவி வீட்டுக்கு வந்தது.

 

தம்பி திருமணம் முடிந்தவுடன் திரும்ப என் திருமணம் பற்றி ஆரம்பித்தார்கள்முதல் தங்கை திருமணம் முடிந்த பின் வந்த ஒரு வீட்டார் குண்டாக இருக்கும் பெண் வேண்டாம் எனச் சொல்ல திருமணப் பேச்சே எடுக்காமல் இருந்தவர்கள் திரும்ப ஆரம்பித்தார்கள்.

 

தெரிந்த ஒரு சொந்தம் மூலமாக வந்தவர்தான் மணிகண்டன்அவங்க குடும்பத்திலும் அவர் ஒரே மகன்ஏழு அக்கா தங்கைகள்அனைவர் திருமணமும் முடித்து அவருக்குப் பார்க்க 37 வயது.

 

ஒரு வழியாகக் கல்யாணம் முடிந்தது. 2001 இல் மகன் பவன் பிறக்க வாழ்க்கை ஒட ஆரம்பித்ததுநான் அலுவலகத்தில் சேர்ந்த போது ஒனராக இருந்தவர் நரேந்திர குமார் ஜெயின்என் மேல் அவ்வளவு நம்பிக்கை. 95இல் சேர்ந்த எனக்கு 2000த்தில் திருமணம்அப்போது எனக்கு மூணு பவுனில் தாலிச்சரடு வாங்கிக் கொடுத்து அப்பாவின் பாரத்தை குறைத்தார்.

 

என் குடும்ப உறவுகள் பற்றி அவரும் அவர் உறவுகள் பற்றி நானும் நன்கு தெரிந்து வைத்திருந்தோம். 2013இல் மும்பை போய்விட்டு வந்தவர் மதியம் வந்து கடிதங்கள் கொடுக்கிறேன் என்று சொல்லிச் சென்று திரும்பவே இல்லைமாரடைப்பால் மரணம்அப்பா அம்மா இறப்புக்கு பின் வருத்தப்பட்ட சம்பவம்

 

அப்பா அம்மா பாட்டி என மூவரையும் ஒரே வருடத்தில் இழந்தேன்அப்பாக்கு பல வருடங்களாக இருந்த சக்கரை நோயால் உடல் உறுப்புகள் செயலிழந்து இறந்தார்அடுத்த ஆறு மாதத்தில் பாட்டிஅடுத்த மூன்று மாதத்தில் அம்மாஅம்மாக்கு முதல் முதலில் கர்ப்பபை கான்சர்அதில் சரியாகி பின் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் இறந்தார்கள்இந்த வெறுமையை போக்க முகநூல் போக அங்கு அக்காக்களும் அண்ணாக்களும் தம்பிகளும் தோழிகளும் கிடைத்தார்கள் பொக்கிக்ஷமாக

 

2013க்கு பின் நந்து சாரின் அண்ணன் மற்றும் அவரின் மகன் பொறுப்பேற்க 2023வரை ஒடிவிட்டது வாழ்க்கைநிறைய நிறை குறைகளுடன்ஆரம்பத்துல சாமில்லாம் அவ்வளவாகக் கும்பிட்டதில்லைஇப்ப எது நடந்தாலும் அது நல்லதுக்குன்னு போய்டறதுமுகநூல் நட்பு வழியாக பாலகுமாரன் அவர்களை நேரில் சந்தித்தேன்.

 

எங்கள் உறவுகளும் உடன்பிறப்புக்களும் சூழ ஒரு வழியாக இந்த வருடம் மணிவிழாவும் கொண்டாடி விட்டோம்இறை அருளால் மகனுக்கு வேலை அமைந்தால் இருவரும் கொஞ்சம் ஒய்வு எடுக்கலாம்இறை சித்தம்வாழ்க வாழ்க

 

இப்போது என் மகன்தான் என் முதல் தோழன்.  மாமியார்  நாத்தனார் அப்பா எல்லாம்இருவரும் கோபமும் படுவோம் உடனே பேசியும் கொள்வோம்எங்கு போனாலும் அந்த இடத்துக்கு ஏற்றாற் போல இருப்பான்எல்லோரிடமும் பற்றும் பாசமும் உண்டுஅவன்தான் ஒடி ஒடி இப்போது நடந்த மணிவிழாவைச் சிறப்பாக்கினான்சீக்கிரம் நல்ல வேலை கிடைத்து நல்லா இருக்கணும் என்பதே பிரார்த்தனை.”

 

அருமை புவனா. உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் உங்கள் உறவுகளுடனும் தகப்பன் சாமியான நரேந்திரகுமார் ஜெயின் அவர்களுடனும் பயணித்தோம். நீங்களும் மணிகண்டன் சாரும் உறவுகள் சூழ இன்னும் சதாபிஷேகம் கனகாபிஷேகம் கண்டு வாழ வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...