எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 12 பிப்ரவரி, 2024

வெளிநாட்டு நாணயங்கள். காயின் கலெக்ஷன் - 2. சிங்கை, மலேஷியா, எமிரேட்ஸ். அமெரிக்கா.

 அமீரக நாணயங்கள். எமிரேட்ஸ். திர்ஹாம்கள். 

இவற்றின் சரியான மதிப்புத் தெரியவில்லை. பேரீச்சை மரங்கள், வாள், மான், டால்ஃபின், நீர்க்குடுவை, மினார்கள் ஆகியன காணப்படுகின்றன. 


சிங்கப்பூர் நாணயங்கள். இரட்டைச் சிங்கங்கள் பொரிக்கப்பட்டவை. 



மஜூலா சிங்கப்பூரா என்று எழுதப்பட்டுள்ளது. பிறையும் ஐந்து நட்சத்திரங்களும் கொண்ட சிங்கப்பூரின் கொடியை இரட்டைச் சிங்கங்கள் பிடித்துள்ளன. இதில் ஒன்று இரட்டைவால் சிங்கம்.


ஒரு வெள்ளி, 50 செண்ட், 20 செண்ட், பத்து செண்ட், ஐந்து செண்ட் நாணயங்கள் இடம்பெற்றுள்ளன. 


மலேஷிய நாணயங்கள். ரூபாய் நோட்டுக்களில் நம்மூர் ரிசர்வ் வங்கி மாதிரி பேங்க் நெகாரா மலேஷியா என்ற பெயர் பொரித்த நாணயங்கள். 50, 20, 10, 1 சென் நாணயங்கள்


நாணயம் பொரித்த பக்கம் மலேஷியாவின் தேசிய மலரான செம்பருத்தி இடம்பெற்றுள்ளது. இன்னொரு பக்கம் பிறை, சூரியன், பாராளுமன்றம் போன்றவை இடம்பெற்றுள்ளன. 


அமெரிக்கா மற்றும் பலநாட்டு நாணயங்கள்.


டாலர்கள் மற்றும் யூரோ நாணயங்கள். 



உதிரி யூரோக்கள்  - ஒரு கலெக்ஷன். 



இவையும் மகன் ஊருக்கு வரும்போது செலவுக்குக் கொடுத்துவிட்டது. சிலவற்றைச் செலவழித்தபின் மிச்சம் உள்ளவை இவை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...