எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

நொய்(த)யல்..


ஆற்றில் போட்டாலும்
அளந்து போடு..
சொல்லிக் கொடுக்கப்பட்ட
பழமொழி
சரியாகச் சேரவில்லை..
சாயப்பட்டறைக்காரர்களுக்கு.,
கடல் வரை
நீட்ட உத்தேசித்துக்
கையறு நிலையாய்க்
கிடத்தியதுதான் மிச்சம்..
வயலும் இல்லாமல்
வாழ்வும் இல்லாமல்
வெளிநாட்டின்
மானம் காக்கும் உடைகளில்
காயடித்துக் கிடக்கிறது..
கிழிக்கப்பட்ட தோலுடன்..
சாயம் பூசி நொய்யல்..

12 கருத்துகள்:

  1. //வெளிநாட்டின்
    மானம் காக்கும் உடைகளில்
    காயடித்துக் கிடக்கிறது//

    அருமை அருமை...

    பதிலளிநீக்கு
  2. ஆறு உயிர் வாழ்விடம் - முன்பு
    உயிர் கொல்லுமிடம் - இன்று

    பதிலளிநீக்கு
  3. நொய்யல் ஆற்றில் மற்றவர்கள் கலந்த மாசு அந்த ஆற்றை நோக வைத்து இவ்வ்வளவு ஆண்டுகளும் ஆகிவிட்டன.
    உங்கள் கவிதை அந்தச் சோகத்தை வெளியிடுக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் தேனக்கா !

    பதிலளிநீக்கு
  5. நன்றி கதிர்., சித்ரா., மனோ., ராமலெக்ஷ்மி., பாலாஜி., கோமதி., ஆர்.ஆர்.ஆர்., வல்லிசிம்ஹன்., பாரத்., குமார்., ஹேமா., மலிக்கா., ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...