எனது நூல்கள்.

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

பங்குச் சந்தை முதலீடு ஆலோசனை (2) டீமேட் அக்கவுண்ட்.


நம்முடைய பணத்தை வங்கியின் ஃபிக்சட் டெப்பாசிட்., ரெக்கரிங் டெப்பாசிட்., அஞ்சலக முதலீடு., இன்ஷுயூரன்ஸ்., ரியல் எஸ்டேட்., தங்கம்., வெள்ளி., பங்குச் சந்தை., பாண்டுகள் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.

இதில் பங்குச் சந்தையில் நாம் முதலீடு செய்யும் பணத்தில் 5 % ஆவது ஒரு மாதத்தில் லாபமடையலாம் என ஒரு பங்குச் சந்தை நிபுணர் கூறினார். இது சரியான முறையில் ட்ரேடிங் செய்யும் பங்குகளுக்கானது.

தேசிய பங்குச் சந்தை (NSE) ., மும்பை பங்குச் சந்தை (BSE) இவற்றில் ட்ரேடிங் செய்யலாம். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முதலில் டீமேட் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டும். இதற்கென்று செபி பதிவு பெற்ற தரகர்கள் இருக்கிறார்கள்.

இந்த பங்குச் சந்தை அலுவலகத்தில் சென்று நாம் ஷேர் செய்வதற்காக டீமேட் ( DEMAT ) அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முதலில் நமக்கு ஷேர்களுக்கு ஒரு ட்ரேடிங் கணக்கு ஆரம்பிக்க வேண்டும். நாம் கொடுக்கும் பணத்தை வைத்துதான் ட்ரேடிங் ஃபண்டை ரிலீஸ் செய்து பங்குகளை வாங்கி டீமேட் அக்கவுண்டுக்கு அனுப்புவார்கள்.. நமக்கு தேவையான போது பங்குகளை விற்று டீமேட் அக்கவுண்டிலிருந்து எடுத்து சந்தைக்குக் கொடுத்து பிறகு பணம் சந்தையிலிருந்து வந்தவுடன் செக்காக பெற்றுக் கொள்ளலாம்.

டீமேட் அக்கவுண்ட் ஆரம்பிக்க பான் கார்டு., ரேஷன் கார்டு நகல்களை கொடுக்க வேண்டும். மற்றும் அவர்கள் கொடுக்கும் ஃபார்ம்களை நிரப்பி., நம் வங்கிக் கணக்கையும் கொடுக்க வேண்டும்.

வங்கிக் கணக்கு கொடுத்து ., டீமேட் அக்கவுண்டும்., ட்ரேடிங் அக்கவுண்டும் ஓபன் ஆகிவிட்டால் நாம் முதலில் கொடுக்கும் செக்கை ரிலீஸ் செய்து நம் அக்கவுண்டில் நாம் கேட்கும் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவார்கள். இதில் வங்கி அக்கவுண்ட் என்பது பணத்தை காசோலையாகத்தான் பெறவேண்டும் என்பதால். டீமேட் அக்கவுண்ட் என்பது நம் பங்குகளை வாங்கி வைப்பது . ட்ரேடிங் அக்கவுண்ட் என்பது பங்குகளை வாங்கி விற்பது.

பங்குகள் வாங்க நாம் ஃபோன் மூலம் ஆர்டர் கொடுக்கலாம். டிவி பார்த்தும்., எகனாமிக் டைம்ஸ்., காப்பிடல் மார்க்கெட் பார்த்தும்., ஆர்டர் கொடுக்கலாம். என்.டி.டி.வி., சி.என்.பி.சி போன்ற தொலைக் காட்சிகளில் கம்பெனிகளின் ஷேர் விலை ஏற்ற இறக்கங்கள் ஏ முதல் இஸட் வரை ஓடிக் கொண்டே இருக்கும். அதைப் பார்த்து நமக்கு வேண்டிய பங்குகளை வாங்கலாம். ஏறிய பின் விற்று விட்டு அடுத்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம். பணம் தேவை என்றால் நம் அக்கவுண்டில் இருக்கும் தொகைக்கேற்ப ., தேவைக்கேற்ப செக்காக பெற்று நம் வங்கிக் கணக்கில் மாற்றி பணமாக பெற்றுக் கொள்ளலாம்.

இதன் மூலம் பங்குகள்., இண்டக்ஸ்கள்., கமாடிடீஸ் ., கோல்ட் ., சில்வர் ஃப்யூச்சர்ஸ் எல்லாம் வாங்கலாம்.

இந்த முறையில் வங்கி மற்றும் நிறுவனங்களின் பாண்டுகளையும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு நம் ஷேர் புரோக்கரிடம் சொல்லி ஃபார்ம் வாங்கி ஃபில் செய்து செக் கொடுத்தால் அவர் அந்த பாண்டுகளை மற்றும் இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்க்ஸ்களை., நமக்காக வாங்கிக் கொடுப்பார். இது குறிப்பிட்ட காலம் வரை வைத்து பலன் பெறக் கூடியதாக இருக்கும். மெச்சூரிட்டி சமயம் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து சிலசமயம் மாறுபாடு அடையலாம்.

டிஸ்கி:- இந்த பாண்டுகளை எங்கு வாங்குவது என சகோ சசி பின்னூட்டத்தில் கேட்டதால் இந்த விவரங்கள்..:))

24 கருத்துகள் :

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

முதல் வணக்கம்..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

பதிவு.. அருமை..
விரிவான தகவல் ..
தொடருங்கள்..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ada//..அட.. என்ன திடீர்னு படைப்புலகில் இருந்து பிஸ்னெஸ்க்கு போய்ட்டீங்க.. ம் ம்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சௌந்தர்..:))

Thenammai Lakshmanan சொன்னது…

செந்தில் உருப்படியா எதாவது சொன்னீங்களா சமூகத்துக்கு பயன் படுற மாதிரின்னு யாரும் நம்மை கேட்டுறக் கூடாதுல்ல..:))

சக்தி கல்வி மையம் சொன்னது…

நன்றி இதுவரை நான் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி

தமிழ் உதயம் சொன்னது…

கொஞ்சம் கவிதை... கொஞ்சம் பங்கு சந்தை... சரி தானே மேடம்.

Menaga Sathia சொன்னது…

பகிர்வுக்கு நன்றி அக்கா!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நல்ல உபயோகமான தகவலா இருக்கே....

ஸாதிகா சொன்னது…

ரொம்ப எளிமையாகா சொல்லி இருக்கீங்க தேனம்மை.

Kurinji சொன்னது…

Very useful post and thanks for sharing...

kurinji kudil

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
இன்று தான் உங்கள் மற்ற பதிவுகளையும் படித்தேன். நன்றாக இருக்கிறது.
பங்குச்சந்தை பற்றி தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

பாரதிக்குமார் சொன்னது…

பங்கு சந்தையில் டீமேட் பற்றி விரிவான கட்டுரைக்கு நன்றி. நம் வாழ்க்கையில் சந்தைக்கு முக்கிய பங்கு இருக்கையில் பங்கு சந்தைக்கு உரிய இடம் தருவது அவசியம்தானே ... எனக்கும் ஒரு சந்தேகம் இருக்கிறது . டீமேட் கணக்கு ஆரம்பித்தபின் பங்கு பரிவர்த்தனை எதுவும் செய்யாமல் இருந்தால் கணக்கு காலாவதியாகிவிடுமா ? எத்தனை நாளுக்கு அப்படி இருக்கலாம்?

Pranavam Ravikumar சொன்னது…

அருமை..!!!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி அக்கா.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

விரிவான தகவல்

பெயரில்லா சொன்னது…

வணக்கம் தோழி நல்ல பதிவு...

டீமேட் கணக்கு ஆரம்பித்தபின் பங்கு பரிவர்த்தனை எதுவும் செய்யாமல் இருந்தால் கணக்கு காலாவதியாகிவிடுமா ? எத்தனை நாளுக்கு அப்படி இருக்கலாம்? என்று பாரதி குமார் கேட்டுள்ளார் ..டீமேட் கணக்கானது வங்கி கணக்கு போல தான் ஆண்டுக்கு ஒரு முறை பராமரிப்பு கட்டணம்(150 to 400 ) செலுத்தினால் போதும் ...

ஜோதிஜி சொன்னது…

செந்தில் உருப்படியா எதாவது சொன்னீங்களா சமூகத்துக்கு பயன் படுற மாதிரின்னு யாரும் நம்மை கேட்டுறக் கூடாதுல்ல..:))

உங்கள் நல விரும்பிகள் போடாத பின்னூட்டம் உள்ள இடுகை இதுவாகத்தான் இருக்கும் போல.

திருந்தனும்ன்னு முடிவு செய்துட்டா என் முதல் வாழ்த்துகள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கருன்., ரமேஷ்., மேனகா., மனோ., ஸாதிகா., குறீஞ்சி., ரத்னவேல்.,ப்ரணவம் ரவிக்குமார்., அக்பர்., டிவிஆர்

Thenammai Lakshmanan சொன்னது…

பாரதி குமார் ரவிக்குமார் சொன்னதுதான்.. வருடத்துக்கு ஒருமுறை பராமரிப்பு கட்டணம் செலுத்தினால் போதும். அது கொஞ்சம் நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடும்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ரவிக்குமார் தகவலுக்கு..

நன்றி ஜோதிஜி.. !!! நீங்க என் நலம் விரும்பிதானே..!!!

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Unknown சொன்னது…

வர்த்தகத் தமிழுக்கு வணக்கம் ! எது நல்ல நீண்ட கால முதலீடு ? தங்கமா ? பங்குச் சந்தையா ? .....

Nagappan சொன்னது…

நல்ல முயற்ச்சி ....வாழ்த்துக்கள் !

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...