எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 28 பிப்ரவரி, 2011

பராமரிப்பு..


கிணற்று உறைகளுக்குள்
காம்பவுண்டுச் சுவர்களில்
கோயில் கோபுரங்களில்
மேங்கோப்புகளில்

தேவையற்றதெல்லாம்
செழித்து வளர்கிறது..
தண்ணீர் பூச்சி மருந்து
உரம் எதுவும் இல்லாமல்..



களை களையென
களைந்து களைத்து
அமிலம் ஊற்றினாலும்
கலைவதில்லை..

பாத்திகட்டி மண் அடித்து
இயற்கை உரம் போட்டாலும்
இளைத்துக் கிடக்கிறது சவலையாய்..
பார்த்துப் பார்த்துப் பராமரிக்கும் செடி..

டிஸ்கி:- பராமரிப்பு என்ற தலைப்பில் இந்தக் கவிதை 24. 02. 2011 யூத்ஃபுல் விகடனில் வெளிவந்துள்ளது..

28 கருத்துகள்:

  1. யதார்த்தமான கவிதை..உண்மையும் கூட...

    அக்கா நம்மபக்கம் வந்து ரொம்ப நாளாச்சே...

    பதிலளிநீக்கு
  2. பார்த்துப் பார்த்து நர்ஸரியில்
    வாங்கிய பதியன்கள்..
    ‘லிவர் க்யூர்’குழந்தைபோல்
    வீங்கிக் கிடக்க, எங்கிருந்தோ
    காகம் போட்ட எச்சத்தில்,
    விருட்சமாய் வளர்ந்தது,
    முருங்கை ஒன்று,
    நன்றாய் ஆரண்ய நிவாஸத்தில்!

    பதிலளிநீக்கு
  3. உங்களின் கவிதை யூத்புல் விகடனில் வெளியானதற்கு வாழ்த்துக்கள், அக்கா!

    பதிலளிநீக்கு
  4. /இளைத்துக் கிடக்கிறது சவலையாய்..
    பார்த்துப் பார்த்துப் பராமரிக்கும் செடி../

    நல்ல கவிதை தேனம்மை. யூத் விகடனிலேயே வாசித்தேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. வளர வேண்டியது வளராமலும், வளர கூடாதது வளர்ந்தும்... அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  6. ஆஹா..அழகிய செட்டி நாடு வீடுகளுடன் அருமையான கவிதை கொடுத்த தேனம்மைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  7. எளிமையான வரிகள்...அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

    வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
    கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  8. இதுதான் இயல்பாயிருக்கிறது என்றாலும் சிலசமயம் கோபமாய் வருகிறது வீட்டில் வளரும்
    பூங்கன்றின்மேல் !

    பதிலளிநீக்கு
  9. ஆமாக்கா...மண்டையில என்னதான் எண்ணெய் தேச்சாலும் வளராத தலை முடி , தாடையில கேக்காமலே வளருகிறமாதிரி ....!! அவ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  10. நிஜத்தை கவிதையில் புட்டு வைப்பதும் அழகு தான் தேனக்கா.

    பதிலளிநீக்கு
  11. எங்கள் வீட்டிலயும் இப்படித்தான் நடக்குது!

    பதிலளிநீக்கு
  12. உண்மையை அழகாய் எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  13. யூத்ஃபுல் விகடனிலேயே வாசிச்சுட்டேன்.. அருமையான கவிதை தேனம்மை..

    பதிலளிநீக்கு
  14. எப்பவும் போல உங்கள் கவிதை தூள் அக்கா

    பதிலளிநீக்கு
  15. மாறுப்பட்ட சிந்தனை பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  16. உரமிட்ட மண்ணில்
    தளைக்காததும்,
    உறைந்துவிட்ட மண்ணில்
    துளிர்ப்பதும்

    விந்தையே...

    அருமை தோழி

    பதிலளிநீக்கு
  17. எளிமையான யதார்த்தமான உண்மைகள்

    பதிலளிநீக்கு
  18. >>>தேவையற்றதெல்லாம்
    செழித்து வளர்கிறது..

    மகா நதில கமல் சொல்வாரே...

    நல்லவங்களுக்கு கிடைக்கவேண்டிய எல்லா மரியாதையும் கெட்டவங்களுக்கும் கிடைக்குதே...அது ஏன்?

    பதிலளிநீக்கு
  19. உண்மைதான். கூவத்தின் ஓரங்களில் வாழ்வோருக்கு மலேரியா வருவதில்லை எனக் கேள்விப்பட்டிருக்கிறேன் :-)

    பதிலளிநீக்கு
  20. நன்றி கருன்.

    கவிதை அருமை ஆர் ஆர் ஆர்

    நன்றி சித்து

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி ers

    நன்றி ரமேஷ்

    நன்றி ஸாதிகா.,

    நன்றி தமிழ்வாசி..

    நன்றி ஹேமா..

    நன்றி ஜெய்.. அவ்வ்வ்..

    நன்றி ஆசியா.,

    நன்றி மாதேவி

    நன்றி மாதவி

    நன்றி சாரல்

    நன்றி குமார்

    நன்றி சசி

    நன்றி சௌந்தர்..

    நன்றி கருணா

    நன்றி சந்தான சங்கர்

    நன்றி வேலு

    நன்றி பித்தனின் வாக்கு

    நன்றி அருணா

    நன்றி செந்தில்.. உண்மை..

    நன்றி குட்டிப்பையா..

    பதிலளிநீக்கு
  21. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  22. இளைத்துக் கிடக்கிறது சவலையாய்..
    பார்த்துப் பார்த்துப் பராமரிக்கும் செடி./
    உண்மை..

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...