
வாசலில் அத்தப்பூ கோலத்தோடு., விநாயகர் வணக்கத்தோடு.., தொடங்கியது விழா.. டெல்லியை சேர்ந்த அபினவ் பப்ளிகேஷனின் பதிப்பாளர் ஷக்தி மாலிக் கௌரவிக்கப்பட்டார். பிறகு சென்னை ரியாலிட்டி கிராஃபிக்ஸின் '"A SAREE IS BORN " என்ற குறும்பட திரையிடப்பட்டது. இதை எடுத்தவர் அன்பிற்குரிய நண்பர் அருண்குமாரும் அவர் மனைவி தனமும்.. மிகச் சிறப்பாக இருந்தது. மல்பெரி இலைகளில் இருந்து மனங்கவரும் புடவை உருவாவது வரை அணு அணுவாக விவரிக்கப்பட்டிருந்தது.
ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட திருமதி நேசா ஆறுமுகத்தின் SILK SAREES OF TAMIL NADU and A Dictionary of Silks in India என்ற புத்தகங்களின் வெளியீடுதான் அது. இவர் மலேசியாவில் வளர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார்.. குமரன் சில்க்ஸில் பட்டுப் புடவைகள் வாங்கி வெளிநாடுகளில் தேவைபட்ட நண்பர்களுக்கு அனுப்புகிறார்.. பட்டுப் புடவைகள் மேல் தனக்கு ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக தறிகளுக்கு சென்று நெசவாளர்களை சந்தித்து கிட்டத் தட்ட 6 ஆண்டுகள் பெருமுயற்சிக்குப் பின் உருவான புத்தகம் இது.
காஞ்சீபுரம்., பனாரஸ்., ஆரணி ., தர்மாவரம் ., காரைக்குடி., திருப்புவனம்., ஆகிய இடங்களுக்கு சென்று நெசவுக்கலைஞர்களை பேட்டி கண்டு சரியான விபரங்களுடன் தொகுக்கப்பட்ட நூல் இது ..
புடவைகளில் போடப்படும் டிசைன்கள்., பயன்படுத்தும் கருவிகள்., நெசவு பேச்சு வழக்கு., நூல் வகை., சாயமேற்றுதல் என பலவும் கண்டு., கேட்டு., விசாரித்து அற்புதமாக படைத்திருக்கிறார்.. இதில் டிவைனிட்டியை பார்ப்பதாக கூறினார். ஆங்கிலம் பேசியே வளர்ந்தாலும் அவர் நம் புடவைகளில் கையில் கிளியோடு பெண் உரையாடுவதை .
” வள்ளி கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும் உள்ளம் மகிழுதடி கிளியே “ என்று பேசுவதாக கூறி சிலாகித்தார்.. புடவை நெய்பவர்கள் தொடங்கும் போது மிகவும் புனிதமாக அச்செயலை குடும்பத்தோடு தொடங்குவதாக கூறினார்.. மனைவி குளித்துவிட்டு கோபாலனை வணங்கி நெசவு தறியை தொட்டுக் கொடுக்க ., கணவன் அமர்ந்து தறி நெய்வதை குறிப்பிட்டார்.. குடும்பத்தினர் அனைவரும் இதில் பவித்திரமாக ஈடுபட்டு நெய்வதால் அந்த பட்டு தெய்வத் தன்மைக்கு நிகரானது என கூறினார்.
“நம் வாழ்க்கையை நெய்யும் கடவுள் என்னும் நெசவாளிக்கு ஒப்பானவர்கள் அவர்கள் “ என கூறினார் .
காஞ்சீபுரத்தின் சேலைகள் உலகத்தரம் வாய்ந்தவை. அவ்வளவு கவனத்தோடும் அக்கறையோடும் அவர்கள் உருவாக்கும் தாழம்பூ டிசைன்., வாழைப்பூ., அன்னப் பட்சி., மயில்., கிளி என அனைத்து உருவங்களையும் ப்ரேமையோடு விவரித்தார்..
ஆங்கிலத்தில் உரையாடினாலும் கேட்பதற்கு மிக சரளமாகவும்., அணுக்கத்திற்குரியதாகவும் இருந்தது அவரது பேச்சும்., புன்னகையும்.

நேசமலராக தான் அறிந்த நேசா பற்றிக் கூறுகையில்.. புடவைகளில் நெய்யப்படும் குதிரை டிசைன்கள் கோயில் வாகனங்களில் எடுக்கப்பட்டதாக தான் கருதியதாகவும்., நேசா அவை நம் ஐயனார் கோயில் குதிரைகளில் இருந்து எடுக்கப்பட்டது என ஆதாரத்துடன் விவரித்ததாகவும் கூறினார்.
திருமதி வி. ஆர் . தேவிகா.. நேசா அவர்களின் தோழி.. அவர் இந்தப் புத்தகத்தை வெளியிட்டார்..
குமரன் சில்க்ஸின் உரிமையாளர் திரு ராமமூர்த்தி அவர்களின் துணைவியார் தேவகி முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
இரண்டாவது பிரதியை திரு வீரப்பன் அவர்களின் து்ணைவியாரும்., மூன்றாவது பிரதியை திருமதி கோபாலகிருஷ்ணனும் பெற்றுக் கொண்டார்கள்.
திரு ஷக்தி மாலிக் புத்தகத்தின் பிரதியை குமரன் சில்க்ஸ் திரு மணி பெற்றுக் கொண்டார்.
அடுத்து பட்டுப் புடவை பரேடும் நடைபெற்றது. 9 கஜம் புடவையை ஐயங்கார் பாணியில் உடுத்தி திருமதி அனுராதா நிகேத்..
நாராயணியும்., அனுராதாவும் ஐயங்கார் பாணி புடவைக் கட்டில்..
பெண்களின் மெல்லிய மனோபாவங்களோடு அற்புதமாய்.. நேசா அனைத்தையும் விளக்கி சொல்லி ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டுமிருந்தார்.
தேவதாசி முறையிலான புடவைக்கட்டு..
தேவதாசி முறையிலான புடவைக்கட்டு தஞ்சை மற்றும் மயிலாப்பூர் கோயில்களில்.. அனிதாவும் அப்சராவும்.
கண்ணகியின் புடவைக்கட்டில் ப்ரியா..
மாடர்ன் புடவைக்கட்டில் ஹரிதா.
நவீன பாணி புடவைக்கட்டில் லலிதாவும்., ஹரிதாவும்.
மிக அழகான புடவைக்கட்டில் ஹரிதா..













மிக அழகான அம்மாக்கள் புடவைக்கட்டில் ஜெயா..
ப்ரிட்டிஷ் காலத்து அழகான ரிச் ஸ்டைல் புடவைக் கட்டில் லலிதா., சுதா.
கனடாவின் லலிதா மார்டன் புடவைக் கட்டில்..
மாடர்ன் புடவைக் கட்டில் ராதா..
பாரம்பரிய புடவைக் கட்டில் ரதி..
கொங்கு நாடு புடவைக் கட்டில் சந்தியா..
பாரம்பர்ய புடவைக் கட்டில் யசோதா..
யசோதா பாரம்பரிய பாலும் பழமும் புடவையில்..
தமிழ் வணக்கம்..
பாரம்பரிய தமிழ் வணக்கத்தோடு நிறைவுற்றது விழா.. மிகப் பிரம்மாண்டமாண குளிரூட்டப்பட்ட அரங்கம் . .வெளியே மல்லிகைப் பூ., வெளிநாட்டு மிட்டாய்கள் அடங்கிய அழகிய தங்க நிற பெட்டி ., சாஃப்ட் கேக்., மினி சமோசா., தண்ணீர்., காஃபி., டீ., செயற்கை இனிப்பூட்டி போட்டுக் கொள்ள தனி காஃபி ., டீ என பக்காவான அரேஞ்மெண்ட்.. ஒரு பக்கம் நெசவாளர்களின் கருவிகள் அனைத்தும் கண்காட்சி வைக்கப் பட்டிருந்தது..









கேட் வாக்கில் புடவையில் அசத்தியவர்கள் அனைவரும் 40 ., 50 வயது உடைய பெண்கள்.. மிக அற்புதமாக., வித்யாசமாக இருந்தது விழா..
இந்த புத்தகத்தை நேசா தன் மாஸ்டர் பீஸாக வெளியிடுவதால் எல்லாம் நிறைவாக அமையும்படி செய்துவிட்டார்..
முத வெட்டு
பதிலளிநீக்குநெசவாளக்குடும்பத்தில் பிறந்த என்னைக்கவர்ந்த டைட்டில்.. பதிவும் படங்களும் அழகு
பதிலளிநீக்கு//வெளிநாட்டு மிட்டாய்கள் அடங்கிய அழகிய தங்க நிற பெட்டி ., சாஃப்ட் கேக்., மினி சமோசா., தண்ணீர்., காஃபி., டீ., செயற்கை இனிப்பூட்டி போட்டுக் கொள்ள தனி காஃபி ., டீ என பக்காவான அரேஞ்மெண்ட்.. //
பதிலளிநீக்குமிஸ் பண்ணிட்டியேடா சசி
செம கலெக்ஷன், புகைபடங்களோட!!
பதிலளிநீக்குசெம கலெக் ஷன், புகைபடங்களோட!!
பதிலளிநீக்குஅக்கா, விழாவை பற்றி எங்களுக்குத் தெரிவிப்பதோடு, நிறைய படங்களுடன் பதிவு, ஜொலிக்குது. சூப்பர், அக்கா!
பதிலளிநீக்குபடிக்கப் பார்க்க வெகூ சுவை. நானும் கும்மாரன் போய்ய்ப் பார்க்கிறேன்:)
பதிலளிநீக்குதலைப்பே மிக சிறப்பாக இருக்கிறது... அத்துடன் படங்களும் வெகு அழகு!!
பதிலளிநீக்குநிகழ்ச்சியினை நேரில் கண்டதைப்போல் ஒரு உணர்வு!
உங்கள் எழுத்துக்களுடn போட்டிப்போடுகின்றன புகைப்படங்கள்.பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅருமையா இருக்கு..நேரா பார்த்தாப்பலயே..:)
பதிலளிநீக்குநன்றி செந்தில்குமார்., சசி., குட்டிப்பையா., சித்து., வல்லிசிம்ஹன்., ப்ரியா., சரவணன்., முத்துலெட்சுமி.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
//தறிகளின் பாடல்//பொருத்தமான தலைப்பு.
பதிலளிநீக்கு//புடவையில் அசத்தியவர்கள் அனைவரும் 40 ., 50 வயது உடைய பெண்கள்//
இப்போ எல்லாம் புடவை கட்டுவது 40/50 வயதுப் பெண்களே. ஜீன்ஸ்/சுடிதார்தான் ஃபேஷன்.
சகாதேவன்
உண்மைதான் சகாதேவன் :)
பதிலளிநீக்கு