எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வெள்ளி, 31 ஜனவரி, 2014
வியாழன், 18 ஏப்ரல், 2013
மணிவண்ணனின் பெய்த நூல் எனது பார்வையில்.
மணிவண்ணனின் பெய்த நூல்
முகப்புத்தகத் தோழமைகளுக்கு முத்தமிழ் முத்தங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட முதல் புத்தகம் இதுவாகத்தான் இருக்க முடியும். மணிவண்ணனின் ஆன்மாவில் நெய்யப்பட்ட கவிதைகளால் பெய்த நூல் மழை அற்புதம் என்றாலும் அங்கங்கே சமுதாயச் சாடலுடன் அமில மழையும் கூட. மிக விரிவாக தமிழோடு தமிழாகத் தன்னுரையும், தான் பயின்ற கல்வி நிறுவனங்களுக்கு நன்றியும், தன் குடும்பத்தாருக்கு இந்நூலை அன்புப் பரிசாக்கியும் இருக்கும் நூலில் போதிமரங்கள் எனத் தான் ஞானம் அடையப்பெற்ற பலரையும் குறிப்பிட்டிருப்பது சிறப்பு.
வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012
என் கைரேகை படிந்த கல்.. எனது பார்வையில்..
தகிதா பதிப்பகத்தின் மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு இது. யாழி என்ற கிரிதரனின் எழுத்துக்களைப் படித்து வியப்படைந்து போனேன். மிகச் சில வரிகளில் பெரும் அர்த்தங்கள் செறிந்து மிக அருமையாய் இருந்தது. நல்ல நூல்களை அடையாள படுத்திய தகிதாவுக்கும் நன்றிகள். விலை ரூபாய் 50.
விகடன்., கல்கி., வாரமலர்., புதிய ழ , வடக்குவாசல் போன்றவற்றில் வெளிவந்துள்ளன இக்கவிதைகள்.
திங்கள், 23 ஜூலை, 2012
நிறைய அமுதம் . ஒரு துளி விஷம் . வைரசின் நூல் எனது பார்வையில்
நிறைய அமுதம் . ஒரு துளி விஷம் . வைரசின் நூல்
தகிதா பதிப்பகம் இந்த வருடம் வெளியிட்ட பத்து நூல்களில் ஒன்று கவிஞர் வைரஸின் நிறைய அமுதம். ஒரு துளி விஷம். கல்லூரி மாணவனான வைரஸின் கவிதைகளில் இளமை மிளிர்கிறது..பதிப்பாளர் மணிவண்ணன் கூறியபடி படிக்கும் காலத்திலேயே படைக்கும் ஆற்றல் பாராட்டுதலுக்குரியதுதான். தன் தந்தை., தாய்., சகோதரன்., சகோதரிக்கு இந்த நூலை அர்ப்பணம் செய்திருக்கிறார் கவிஞர். நூலின் விலை ரூபாய் 50/-
சனி, 25 பிப்ரவரி, 2012
முகில் பூக்கள்.. எனது பார்வையில்..
முகில் பூக்கள்
தகிதா பதிப்பகத்தின் பல் நூல்களில் மழையும் மழை சார்ந்தும் உள்ள கார்கால நூல் இது.. மழை நேசனான சரவணன் அழகியல் குறித்தும்., சூழலியல் குறித்தும் கார்மேக..(காளமேகம் போல) மாகப் பொழிந்த ஈரக்கவிதைகளின் தொகுப்பு.. மழையற்ற இக்கோடையிலும் ஈரச்சிதறல்கள் நம்மை கவிதை வழி நனைக்கின்றன..
நாமும் மழை உண்ணும் சாதகப் பட்சிபோல கவிதை அருந்தி தாகமடங்கத் துவங்குகிறோம்..
செவ்வாய், 3 மே, 2011
சாக்பீஸ் சாம்பலில் .. கவிதைத்தொகுதி.. எனது பார்வையில்..
சாக்பீஸ் சாம்பலில் .. கவிதைத்தொகுதி
தகிதா பதிப்பகம் சென்ற மாதம் 10 புத்தகங்கள் ஒன்றாக வெளியிட்டது;.. அதில் ஒன்று நாணற்காடனின் சாக்பீஸ் சாம்பலில்... இவருடைய கவிதைகளை தகிதா பதிப்பகம் மூன்று மாதத்துக்கு ஒரு முறை வெளியிடும் புதிய ,”ழ” வில் படித்திருக்கிறேன்.. பத்து கவிதைத்தொகுதிகளையும் மேற்கு வங்க நூலகத்திற்காக மொத்தமாக கேட்டதாக தகிதா பதிப்பகம் மணிவண்ணன் கூறினார்.. எல்லா கவிஞர்களையும் ஊக்குவிக்கும் இவர் முயற்சி பாராட்டற்குரியது.. விலை ரூ 50.
சனி, 12 பிப்ரவரி, 2011
தலைப்பு இழந்தவை.. ஈழவாணி கவிதைகள்.. . எனது பார்வையில்
தலைப்பு இழந்தவை.. ஈழவாணி கவிதைகள்
எழில் கொஞ்சும் இலங்கைத் தமிழுக்குச் சொந்தக்காரர் அன்புத் தங்கை ஈழவாணி ஜெயதீபன். இவர் எழுதிய 5 வது நூல் தகிதா பதிப்பகத்தின் வெளியீடு ,” தலைப்பு இழந்தவை” . விலை ரூபாய் . 40.
அழிந்து கொண்டிருக்கும் நாட்டாரிலக்கியத்தினை எடுத்து ,” நெஞ்சோடு கொஞ்சும் நாட்டார் பாடல்கள்” என்ற நூலையும் தொகுத்தவர். 2000 ஆம் ஆண்டுகளில் .” தேடல்” சஞ்சிகையின் ஆசிரியராகவும்., 2003 ல் ,”செந்தணல்” பத்ரிக்கையின் ஆசிரியராகவும் ஜொலித்தவர்.


