எனது நூல்கள்.

சனி, 12 ஏப்ரல், 2014

செட்டிநாட்டுச் சொல்வழக்கு. “ அப்பச்சியும் ஆத்தாவும் “

செட்டிநாடு என்றவுடன் காரைக்குடியைச் சேர்ந்த ஊர்கள் நினைவுக்கு வரும். கிட்டத்தட்ட 96 ஊர்களில் வாழ்ந்திருந்த நகரத்தார் மக்கள் இப்போது 72 ஊர்களில் மட்டும்  வசிப்பதாகக் கூறப்படுகிறது. உலகெங்கும் வசித்து வரும் இவர்கள் மொத்தமாக ஒரு லட்சம் மக்கள் தொகையே உள்ளார்கள்.

நான் இந்தக் கட்டுரைகளில் இவர்கள் ஆதியில் இருந்தது இன்று இருப்பது பற்றி எல்லாம் சொல்லப் போவதில்லை. ( காஞ்சி, பூம்புகார், சிதம்பரம்,  அதன்பின் இளையாற்றங்குடியில் வந்து 9 கோயில்களாகப் பிரிந்து இந்த 96 ஊர்களில் வசிக்கத் தொடங்கியது எல்லாம்  ஏற்கனவே நகரத்தார் வரலாறு என்னும் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. ). நகரத்தார் திருமண நடைமுறை என்ற புத்தகமும் வந்துள்ளது.


இதில் மொத்தமாக காரைக்குடி , செட்டிநாடு என்று அழைக்கப்படும் கானாடு காத்தான் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் பெரும்பகுதி மக்களும் நகரத்தார் மக்களும் பேச்சு வழக்கில் உபயோகப்படுத்தும் வார்த்தைகளில் சிலவற்றை எனக்குத் தெரிந்த அளவில் அதன் பொருளோடு கொடுக்க முயற்சிக்கிறேன். இவை பற்றிய சுட்டி ( LINKS ) இருந்தாலும், மேலதிகத் தகவல்கள் இருந்தாலும் பின்னூட்டத்தில் அளிக்கலாம்.

வார்த்தைகளின் ஆவணக் காப்பகம் என்று யாராவது சேகரித்துக் கொண்டிருக்கக் கூடும். அழிந்து கொண்டிருக்கும் தமிழ் மொழியில் காரைக்குடியில் இன்னும் உபயோகத்தில் இருக்கும் --- மிச்சமிருக்கும் சில சொற்களை ஆவணப்படுத்தி வைக்க வேண்டும் என்ற ஆவலிலேயே இந்த முயற்சியை மேற்கொள்கிறேன்.

செட்டி நாட்டுச் சொல்வழக்கு அழகானது. எதையுமே இழிவான மொழியில் சொல்வதில்லை. தரக் குறைவான வார்த்தைகள் என்பதே இருக்காது. எதைச் சொன்னாலும் அது மொழி அழகோடு சொல்லப்படுவதாகும் என்பதே அதன் சிறப்பு.

செட்டிநாட்டில் அப்பச்சி என்பது தந்தையைக் குறிக்கும் சொல். ஆத்தா என்பது தாயைக் குறிக்கும் சொல்.

எங்கள் தந்தையை நாங்கள் சின்ன வயதிலிருந்தே அப்பா என்றுதான்  அழைக்கிறோம். ஆனால் எங்கள் மாமாக்கள், சித்தப்பாக்கள், அத்தைகள், அப்பா, ஆத்தா அனைவரும் அவர்கள் தந்தையை அப்பச்சி என்றும், தாயை ஆத்தா என்றும் அழைப்பார்கள்.

எங்கள் தலைமுறையிலேயே அப்பச்சி என்று அழைக்கக் கூடிய சொல் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சின்னப் பிள்ளையில்  இருந்தே  வெளியூர்களில் வசித்ததால் எல்லாரையும் போல அப்பா என்று அழைக்கப் பழகி விட்டோம்.

எங்கள் தாயை மட்டும் ஆத்தா என்று அழைக்கிறோம். இப்போது என் பிள்ளைகள் என் கணவரை அப்பா என்றும் என்னை அம்மா என்றும்தான் அழைக்கிறார்கள். முக்கால்வாசி சமயங்களில் மாம் , டாட் என்றுதான் அழைக்கிறார்கள். மம்மி, டாடியின் சுருக்கம். :) சிலர் வீடுகளில் இன்னும் சுருக்கி மா, பா என்று அழைக்கிறார்கள். :)

இப்படியான ஒரு காலகட்டம் என்னை எங்கள் ஊரில் இன்னும் சில உறவினர்கள் தங்கள் தந்தை தாயை விளிக்கும் சொல்லை ஆவணப்படுத்தத் தூண்டியது. வருங்காலப் பிள்ளைகளும் தெரிந்து கொள்ளலாமே., நம் மொழி எப்படிச் சிறப்புடையது என்று.

என் ஆத்தாவும் பெரியத்தாவும் எங்கள் ஐயா இருந்த போது பேசிக் கொண்டது .

என் அம்மா .. எங்க ஆத்தா :- அப்பச்சியையும் ஆத்தாவையும் பார்க்கப் போயிருந்தியே எப்பிடி இருக்காக. நான்ஃபோன் பண்ணேன். நாளைக்குத்தான் பார்க்கப் போகோணும்.

எங்க பெரியத்தா :- அப்பச்சி  குளிச்சிட்டுப் பட்டாலையில சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்தாக. ஆத்தா ( எங்க ஆயா ) அடுப்படியில அப்பச்சிக்குப் பலகாரத்தை எடுத்து வச்சிக்கிட்டு இருந்தாக. எனக்கும் பலகாரம் தந்தாக. பலகாரத்தச் சாப்பிட்டுப்புட்டுக் காப்பியைக் குடிச்சிட்டு நா ஒன்னப் பார்க்கப் போறேன்னேன். ஆத்தா இந்த இனிப்பு இடியாப்பத்தை மாப்பிள்ளைக்குக் (தங்கச்சி ஆம்பிள்ளையானுக்குக்) கொண்டுக்கினு போன்னு கொடுத்தாக.

-- கேக்கும்போதே எவ்வளவு இனிமையா இருக்கு. இவுக பேசிக்கிற அப்பச்சிக்கும் ஆத்தாவும் வயசு 96ம் , 81 ம் இருந்தது( 6  வருஷத்துக்கு முன்னாடி. :). இப்ப இருந்தா நூத்திரெண்டு வயசு  இருக்கும் எங்க ஐயாவுக்கு  )

சரி சரி நானும் எங்க அப்பச்சியையும் ஹாஹா அப்பாவையும் ஆத்தாவையும் பார்த்துட்டு வாரேன்.

இன்னிக்கு எங்க அப்பச்சிக்குப் பிறந்தநாள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா. எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க. வாழ்க வளமுடன். நலமுடன். பல்லாண்டு :)

டிஸ்கி :-

செட்டிநாட்டுச் சொல்வழக்கு:-

8. நகரத்தார் - நாட்டில் கோட்டை கட்டி வாழ்ந்ததால் நகரத்தார்.

---தாங்கள் இருக்கும் இடத்தைக் கோட்டைகள் போல வீடுகள் கட்டி  நகரத்தைப் போல நிர்மாணித்து வாழ்ந்ததாலும் நகரத்தார் என்று அழைக்கப்படுகின்றார்கள். 

9. அப்பச்சி - தந்தை ( FATHER ) அப்பாவை  விளிக்கும் வார்த்தை

10.. ஆத்தா - தாய்.  ( MOTHER ).அம்மாவை  விளிக்கும் வார்த்தை.  

11. பெரியத்தா - அம்மாவின் பெரிய  சகோதரி. பெரியம்மாவை விளிக்கும் வார்த்தை. 

 12. செட்டிநாடு :- காரைக்குடிக்குப் பக்கத்தில் உள்ள கானாடு காத்தான் பட்டி. இதை செட்டிநாடு என்று குறிப்பாக அழைப்பார்கள். நகரத்தார் வசித்துவந்த 96 ஊர்களையும் ( இப்போது 72 ) செட்டிநாடு என்று மொத்தமாக அழைப்பார்கள்.

13. ஒன்பது கோயில்கள் :- ஒன்பது பிரிவாகப் பிரிந்த நகரத்தார்  தங்களுடைய ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு நகரச் சிவன் கோயிலைக் கட்டி அதை நிர்வகித்து அதன்படி வாழ்ந்து வந்தார்கள். 

14. பட்டாலை - வீட்டின் ஆண்கள் கூடி அமர்ந்திருக்கும் பகுதி. 

--வீட்டில் விசேஷம் என்றால் இங்கே இருந்துதான் நிகழ்வுகள் ஆரம்பமாகும். 

--வளவு அல்லது முகப்புப் பத்தியை ஒட்டி உள்ள சற்று உயர்வான பகுதி. ( ஒரு பெரிய ஹால் போன்ற பகுதி ) 

15. பலகாரம். - காலை உணவு. -- டிஃபன் வகை.

16. இனிப்பு இடியாப்பம் - செட்டிநாட்டு விசேஷங்களில் இடம்பெறும் இனிப்பு வகை.

17. ஆயா - ஆத்தாவின் ஆத்தா - அம்மாவின் அம்மா.

18.  (ஆயா வீட்டு ) ஐயா - ஆத்தாவின்  அப்பச்சி - அம்மாவின் அப்பா.

 

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5. 

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்
10 கருத்துகள் :

பழனி. கந்தசாமி சொன்னது…

கொங்கு நாட்டு உறவு முறை -
அப்பச்சி அல்லது அப்பிச்சி = அம்மாவின் அப்பா
அமிச்சி = அம்மாவின் அம்மா
ஆத்தா = அப்பாவின் அம்மா
அப்பாரு = அப்பாவின் அப்பா

vijayan சொன்னது…

அப்பச்சிக்கு எங்கள் அன்பான வணக்கத்தையும்,வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க ஆத்தா.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மூத்தவர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்...

Andi CHAMY சொன்னது…

ஆத்தா,அம்மான்,அப்பத்தா,பேத்தியா (Mother,Uncle,Father"s Mother,Mother"s Mother)

சே. குமார் சொன்னது…

நம்ம பக்கத்துப் பேச்சு வழக்கில் ஆத்தா, பெரியத்தா உரையாடலைத் தந்திருக்கிறீர்கள் அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

கொங்கு நாட்டு உறவுமுறை பற்றி சொன்னதற்கு நன்றி பழனி கந்தசாமி அவர்களே.

நன்றி விஜயன்

நன்றி தனபாலன் சகோ

ஆத்தா அம்மான் அப்பத்தா.. mother, uncle, father's mother. சரிதான். ஆனா பேத்திக்கு grand daughter.

mother's mother = ஆயா.

நன்றி குமார். :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Ganesh Appan சொன்னது…

chetti nattu samookathinarin urvumurai sorkalai pathivu seithamaiku mikka nantri.engai thirunalveli pillaimar samookathilum pattiyai atchi entrum pattanarai thaththa entrum alappathu intrum vazhakkathil irunthu varukirathu.amma,appavin ammavai pootti entrum avarkalin appavai poottanar entrum azhappathu vazhakkathil irunthu varukirathu. ganesh appan

Ganesh Appan சொன்னது…

chetti nattu samookathinarin urvumurai sorkalai pathivu seithamaiku mikka nantri.engai thirunalveli pillaimar samookathilum pattiyai atchi entrum pattanarai thaththa entrum alappathu intrum vazhakkathil irunthu varukirathu.amma,appavin ammavai pootti entrum avarkalin appavai poottanar entrum azhappathu vazhakkathil irunthu varukirathu. ganesh appan

Ganesh Appan சொன்னது…

CHETINATTU SAMUKATHIRANIN URAVU MURAI SOL VAZKHUKAL IPOLUTHUM VAZHAKALTHIL IRUNDHU VARUVATHAI THERIVITHAMAIKU MIKKA NAINRI.
GANAPATHIAPPAN

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...