அன்ன பட்சி!
நீர்கலந்த பால்பிரித்துச் சுவைக்கும் அன்னம்
நிலநடக்கும் அழகைநள வெண்பா பேசும்
ஊர்கலந்த பிணக்குகளைத் துயரை இன்ப
ஊற்றுக்களை அன்னமெனப் பிரித்துப் பேசிச்
சீர்கலந்த சமுதாய நெறியைக் காணச்
சிறகடிக்கும் தேனம்மை கவிதை காணில்
கார்கலந்த வான்முகிலைக் கண்டு ஆடும்
கலாபமயில் ஆகிடுமே படிப்போர் நெஞ்சம்!
ஏர்கலந்த சொல்லுழவுத் தங்கை சொன்ன
எத்தனையோ கவிதைகளில் அன்னப் பட்சி
வேர்கலந்து பெரும்புகழை ஈட்டும்! புள்ளின்
வேறுபட்ட மென்நடையால் அன்றோ! ஆமாம்!
இரா.சம்பந்தன்
இராசையா ஞான சம்பந்தன் அவர்கள் என் முக நூல் நண்பர். இலங்கையைச் சேர்ந்தவர் . கனடா நாட்டின் டொரண்டோவில் வசிக்கிறார். நந்தவனம் என்ற வலைத்தளத்திலும் எழுதி வருகிறார்கள். இரா சம்பந்தன் கவிதைகள் மற்றும் கட்டுரைகள் சிறப்பாக இருக்கின்றன.
அவருடைய சில கவிதைகளையும் கருத்துக்களையும் இங்கே பகிர்கிறேன்.
/// போங்கடா
என் கொலையை
எவ்வளவு காலத்துக்குத்தான்
கண்டித்துக் கொண்டிருப்பீர்கள்.,
தண்டிக்கப் பயந்து ..///
///நீ தடாகமாக இரு
நான் தாமரையாகவே
இருந்துவிடுகிறேன்
சூரியனைப் பற்றிக்
கவலைப்படாமல்.///
///உடல்களால் எந்த இல்லத்திலும் ஓய்வு எடுத்துக் கொள்ள இயலும்
ஆனால் உள்ளத்தில் அன்பும் அரவணைப்பும் உள்ள இல்லத்தில் மட்டும்தான் ஒய்வெடுக்க முடியும்.///
///வெற்றியும் தோல்வியும் :-
ஒரு முயற்சியின் பயன் எங்களிடமே தங்கி விடும்போது அதை வெற்றி என்பதும். அது இன்னொரு இடத்துக்கு மாறும்போது ஏற்படும் வெற்றிடத்தைத் தோல்வி என்ற பெயரால் குறிப்பிடுவதும் மனித இயல்பே ஒழிய உலகில் வெற்றி தோல்வி என்ற வார்த்தைகளுக்கு வேறு பொருள் கிடையாது. ஏனெனில் வெற்றியும் தோல்வியும் அந்த முயற்சிக்கு உரியது அல்ல. அது அந்த முயற்சியை மேற்கொண்டவர்களுக்கே உரியது. !///
--- நன்றி இரா சம்பந்தன் அவர்களே. என் நூலுக்கு வாழ்த்து வழங்கியமைக்கும் நன்றி.
விஜயா பதிப்பகம் கோவை
மீனாக்ஷி புக் ஸ்டால் , மதுரை
அபிநயா புக் சென்டர், சேத்தியா தோப்பு
வம்சி புத்தக நிலையம் , திருவண்ணாமலை
அகநாழிகை புக் சென்டர் , சென்னை.

”அன்ன பட்சி” கவிதைத் தொகுப்பைக் கூரியர் மூலம் பெற.
சென்னைக்கு -- புத்தக விலை 80+ கூரியர் சார்ஜ் 20 = 100 ரூபாய்
மற்ற ஊர்களுக்கு - புத்தக விலை 80 + கூரியர் சார்ஜ் 45 = 125 ரூபாய்
இணையத்தில் வாங்க.
.http:// aganazhigaibookstore.com/ index.php?route=product/ product&product_id=1795
http://aganazhigaibookstore. com/index.php?route=product% 2Fproduct&product_id=1795 — with Thenammai Lakshmanan.
By post aganazhigai@gmail.com
என் நூல்கள் கிடைக்குமிடம். :-
சென்னைக்கு -- புத்தக விலை 80+ கூரியர் சார்ஜ் 20 = 100 ரூபாய்
மற்ற ஊர்களுக்கு - புத்தக விலை 80 + கூரியர் சார்ஜ் 45 = 125 ரூபாய்
இணையத்தில் வாங்க.
.http://
http://aganazhigaibookstore.
என் நூல்கள் கிடைக்குமிடம். :-
டிஸ்கவரி புக்பேலஸ் , சென்னைAganazhigai book store.
390, Anna Salai,
KTS valagam, 1 st floor,
saidapet ,
Chennai – 15.
By post aganazhigai@gmail.com
விஜயா பதிப்பகம் கோவை
மீனாக்ஷி புக் ஸ்டால் , மதுரை
அபிநயா புக் சென்டர், சேத்தியா தோப்பு
வம்சி புத்தக நிலையம் , திருவண்ணாமலை
அகநாழிகை புக் சென்டர் , சென்னை.
இரா சம்பந்தன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் சகோதரி...
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!