எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நடுவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடுவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 பிப்ரவரி, 2026

ஹெர் ஸ்டோரீஸ் நாவல் போட்டியில் நடுவராக..

 பெருமதிப்பிற்குரிய நிவேதிதா மேடம் வள்ளிதாசன் சார் அவர்களுக்கு வணக்கம்.


ஹெர் ஸ்டோரீஸ் சார்பாக நடத்தப்பட்ட நாவல் போட்டியில் நடுவராக இருக்கும்படி அழைத்தமைக்கு நன்றிகள்.



 இதில் 5 நாவல்கள் பங்கேற்றன. ஐந்துமே சிறப்பானவை தான். அனைத்துமே ஹெஸ்டோரிசில் நாவலாக பதிப்பாக்கம் செய்யக்கூடிய சிறப்பு பெற்றவை.


இதில் நான் எந்த வரிசையில் தேர்ந்தெடுத்து இருக்கிறேன் என்றால் பெண்ணியத்தோடு பொதுநலமும் கலந்த வகையில் தேர்ந்தெடுத்து உள்ளேன்.


அந்த வகையில் நனைந்த பாய் என்ற கதை ஒரு சுயசரிதையாக அமைந்துள்ளதால் ஐந்தாம் இடத்தைப் பெறுகிறது. அதுவும் 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று உள்ளது. அதன் மொழி நடையில் சிறிது மாற்றம் செய்து இருந்தால் அது சிறப்பு பெற்றிருக்கும்.  திரும்பத் திரும்ப வரும் செய்திகள் அதிகம். பெண்களுக்கான வாழ்வியல் துயரங்களைப் பட்டியலிட்டாலும் அது சந்திராவின் வாழ்வில் அவளை சுற்றி உள்ளவர்கள் மட்டுமல்ல அவளே வேண்டி விரும்பித் தன்னைத்தானே சிலுவையில் அடித்துக் கொள்ளும் ஒரு பரிசுத்த ஆத்மாவாக இருக்கிறாள். அந்த வகையில் அவள் என் இரக்கத்தை அதிகம் தூண்டினாள்.புள்ளி விவரங்கள் அதிகம் என்பதால் கட்டுரையாகும் அபாயம் அதிகம். எந்த வயதிலும் சாதிக்கத் துடிக்கும் பெண்களின் மாதிரியாக சந்திரா திகழ்வதால் அவளுக்கு என் வாழ்த்தும் லூர்துமேரி அவர்களுக்கு என் அன்பும்.

புதன், 18 மார்ச், 2020

பாரதி பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி.

காரைக்குடி புத்தகத் திருவிழா கடந்த மாதம் கம்பன் மணிமண்டபத்தில் நடைபெற்றது. அதை ஒட்டி மாணாக்கருக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. செய்யுள் மனனப் போட்டியாக பாரதி பாரதிதாசன் பாடல்களில் இருந்து 40 வரிகளைச் சொல்லும் போட்டியில் பல்வேறு பள்ளிகளின் மாணாக்கர்கள் கலந்து கொண்டு சிறப்பாக ஒப்பித்தனர்.

இந்நிகழ்வை நடத்தியவர் ஆசிரியரும் குழந்தைக் கவிஞர் திரு அழ. வள்ளியப்பா அவர்களின் புதல்வியுமான திருமதி தேவி நாச்சியப்பன் ஆவார்கள். இவர் இப்புத்தகத் திருவிழாவின் செயலாளராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் திருமதி சந்திரா மற்றும் திருமதி ஸ்வேதா ( கார்த்திகேயன் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை ) ஆகியோரோடு மூன்று நடுவர்களுள் ஒருவராகப் பங்கேற்றேன்.



திங்கள், 2 ஏப்ரல், 2012

ஜவஹர் பள்ளி குழந்தைகள் நடனப் போட்டியில் நடுவராக.

சென்னை ஜவஹர் வித்யாலயாவில் ஆகஸ்ட் 24  , 2011 அன்று குழந்தைகளுக்கான நடனப் போட்டி நடந்தது. அதில் என்னையும், டி சி எஸ்ஸில் பணிபுரியும் வைஷ்ணவியையும், டி நகர் பெங்கால் அசோஷியேஷன் பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருக்கும் லலிதாவையும் நடுவராக அழைத்திருந்தார்கள்.மிக அருமையாக ஆடினார்கள் குழந்தைகள். மூன்று நடனப் போட்டிகள் 3 ஆம் வகுப்பு வரை, 8 ஆம் வகுப்பு வரை ப்ளஸ்டூ வரை ஒரே நாளில் வெவ்வேறு தளங்களில் இடங்களில் நடைபெற்றன. இதில் தொலைக்காட்சி நடிகர் கமலேஷும் வந்திருந்தார் இன்னொரு நடன நிகழ்ச்சிக்கு நடுவராக வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் ( விஜய் டிவி நீயா நானாவில் சந்தித்திருக்கிறோம்.) நலம் விசாரித்தார். எப்படி நினைவு வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு ..எங்கள் எதிர்டீமில் பேசியவர்களை மறக்க முடியுமா. என்றார். !
ஜட்ஜம்மாக்களே :)
நாட்டுப்புற நடனங்கள் தான் தலைப்பு . அருமையாக ஆடினார்கள் அனைத்துக்குழந்தைகளும். மதிப்பெண் வழங்குவதில் நாம்தான்
 தாராளமாச்சே.. சும்மா அள்ளி அள்ளி வழங்கினோம் . மற்ற இருவரும் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். ஏன்னா ஒருத்தங்க அதுல ஹெட்மிஸ்ட்ரஸ்.. எனவே ரொம்ப கறாரா மதிப்பெண் போட்டாங்க. 
Related Posts Plugin for WordPress, Blogger...