எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஹெர் ஸ்டோரீஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹெர் ஸ்டோரீஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 பிப்ரவரி, 2026

ஹெர் ஸ்டோரீஸ் நாவல் போட்டியில் நடுவராக..

 பெருமதிப்பிற்குரிய நிவேதிதா மேடம் வள்ளிதாசன் சார் அவர்களுக்கு வணக்கம்.


ஹெர் ஸ்டோரீஸ் சார்பாக நடத்தப்பட்ட நாவல் போட்டியில் நடுவராக இருக்கும்படி அழைத்தமைக்கு நன்றிகள்.



 இதில் 5 நாவல்கள் பங்கேற்றன. ஐந்துமே சிறப்பானவை தான். அனைத்துமே ஹெஸ்டோரிசில் நாவலாக பதிப்பாக்கம் செய்யக்கூடிய சிறப்பு பெற்றவை.


இதில் நான் எந்த வரிசையில் தேர்ந்தெடுத்து இருக்கிறேன் என்றால் பெண்ணியத்தோடு பொதுநலமும் கலந்த வகையில் தேர்ந்தெடுத்து உள்ளேன்.


அந்த வகையில் நனைந்த பாய் என்ற கதை ஒரு சுயசரிதையாக அமைந்துள்ளதால் ஐந்தாம் இடத்தைப் பெறுகிறது. அதுவும் 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று உள்ளது. அதன் மொழி நடையில் சிறிது மாற்றம் செய்து இருந்தால் அது சிறப்பு பெற்றிருக்கும்.  திரும்பத் திரும்ப வரும் செய்திகள் அதிகம். பெண்களுக்கான வாழ்வியல் துயரங்களைப் பட்டியலிட்டாலும் அது சந்திராவின் வாழ்வில் அவளை சுற்றி உள்ளவர்கள் மட்டுமல்ல அவளே வேண்டி விரும்பித் தன்னைத்தானே சிலுவையில் அடித்துக் கொள்ளும் ஒரு பரிசுத்த ஆத்மாவாக இருக்கிறாள். அந்த வகையில் அவள் என் இரக்கத்தை அதிகம் தூண்டினாள்.புள்ளி விவரங்கள் அதிகம் என்பதால் கட்டுரையாகும் அபாயம் அதிகம். எந்த வயதிலும் சாதிக்கத் துடிக்கும் பெண்களின் மாதிரியாக சந்திரா திகழ்வதால் அவளுக்கு என் வாழ்த்தும் லூர்துமேரி அவர்களுக்கு என் அன்பும்.

திங்கள், 7 அக்டோபர், 2024

மும்தாஜ் இல்லம்

 மும்தாஜ் இல்லம்

“அண்ணே சௌதில இருக்காங்க. அங்க வரச் சொல்லி லெட்டர் போட்டிருக்காங்க” பின்னால் வந்து கொண்டிருந்தான் அவன். ”இந்தா இத வாங்கிப் பாரு. உண்மையத்தான் சொல்றேன்” என ஒரு கடிதத்தை நீட்டினான். வெளிநாட்டுத் தபால்தான். கடந்த சில மாதங்களாகப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறான். டைப்ரைட்டிங்க் இன்ஸ்டிடியூட்டின் எதிரில் இருந்த ஒரு ஜவுளிக்கடையில் அவனைப் பார்த்திருக்கிறாள். சில சமயம் கல்லாவிலும் அமர்ந்திருப்பான். கடைக்காரருக்கு உறவினர்போல என நினைத்திருந்தாள்.

மாடியில் இருந்தது அவள் டைப்ரைட்டிங் கற்றுக் கொண்டிருந்த இன்ஸ்டிடியூட். அதன் அருகிலேயே தேரடி. எனவே அதன் பக்கவாட்டு மரப் படிகளில் ஏறித்தான் மாடிக்குச் செல்ல வேண்டும். கோ ஆப் டெக்ஸின் மேல்தளம் பார்வைக்கு அகப்படும். அந்த வரிசையில் கடைசியில் இருந்தது இன்ஸ்டிடியூட். பேப்பரை டைப்ரைட்டரில் சொருகி Asdfgf ;lkjhj என டைப்ப ஆரம்பித்து இப்போது இன்வாய்ஸ், கடிதம் என்று அடிக்க ஆரம்பித்திருக்கிறாள். இன்னும் சில நாட்களில் பரிட்சை.

Related Posts Plugin for WordPress, Blogger...