எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 29 ஏப்ரல், 2017

சாட்டர்டே ஜாலி கார்னர். ஜெயந்திரமணியின் எல்கேஜி அட்மிஷன் !


என் அன்பிற்கினிய தோழி ஜெயந்திரமணி மிக அருமையாக எழுதுவார். சிறுகதைகள் சொல்லும் விதம் தெளிவாகவும் அதன் மையக்கருத்து நச்சென்றும் இருக்கும். பொதுவாக நான் படித்த வரையில் குழந்தைகளின் நலனை மையப்படுத்தி இவர் எழுதிய ஆழ்துளைக்குழாய் சிறுகதை ஒன்றும் இக்கதையும் இவர் தொடர்ந்து குழந்தைகள் பற்றிய ( பெற்றோர்களுக்கான ) விழிப்புணர்வுச் சிறுகதைகள் படைக்கவேண்டும் என்ற என் எண்ணத்தை அதிகமாக்குகிறது. அதையே அவரிடம் கோரிக்கையாகச் சமர்ப்பிக்கிறேன் :)

தொடர்ந்து எழுதுங்கள் ஜெயந்தி. உங்கள் வாசகியாக நானும் தொடர்கிறேன். :)

சாட்டர்டே போஸ்டுக்காக இவரிடம் கேட்ட போது இச்சிறுகதையை அனுப்பி இருந்தார். பள்ளி அட்மிஷனில்தான் எத்தனை வகைக் கதை படைக்கலாம். இது இன்னொரு கோணம். படித்து ரசிங்க. யோசிங்க. :)



/////“நான் என்றால் அது அவரும் நானும்,

அவரென்றால் அது நானும் அவரும்”

சுய விவரம்

நான் தாங்க ஜெயந்தி ரமணி. பிறந்தது முதல் இன்று வரை (62

ஆண்டுகளாக) சிங்காரச் சென்னை வாசி. உங்களுக்கு ஒரு ரகசியம்

சொல்லட்டுமா? முழுநேர அக்மார்க் சென்னைவாசியாக இருந்தும் நான்

தண்ணீருக்கு கஷ்டப்பட்டதே இல்லை. இருங்க இருங்க சென்னையில

தான் தெருவுக்கு நாலு கடை இருக்கே எப்படி கஷ்டம் வரும்ன்னு நீங்க

யோசிக்கறது புரியறது. ஆனா நான் சொன்ன தண்ணீர் H2O. இப்ப

புரிஞ்சுதா.


உத்தியோகத்திற்காக படித்தது DIPLOMA IN COMMERCIAL PRACTICE. என் சொந்த

விருப்பத்துக்காக 50 வயதில் M.A. TAMIL படித்தேன். கிட்டத்தட்ட 41

ஆண்டுகள் (இதில் 11 மாதங்கள் மாநில அரசிலும் மீதி 39 ஆண்டு 9

மாதங்கள் மத்திய அரசிலும்) பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவள்.

அருமையான ஒரு குடும்பத்திற்கு சொந்தக்காரி. அன்பான கணவர், ஒரு

மகன், ஒரு மகள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் மூலம்

இரண்டு பேத்திகள். மகளுக்கு மகப்பேறு உண்டாக வாழ்த்துங்களேன்.

பத்தகம் படிக்கும் பழக்கம் பரம்பரை சொத்து. என் அப்பா ஒரே இரவில்

PERRY MASON நாவலை முழுக்க படித்து முடித்து விடுவார். பத்திரிகைகளில்

சிறுகதைகளும் எழுதி இருக்கிறார். அம்மாவோ பொட்டலம் கட்டி வந்து

காகிதத்தையும் விட மாட்டார். அவரும் சிறுகதைகள் எழுதி இருக்கிறார்.

ஆனால் தன் டைரியில். நானும் படிப்பேன், படிப்பேன் சுற்றி என்ன

நடக்கிறது என்று தெரியாமல்.ம்ம்ம்ம் இல்லை படித்தேன். திருமணத்திற்குப்

பிறகு புத்தகங்களுக்கு விடை கொடுத்து விட்டேன். வாழ்க்கை என்னும்

புத்தகத்தைப் படிக்க வேண்டாமா? ஆனால் திருமணமாகி 29

ஆண்டுகளுக்குப் பிறகு எழுதவும் ஆரம்பித்தேன். முடிஞ்சா என் வீட்டுக்கு,

அதாங்க என் வலைத் தளங்களுக்கு வாங்களேன், என் படைப்புக்களை

படிக்க
http://manammanamveesum.blogspot.in/

http://aanmiigamanam.blogspot.in/

http://manammanamviisum.blogspot.in/

எனக்குப் பிடித்த எழுத்தாளர். நிறைய எழுத்தாளர்கள பிடிக்கும். ஆனா

முதல்ல பிடித்தது என் எழுத்து தாங்க. ஆமாம். காக்கைக்கும் தன் குஞ்சு

பொன் குஞ்சு இல்லையா? தி.ஜா, கல்கி, சுஜாதாவில் ஆரம்பிச்சு நம்ப வை

கோபாலகிருஷ்ணன் சார் வரைக்கும் நிறைய எழுத்தாளர்கள பிடிக்கும்.

IN AND OUT CHENNAI JAN 1 - 15, 2013

இதழில் வெளி வந்த என் சிறுகதை

உங்களுக்காக இங்கு மீண்டும் வெளியிட்டுள்ளேன்.

தட்டு

“ஏங்க, எழுந்திருங்க, எழுந்திருங்க”

“என்னப்பா இது, மணி அஞ்சு தான் ஆகுது.  ஆபீஸ் போற நாள்லயே ஏழு

மணிக்குதான் எழுப்புவ.  இன்னிக்கு சனிக்கிழமை.  இப்பவே எழுப்பற”.

“அது சரி. விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்னானாம்.”

”நான் அப்படி ஒண்ணும் சொல்லலியே”

“சரி ஜோக்கெல்லாம் போதும். சீக்கிரம் கிளம்புங்க.  ”

”எங்க கிளம்பணும்”

“என்னங்க இது.  நேத்தே சொன்னேன் இல்ல. நம்ப நிஷாவை ஸ்கூல்ல

சேக்கறதுக்கு அப்ளிகேஷன் வாங்கப்போணும்ன்னு”

“காலையில அஞ்சு மணிக்கா”

“அவங்கவங்க ராத்திரியே போய் ஸ்கூல் வாசல்ல படுத்துட்டிருக்காங்க.  எங்க

ஆபீஸ் ராஜன், அதான் இங்க ‘ஜே’ ப்ளாக்ல குடி இருக்காரே அவர் கிட்ட

நைசா ஒரு இடம் போட்டு வெக்க சொல்லி இருக்கேன்.  சீக்கிரம் கிளம்புங்க”

“இப்ப எந்த ஸ்கூல் திறந்திருக்கும்.  பத்து மணிக்கு மேல போறேனே”.

“எழுந்து பல் தேயுங்க.  காபி போட்டு தரேன்.  நீங்க குளிக்கக் கூட வேண்டாம்.

சீக்கிரம், சீக்கிரம்”.

‘குளிக்க வேண்டாம். ம் .எனக்கு சலுகை தராங்களாம்.’

“என்ன முணுமுணுக்கறீங்க.”

”ஒண்ணும் இல்ல. ஸ்கூல் எங்க இருக்குன்னு கேட்டேன்.  இது என்ன. என்ன

இருக்கு இந்தப் பையில”

“ம். பொண்ணு பிறந்த தேதி என்னன்னு கேட்டா, திருவிழாவுல காணாமப்

போன சின்ன புள்ள மாதிரி முழிப்பீங்க இல்ல.  அதான் எல்லா விவரமும்

வெச்சிருக்கேன்.”

“வேற ஏதாவது ஸ்கூல்ல சேக்கலாமே”

“இங்க பாருங்க, என் கோவத்தைக் கிளறாதீங்க.  என் கூட வேலை

செய்யறவங்கள்ள நம்ப ஏரியால இருக்கற எல்லாரும் இந்த ஸ்கூல்லதான்

சேக்கறாங்க.  ரொம்ப நல்ல ஸ்கூல்”

“அதான பார்த்தேன்”.

“ஒண்ணும் பாக்க வேண்டாம். கிளம்புங்க”

* * *

’என்னடா இது, மணி எட்டாகப் போகுது. வயிறு லேசா பசிக்க ஆரம்பிக்குதே’.

“ஏன் ராஜன், எத்தனை மணிக்கு அப்ளிகேஷன் கொடுப்பாங்க”

“0930 மணிக்கு குடுக்க ஆரம்பிப்பாங்களாம், என்ன சார், பசிக்குதா, டீ, கீ

ஏதாவது சாப்பிடணும்ன்னா போயிட்டு வாங்க.  நான் இடத்தைப்

பாத்துக்கறேன்.”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்ப்பா.”

பையில என்னதான் வெச்சிருக்கா. வெயிட்டா இருக்கே.  பிஸ்கெட் பாக்கெட்,

2 வாழைப்பழம், தண்ணி.. அடிப்பாவி, நேரம் ஆகும்ன்னு தெரிஞ்சுதான்

இதெல்லாம் பையில போட்டு அனுப்பி இருக்காளா?

“ராஜன், பிஸ்கெட் சாப்பிடறீங்களா?”

“எங்க வீட்ல கூட குடுத்து அனுப்பி இருக்காங்க சார்”

“ஏன் ராஜன், இந்த ஸ்கூல் என்ன அவ்வளவு ஒசத்தி”

“அதெல்லாம் தெரியாது. எங்க வீட்ல இங்கதான் சேக்கணும்ன்னு

சொல்லிட்டாங்க”.

மனதுக்குள் “வீட்டுக்கு வீடு இப்டித்தானா”.

* * *

”மணி 11 ஆயிடுத்து.  நான் வரேன் ராஜன், ஒரே ப்ளாட்ல

இருக்கோம்ன்னுதான்  பேரு.  இன்னிக்குதான் நாம இவ்வளவு நேரம் பேசி

இருக்கோம்”

“சரி வரேன் சார்”

* * *

”இந்தா நல்லா குடுத்தாங்க அப்ளிகேஷன்.  6 மணி நேரம் காக்க வெச்சு.  ஒரு

அப்ளிகேஷன் 500 ரூபா.  நான் காலேஜுக்குக் கூட அப்ளிகேஷனுக்கு இவ்ளோ

செலவு பண்ணினது இல்ல.   நீ என்ன படிச்சிருக்க, ஒன் பொண்டாட்டி என்ன

படிச்சிருக்கா, லொட்டு, லொசுக்குன்னு நூறு கேள்வி கேட்டுட்டு குடுக்கறான்

அப்ளிகேஷன்”

”சும்மா ஏதாவது சொல்லிண்டே இருக்காதீங்க.  இந்த ஸ்கூல்ல நம்பள

மாதிரி, ரெண்டு பேரும் வேலைக்குப் போகறவங்களுக்காக தனி கவுன்டரே

ஓபன் பண்ணி இருக்காங்களாம்.  இங்க சேத்தா +2 வரைக்கும் கவலையே

இல்லயாம்.  ஏன் இவங்களுக்கு காலேஜ் வேற இருக்காம்.   மேல் படிப்பு

முடிஞ்சதும் வேலையும் வாங்கிக் குடுத்துடுவாங்களாம்”

“அப்படியே கல்யாணமும் பண்ணி வெச்சு, பிரசவமும் பாத்துடுவாங்களாமா?”

“ஜோக்கு.  இதுக்கு நான் சிரிக்கணுமாக்கும்.  இங்க பாருங்க.  இன்னிக்கு நாள்

நல்லா இருக்கு.  உக்காந்து அப்ளிகேஷன பூர்த்தி செய்யுங்க.  புதன்

கிழமையும் நாள் நல்லா இருக்கு.  அன்னிக்கு பணம் கட்டிடலாம்”

”அது எவ்வளோ? ஒரு லட்சமா?”

“ஒரு 40,000 ரெடியா வெச்சுக்கோங்க”

“அம்மாடி, என்ன கூலா சொல்லிட்டுப்போறா எல் கே ஜிக்கு நாப்பதாயிரமா?”

* * *

”ஐயா”

“என்ன கண்ணம்மா”

“ஐயா, அம்மா கிட்ட சொன்னேன். உங்கள கேக்கணும்ன்னு

சொன்னாங்க.  ராணியை ஸ்கூல்ல சேத்துட்டேன்.  அவங்களே புத்தகம்,

நோட்டு எல்லாம் குடுத்துடுவாங்களாம்.  யூனிபார்மும் ஒரு செட்

தராங்களாம்.  எனக்கு ஒரு 200 ரூபா கடனா குடுத்தீங்கன்னா இன்னும் ஒரு

செட் யூனிபார்ம் வாங்கிடுவேன்.  மாசம் 50 ரூபாயா பிடிச்சுக்குங்க ஐயா”

“200 ரூபா தரேன் கண்ணம்மா.  ஆனா திருப்பி எல்லாம் தர வேண்டாம்.

 அப்படியே நிஷாவுக்கு வாங்கும் போது ராணிக்கு பை, தண்ணி பாட்டில்

எல்லாம் வாங்கிக் குடுத்துடறேன்..  என்ன ராணி நல்லா படிக்கணும் சரியா”

அம்மாவின் புடவைத்தலைப்புக்குள் வெட்கத்துடன் நுழைந்து கொண்டாள்

ராணி.

* * *

”ஏங்க, இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிடலாம்.  ஸ்கூல்ல

அப்ளிகேஷனை குடுத்துட்டு பணத்தை கட்டிட்டுப் போயிடலாம்”

“கண்ணம்மா.  வீட்டையும், நிஷாவையும் பத்திரமா பாத்துக்கங்க.  இட்லி,

சாப்பாடு எல்லாம் ராணிக்கும், உங்களுக்கும் சேத்து வெச்சிருக்கேன். நாங்க

கிளம்பறோம்”

“சரிங்கம்மா”

“அம்மா, எனக்கு இட்லி வேண்டாம். எப்பப்பாரு இட்லி, புடிக்கவே இல்ல.

வேற எதாவது பண்ணி வெக்கக்கூடாதா?”

இது ஏதடா வேதாளம் முருங்கை மரம் ஏறுதே என்று “நிஷாக்குட்டி,

சாயங்காலம் அப்பா ஆபீஸ்லேந்து வந்ததும் உன்ன வெளியே அழைச்சுட்டுப்

போய் என்ன வேணுமோ வாங்கித்தரேன், சரியா?”

”போங்கப்பா”

“ஏங்க நீங்க வாங்க மணியாச்சு.  கிளம்பலாம்”

* * *

”நிஷாக்குட்டி, யூனிபார்ம், பை, எல்லாம் நல்லா இருக்கா? நாளையில இருந்து

ஸ்கூலுக்குப் போகணும்.”

“அப்பா, நாளைக்கு ஒரு நாள் நீங்களும், அம்மாவும் ஸ்கூலுக்குக் கொண்டு

விட்டுடுங்கப்பா.  மறுநாள்லேந்து ஸ்கூல் பஸ்ல போயிடறேன்.”

“ஆமாம் செல்லம். நாளைக்கு நானும், அம்மாவும்தான் அழைச்சிட்டுப் போகப்

போறோம்”.

“அப்பா, அப்டியே அம்மாகிட்ட சொல்லுப்பா.  சும்மா, சும்மா இட்லி, தோசை.

வேற ஏதாவது செய்யச் சொல்லுப்பா”

“சரிம்மா, அப்புறம் உன் ப்ரெண்டு ராணிக்கு பை, தண்ணி பாட்டில் எல்லாம்

புடிச்சுதாமா?”

“ரொம்பப் புடிச்சிருக்காம்ப்பா”

”நிஷா, தூங்கலாம் வா, நாளையில இருந்து ஸ்கூலுக்குப் போகணும் இல்ல””

“அம்மா, நாளைக்கு லஞ்சுக்கு என்ன தரப்போற”

“நாளைக்கு லஞ்ச் எல்லாம் இல்ல.  அரைநாள் தானாம் ஸ்கூல்.  அம்மா லீவு

போட்டிருக்கேன்.  உன்னோடயே இருக்கேன் என்ன?”

”அப்ப முழு நாள் ஸ்கூலுக்கு லஞ்சுக்கு என்ன தருவ”

“அத அப்புறம் பார்த்துக்கலாம்”

“அப்டின்னா நாளைக்கு ஸ்கூல்லேந்து வந்ததும் எனக்கு பூரி, கிழங்கு

பண்ணித் தரணும், சரியா?”

”சரி”

“அம்மா, ராணிக்கும் குடுக்கணும் என்ன”

“குடுக்கலாம், குடுக்கலாம், இப்ப வந்து படு”

* * *

”நிஷாக்குட்டி, உனக்கு ஸ்கூல் பிடிச்சிருக்கா?.  இன்னிக்கு பஸ்ல போனியே,

ப்ரெண்ட்செல்லாம் புடிச்சுட்டியா?”

“அப்பா, ஸ்கூல் எல்லாம் நல்லாதான்ப்பா இருக்கு.  ஆனா”

“ஆனா என்ன சொல்லும்மா”      

                   

“அம்மா முறைச்சு பாக்கறாப்பா”

“நீ சும்மா சொல்லு செல்லம்”

“அது வந்துப்பா.  என் ஸ்கூல் நல்லாதான் இருக்கு.  ஆனா ராணி

ஸ்கூல்தாம்ப்பா பெஸ்ட்”

“ஏண்டா செல்லம்”

“அவங்க ஸ்கூலுக்கு வெறும் தட்டு மட்டும் எடுத்துட்டுப் போனாப்

போதுமாம்பா.  லஞ்சுக்கு சூடா சாப்பாடு போடுவாங்களாம்”.

மனைவி முறைப்பதையும் லட்சியம் செய்யாமல் கண்ணில் நீர் வர விழுந்து

விழுந்து சிரித்தான் நிஷாவின் அப்பா.  அப்பா ஏன் இப்படி சிரிக்கிறார் என்று

புரியாமல் விழித்தாள் நிஷாக்குட்டி.

*** ## ***

இந்த வாய்ப்பை கொடுத்த தோழி தேனம்மைக்கு மனமார்ந்த நன்றி, எனது

‘காவல்’ என்ற சிறுகதைக்கு பரிசு கிடைத்ததற்கு தோழி தேன் தான் முக்கிய

காரணம். ’ங்கா’ வின் சொந்தக்காரியின் தளத்தில் இருந்துதான் சிறுகதைப்

போட்டி நடப்பதை தெரிந்து கொண்டேன். தவறாமல் என் வலைத்தளத்திற்கு

வருகை தந்து என்னை ஊக்குவிக்கும் என் மானசீக குரு திரு வை கோபால

கிருஷ்ணன் அண்ணாவுக்கும் என் மனமார்ந்த நன்றி.

ஒவ்வொரு நொடியும் நன்றி சொல்லும் நிலையில் என்னை வைத்த

இறைவனுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.

டிஸ்கி:- புகைப்படம் அருமை. அதுக்கு அனுப்பின கேப்ஷனும் ரொம்ப அருமையோ அருமை. :) 

உங்க பெண்ணுக்குக் குழந்தை பிறக்க பிரார்த்தனைகள். அடுத்த வருஷம் ஜம்முன்னு ரெட்டைப் பிள்ளை பிறந்தாலும் ஆச்சர்யமில்லை. பார்த்துக்கோங்க ஜெயந்தி.

அப்புறம் இது என்னோட நூறாவது சாட்டர்டே போஸ்ட்/ஜாலி கார்னர். சோ என்னையும் வாழ்த்துங்க மக்காஸ். ஆமை மாதிரி ஓடி நூறைத் தொட்டதுக்காக. ( ஊருக்கு போனா வந்தா, வீட்ல விசேஷம்னா, பயணம்னா லொட்டு லொசுக்குன்னு சனிக்கிழமை போஸ்டைப் போடாம இருந்துடுவேன். ஆமா நான் இல்லாட்டா யாரு அத டிவிட்டர்ல, இண்டி ப்லாகர்ல, ஃபேஸ்புக் ல எல்லாம் போட்டு தண்டோரா போடுறதாம். :)


ஜெயந்தி உங்களை சிறுகதை மன்னி என்று பட்டம் கொடுக்க ஆசைப்படுகிறேன். ரொம்ப அற்புதமான கட்டமைப்பில் கதை வந்துள்ளது. எண்ணக்கோர்வையும் அதை வெளிப்படுத்திய விதமும் சூப்பர். பெற்றோர் சிந்திக்க வேண்டும். அடுத்த கல்வி ஆண்டு ஆரம்பிக்கப் போகிறது. இனியாவது பெற்றோர் பிள்ளைகள் பற்றி மாத்தி யோசிக்கட்டும். :) இந்த போஸ்டை அனுப்பித்தந்தமைக்கு அன்பும் நன்றியும்டா. :) விஜிகே சாருக்கும் ஸ்பெஷல் நன்றிகள். உங்கள் பேரை ஞாபகப்படுத்தியமைக்கு. :)


26 கருத்துகள்:

  1. பெண்ணுக்குக் குழந்தை பிறக்க எங்கள் பிரார்த்தனைகளும். படபடவென அறிமுகமும், இயல்பான நடப்பைச் சொல்லும் அழகான சிறுகதையும் மிக நன்று.

    பதிலளிநீக்கு
  2. நூறாவது சாட்டர்டே போஸ்ட்டுக்கு வாழ்த்துகள்.

    நல்லதொரு அறிமுகத்துக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. IN AND OUT CHENNAI JAN 1 - 15, 2013 இதழில் வெளி வந்த ’தட்டு’ சிறுகதையை இங்கு மீண்டும் படிக்க வாய்ப்புக்கிடைத்தது சந்தோஷமாக உள்ளது.

    கதாசிரியர் ஜெயந்தி ஜெயாவுக்கு மீண்டும் என் பாராட்டுகள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  4. “நான் என்றால் அது அவரும் நானும்,
    அவரென்றால் அது நானும் அவரும்”//

    பஞ்ச் டயலாக் சூப்பர் ! :)

    [மிகவும் பாவம் அந்த நம் ரமணி சார்]

    பதிலளிநீக்கு
  5. இன்றைய சாட்டர்டே ஜாலி கார்னர் .... கலக்கல்.

    கலக்கியுள்ள ஜெயாவுக்குப் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    தங்கச்சிக்கு வாய்ப்பளித்து இதனை வெளியிட்டுள்ள ஹனி மேடத்துக்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  6. எங்கட ஜெயா கைராசிக்காரி. அவள் மூலம் தங்களின் 100வது சாட்டர்டே போஸ்ட்/ஜாலி கார்னர் நிகழ்ந்துள்ளது ஆச்சர்யமாக உள்ளது. தங்களுக்கு என் ஸ்பெஷல் நல்வாழ்த்துகள்.

    இதே கைராசிக்காரியான எங்கட ஜெயாவினால்தான் என்னுடைய 100வது வலைச்சர அறிமுகம் 24.08.2014 அன்று நிகழ்ந்தது.

    இதோ அதற்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2014/08/100.html?m=0

    பதிலளிநீக்கு
  7. இன்றைய சாட்டர்டே கார்னரில் என்னை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி.

    அத்துடன் இப்படி ஒரு பதிவை தொடர்ந்து வெளியிட்டு மற்ற பதிவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வைப்பதற்கும் மனமார்ந்த நன்றி.

    நூறாவது பதிவிற்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

    //சிறுகதை மன்னி என்று பட்டம் கொடுக்க ஆசைப்படுகிறேன்.//

    தன்யனானேன் தங்கச்சி. கொஞ்சம் கவலையாகவும் இருக்கு. இதற்கு தகுதியானவளாக என்னை ஆக்கிக் கொள்ள வேண்டுமே என்று.

    //புகைப்படம் அருமை. அதுக்கு அனுப்பின கேப்ஷனும் ரொம்ப அருமையோ அருமை. :)

    மார்ச் 26 அன்று எங்கள் இரண்டாவது பேத்தியின் ஆயுஷ்ய ஹோமத்தன்று எடுத்தது.

    நீங்க ஆமைன்னா நான் என்னை என்ன சொல்லிக்கறது. நத்தைன்னு சொல்லிக்கறேன்.

    கோபு அண்ணாவுக்கும் என் மனமார்ந்த, சிரம் தாழ்ந்த நன்றிகள்.

    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. மேலும் பலருக்கு பதிவு சென்றடைய புதிய www.thiratti.in தளத்தை பயன்படுத்துங்கள்.

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துக்கள் இருவருக்கும்! ஆசிகள் மகளுக்கு!!

    பதிலளிநீக்கு
  10. ஸ்ரீராம்ஜி வாழ்த்துக்குக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  11. //[மிகவும் பாவம் அந்த நம் ரமணி சார்]//

    ஆஹா, ஐயோ பாவம். சின்ன வயசில என் பையன் அவன் அப்பாவுக்கு வைத்த பெயர் கோவக்கார குப்புசாமி.

    //இதே கைராசிக்காரியான எங்கட ஜெயாவினால்தான் என்னுடைய 100வது வலைச்சர அறிமுகம் 24.08.2014 அன்று நிகழ்ந்தது. //

    கைராசிதான்.

    ஆனால் என் வலைத்தளம்தான் இளைச்சு கிடக்கு.

    பதிலளிநீக்கு
  12. middle class madhavi

    வருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  13. சுருக்கமாக எனினும் நிறைவான
    அருமையாக அறிமுகம் செய்துள்ள்ளது
    மனம் கவர்ந்தது

    சிறுகதை மன்னி என்பது மிகச் சரியான
    பட்டம்தான்

    கதையைச் சொல்லிச் சென்றவிதம்
    மிக மிக அருமை

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  14. நூறாவது சாட்டர்டே போஸ்ட்டுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. இந்த ஒப்பீடு நன்றாக இருக்கிறதே உரையாடல்களிலேயே கதையை நகர்த்தியது பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  16. Congrats 😤... Sinna vayasula kalki, aanandha vikadan, saavi la kathai padichappo irundha feel.. Good one😁

    பதிலளிநீக்கு
  17. நல்ல பகிர்வு.

    100-வது சாட்டர்டே போஸ்ட் .... வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  18. Nagendra Bharathi

    வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  19. ரமணி சார்

    வருகைக்கும், வாழ்த்துக்கும், மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  20. கரந்தை ஜெயகுமார்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. G M Balasubramanian Sir

    வருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  22. // Sinna vayasula kalki, aanandha vikadan, saavi la kathai padichappo irundha feel.//

    இதைவிட என்ன வேண்டும். மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வெங்கட் நாகராஜ் சார்

    வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. Thanks Sriram.

    Tons and tons of thanks to VGK sir :)

    Again thanks da Jaya.

    Thanks Madhavi :)

    Thanks Nagendra Bharathy sago

    Thanks Ramani sir. !!!

    Thanks Jayakumar sago

    Thanks Bala sir

    Thanks Kalyaan

    Thanks Venkat sago

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!




    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...