எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

ஆத்தாள் என்பவள் நம் அகத்தில் இருப்பவள், ( இல்லத்தில் )  அகத்துள் ( உள்ளத்தில் ) உறைபவள். அதனால்தான் ஆத்தா *381 என்றழைக்கின்றோம் என்றார் ஆடிப்பூரத் திருவிழாவில் முத்தமிழ் மன்றத்துக்காக காரைக்குடி நகரச் சிவன் கோயிலில் உரையாற்றிய திரு கம்பனடிசூடி பழனியப்பன் ஐயா அவர்கள்.

நம்ம ஊர்களில் அம்மனையே ஆத்தா என்றுதான் அழைப்போம். மாரியாத்தா, காளியாத்தா என்று அதே போல் காரைக்குடியைக் காக்கும் தெய்வங்களை கொப்பாத்தா, முத்தாத்தா என்று அழைக்கிறோம்.  வீட்டுப் படைப்பு தெய்வங்களை அக்கினியாத்தா, மாறாத்தா, அடக்கியாத்தா, மெய்யாத்தா என்று அழைக்கிறோம். என்றார்கள்.

இன்னும் இன்னும் இலக்கியத்திலும் ஏனைய இடங்களிலும் ஆத்தா என்று சொல்லப்பட்ட இடங்களைக் குறிப்பிட்டு சிலாகித்துப் பேசிய அவர்கள் ஆத்தா என்று தமது பாடல்களிலே சொன்ன இருவரை முக்கியமாகக் குறிப்பிட்டார்கள். . அந்த இருவர் நமக்கெல்லாம் தெரிந்த இருவர்தான் இருவருமே யோகியைப் போன்றவர்கள், இல்லறவாசிகள்தாம்.

 ஒருவர் பட்டர், இன்னொருவர் பட்டினத்தார்  ஒருவர் இல்லறத்தில் இருந்தும்  யோகியைப் போன்றே இருந்தவர் அவர் அபிராம பட்டர். இன்னொருவர் இல்லறத்திலிருந்து துறவறம் பூண்டவர். அபிராமி அந்தாதியில் குறிப்பிட்ட நூற்பயனில் அவர் பாடுகிறார் இப்படி.

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத்,தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.


என்று அபிராம வல்லியை ஆத்தாள் அகம் குளிரக் கூறுகிறார் அபிராமிப் பட்டர்
அகத்தில் அதாவது உள்ளத்தில் இருப்பவள் = அகத்தாள் = ஆத்தாள் என்ற சொல்லாயிற்று! பிராமணர் வீடுகளில்தான் இல்லத்தை அகம் என்று கூறுவது வழக்கம். அதேபோல் அகத்துக்காரி என்றால் இல்லத்துக்குரியவள் என்று அர்த்தம். ஆனால் அகத்தில் இருப்பவள் என்ற அர்த்தத்தில் இங்கே ஆத்தாள் என்று அழைக்கப்பட்டிருக்கின்றாள் அபிராமி. முக்கண்ணியைத் தொழுவார்க்கு நன்மை விளையும் என்று கூறாமல் ஒரு தீங்கில்லையே என்று அவர் எழுதி இருப்பதன் காரணத்தை அழகாக விளக்கினார்.  நன்மை விளையும் என்றாலும் ஒரு தீமை கூட விளையாது என்ற நம்பிக்கை தரும் ப்ரயோகமாக அதைப் பயன்படுத்தியதாகச் சொன்னார்.


இதில் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் சொல்லி அவர் கூறியபோது மிகப் பிரமிப்பாக இருந்தது. 

இதே போல் இனிப்புக்கரும்பைத் தேடி அலைந்த பட்டினத்தார் *382. இடுப்பில் அவரது தாயார் கட்டியிருந்த கயிறு அவிழ்கிறது. பட்டினத்தார் தனது தாயார் சிவபதவி அடைந்ததை உணர்கிறார். மகன் மருதவாணன் கொடுத்த ஞானத்தால் ( காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே ) துறவியாக ஆனவர். துறவியாக  இருந்தாலும் தாயின் இறப்பை உணர்ந்தவுடன் கதறித் தொழுதபடி ஓடி வருகின்றார். 

“ முந்தித் தவமிருந்து தொந்தி சரிய முந்நூறு நாள் சுமந்து 
அந்தி பகலாய் ஆதரித்த ஆத்தா உனக்கோ நான் தீயிடுவேன்.  ”

என் வாய்க்கு அரிசி உணவு ஊட்டிய உன் வாய்க்கோ நான் அரிசியிடுவேன் என மனம் நொந்தார். 

“முன்னை இட்ட தீ முப்புரத்திலே;
பின்னை இட்ட தீ தென்னிலங்கையில்;
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே;
யானும் இட்ட தீ மூள்க ! மூள்கவே.!

என்று பாடப் பாடவே அன்னையை அவர் சுற்றி வைத்த பச்சை வாழைமட்டை பற்றி எரிந்ததாம்.

தவறான மனைவி இருக்கலாம். தவறான பெண்கள் இருக்கலாம். ஆனால் தவறான தாய் இருக்கவே முடியாது. உலகத்திலேயே உன்னதமான இடம் தாய் ஸ்தானம். அப்படிப்பட்ட தாயையும் முதியோர் இல்லத்தில் கொண்டே விடும் கொடுமை நீங்க வேண்டும் என்று சொன்னார். 

வெளிநாடுகளில் வசிக்கும் குழந்தைகள் சில மாதங்கள் முன்பு காரைக்குடிக்கு ஹெரிட்டேஜ் டூர் வந்திருந்தபோது  தாங்கள் வெளிநாடுகளில் வசிப்பதால் தொழில் செய்யும் தாய் தந்தைக்குப் போதிய உதவிகள் செய்வதாகக் குறிப்பிட்டார்களாம். அதேபோல் ஓரிரு குழந்தைகள் தாங்கள் தங்கள் பெற்றோரை வயதான காலத்தில் வெளிநாடுகளில் வைத்துப் பார்த்துக் கொண்டாலும் அக்கம் பக்கத்தவர் வேறு நாட்டவராக அமைவதால் அவர்களுக்கு பொழுது போகாமல் இருக்குமே என்ன செய்வது என்று கவலையுற்றுக் கேட்டதாகவும் அப்போது இயலும் வரை தாயைத் தந்தையை நன்கு கவனித்துக் கொள்ளும்படியும் இயலவே இயலாது என்னும் பட்சத்தில் சிறந்த முதியோர் இல்லங்கள் கடைசிபட்ச சாய்ஸ் எனவும் சொன்னதாகவும் சொன்னார். தாய் தந்தையை வணங்கிய குடும்பங்களுக்கு எந்த கஷ்டமும் வந்ததில்லை எனவும். அதேபோலத் தாயை வணங்காதவர்கள் கஷ்டப்பட்ட கதையையும் எடுத்துக் காட்டினார். 


முடிவாக அங்கே வந்திருந்த எனது தாயாரைச் சுட்டிக் காட்டி -- எங்க ஆத்தாளைச்  சுட்டிக் காட்டி காரைக்குடியில் இருக்கும் பெண்களில் எங்கள் ஆத்தா சிறுவயதில் நடைபெற்ற அறுவை சிகிச்சை மூலம் கேட்கும் திறனில் குறைபாடு ஏற்பட்டாலும் பேச்சும் எழுத்தும் திருந்தச் சொல்லும் எழுதும் திறமை பெற்றவர்கள் என்றும். அவர்களின் வலைத்தளம் ( சும்மாவின் அம்மா)  அக்கினி ஆத்தா பாட்டு, மீனாட்சி அம்மன் பாட்டு, கருப்பர் துதி, ஆயாள் வீட்டின் காயா நினைவுகள், எட்டுத்திக்கும் விட்டெரிக்கும் செட்டிநாட்டுப் பலகாரம் பற்றிய பதிவுகளைக் கூறியும், எனது சாதனை அரசிகள் நூலில் இடம் பெற்றுள்ளது குறித்தும் தொடர்ந்து பங்குச் சந்தையில் ஈடுபட்டு லாபம் ஈட்டி வருவது பற்றியும் சாதனை அரசிகள் நூலை எழுதிய என்னைக் குறித்தும் கூறி.. ஆத்தாளின் பெருமையில்  ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கினார். 

383. ஆவுடையான் செட்டியார் வீடு பற்றியும் 384.அருணாசல ஐயாவின் பேத்தி என்றும் அப்பா சபாரெத்தினம் அவர்கள் பற்றியும் அறிந்திருந்தாலும் நாங்கள் பிறந்ததில் இருந்து வணங்கிவரும் நகரச்சிவன் கோயிலில் எங்கள் ஆத்தாளின் பெருமை  அரங்கேறியது  எங்களை பெருமிதம் கொள்ளச் செய்தது. நன்றி 385. கம்பனடிசூடி பழனியப்ப அண்ணன் எங்களைச் சபையில் முந்தி இருக்கச் செய்தமைக்கு. வாழ்க வளமுடன். 


குறையொன்றுமில்லை ஆத்தாளைத் துணை எனக் கொள்வோருக்கு. ! 

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...