716*மொய்ப்பண ஏடு திருமணம் முடிந்ததும் உபயோகப்படுத்துவது. 717* இசை குடிமானம் என்பது திருமணப் பதிவு. இன்றைக்கு ரெஜிஸ்டர் செய்துகொள்வது போன்றது.
இது இரண்டும் கட்டாயம் திருமணக் கணக்கு வழக்குகள் நிர்வகிக்கப்படும் கைப்பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். திருமணத்தின் போது பயன்படும்.
இக் 718* கைப்பெட்டியில் மஞ்சள் குங்குமம், வெற்றிலை பாக்கு, விபூதிப் பிரசாதம், 719* மாமப் பட்டு, 720* பட்டில் முடியும் வெள்ளிக் காசு, 40 பக்க நோட்டு, பேனாக்கள், பென்சில், ஸ்டாப்ளர், பின்கள், பணம் வைக்கும் கவர், மொய்ப்பண ஏடு, இசை குடிமானம், திருமணச் செலவுக்கான பணம் வைக்கப்பட்டு பூட்டப்பட்டிருக்கும். !
இவை இரண்டையும் வலையப்பட்டியைச் சேர்ந்த பழ ஜெயங்கொண்டான் செட்டியார் என்பவர் தம் இல்லத் திருமணத்தின் போது அன்பளிப்பாக அளித்திருக்கிறார்.
இந்த வருஷம் , இந்த மாசம் இந்தத் தேதி.
........
இவர் மகளை, இவர் மகனுக்கு. ( அல்லது இன்னார் பேத்தி, இன்னார் மகளை, இன்னார் பேரன் இன்னார் மகனுக்கு ) .......
இதில் 721*பாணிக்கிரஹணம் பண்ணிக் கொண்டமைக்கு இவர் / அவர் 722* பூஷணம் பூட்டும் பொன் ஒன்பது, 723*ஆறு கல்லெடை பொன் பதிமுக்கழஞ்சு, இவர் / அவர் சீதனம் கொடுக்கும் பொன் இம்மாறு இவ்வெடை பொன் ஆறு கழஞ்சு, வெள்ளி ஆறு கழஞ்சு, 724*வெண்கலம் தாரப்பலம் அறுபத்தொன்பது வெள்ளாட்டிற்குப் பணம் முப்பது, 725*சீராட்டுச் சக்கரம் அறுபத்தொன்று இவ்வகைப்படி செய்வோம். இவர் / அவர் நன்கொடை கொடுக்கும் பொன் ஐம்பது, மோதிரம் 726*விராகனிடை மூன்று இவர் / அவர் 727*உகந்துடைமையாகக் கொடுக்கும் பொன் வளையல் ஏழு கழஞ்சு இவ்வகைப்படி செய்வோம். இந்த நாள் இவரிடும் / அவரிடும் பொன் இவர் / அவர் சொற்படி 728*தெரிசனை பதிமுக்கழஞ்சு இவ்வகைப்படி செய்வோம்.
இதுல கழஞ்சு, கல்லெடை, தாரப்பலம், பணம் முப்பது, சீராட்டுச் சக்கரம் அறுபத்தொன்று இதெல்லாம் என்னன்னு கேட்டுறாதீங்க எனக்குத் தெரியாது. இதன் அளவைகள் கேட்டுப் பின்னர் பதியிறேன் :)
வராகனிடை என்றால் தெரியும். ஒரு வராகன் என்றால் 3, 500 ரூ அந்தக் காலத்தில் அதிலும் வராகனிடை என்றால் தெரில. அதையும் பின்னர் பதிகிறேன்.
இந்த இசைகுடிமானத்தில் எழுதினேன் .. கையெழுத்து கையெழுத்து என்று இருக்கும் இடங்களில் பெண்ணின் அப்பத்தா வீட்டு ஐயாவும், மாப்பிள்ளையின் அப்பத்தா வீட்டு ஐயாவும் விவரம் குறித்துக் கையொப்பமிடுவார்கள்.
நகரத்தாரில் 729*ஒன்பது கோயில் பிரிவு உண்டு. அதில் 730*உட்பிரிவுகளும் உண்டு.
நகரத்தார் கோயில்களும் பிரிவுகளும்.
1. இளையாற்றங்குடி. 731*
கல்வாசனாட்டில் இளையாற்றங்குடியான குலசேகர புரத்தில்
1. ஒக்கூருடையார், 2. அரும்பார்க்கிளையாரான பட்டின சாமியார், 3. பெருமருதூருடையார், 4. கழனிவாசக்குடியார், 5. கிங்கிணிக்கூருடையார், 6. பேரச்சந்தூருடையார், 7, சிறு சேத்தூருடையார், 8. திருவேட்பூருடையார்.
2. மாற்றூர்க்கோயில். 732*
கேரள சிங்கவள நாடாகிய பிரம்பூர் நாட்டில் மாற்றூரான வீரபாண்டியபுரத்தில்
1. உறையூருடையார், 2. அரும்பாக்கூருடையார், 3. மணலூருடையார், 4. மண்ணூருடையார், 5. கண்ணூருடையார், 6. கருப்பூருடையார், 7. குளத்தூருடையார்.
3. வைரவன் கோயில்.733*
கேரள சிங்கவள நாடாகிய ஏழகப் பெருந் திருவான வீரபாண்டியபுரத்தில்
1. சிறுகுளத்தூருடையார்,
(அ) பெரிய வகுப்பு , ( ஆ) தெய்வநாயகர் வகுப்பு, (இ). பிள்ளையார் வகுப்பு.
4. இரணியூர்க் கோயில்.734*
கல்வாச நாட்டில் இளையாற்றங்குடியான குலசேகரபுரத்தில் இரணியுர்
மருதங்குடியான ராஜநாராயணபுரத்தில் இரணியூர்த் திருவேட்பூருடையார்.
5. பிள்ளையார்பட்டிக் கோயில்.735*
கல்வாசநாட்டில் இளையாற்றங்குடியான குலசேகரபுரத்தில் இரணியூர் மருதங்குடியான ராஜநாராயணபுரத்தில் பிள்ளையார்பட்டியான திருவேட்பூருடையார்.
6. நேமங் கோயில்.736*
கேரள சிங்கவள நாட்டில் நேமமாகிய குலசேகரபுரத்தில் தேனாறுபாயும் இளநலமுடையார்.
7. இலுப்பைக்குடிக் கோயில்737*
கேரள சிங்கவள நாடாகிய பிரம்பூர் நாட்டில் இலுப்பைக்குடியான புகலிடம் கொடுத்த பட்டினத்தில் சூடாமணிபுரமுடையார்
8.சூரக்குடிக் கோயில்.738*
கேரள சிங்கவள நாட்டில் சூரைக்குடியான தேசிக நாராயணபுரத்தில் புகழ்வேண்டிய பாக்கமுடையார்.
9. வேலங்குடிக் கோயில்.739*
கேரள சிங்கவள நாடாகிய பாலையூர் நாட்டில் வேலங்குடியான தேசிக நாராயணபுரத்தில் கழனி நல்லூருடையார்.
740*வெவ்வேறு கோயில்களில் ஒன்றிற்கொன்று திருமணம் செய்து கொள்வார்கள் .உட்பிரிவுகளில் கொள்வது இல்லை. ஆனால் மாத்தூர்க் கோயிலில் மட்டும் உட்பிரிவுகளிலும் கொள்வது உண்டு.
பிள்ளையார்பட்டியும் இரணியூர்க்காரர்களும் அண்ணன் தம்பி என்பதால் கொள்வது கொடுப்பது இல்லை.
சரி கல்யாணத்துக்கு வந்திருக்கீங்க நல்ல செட்டிநாட்டு விருந்து சாப்பிட்டுட்டுப் போங்க. இந்த மொய்ப்பண ஏடு தாயாதி பங்காளிகளுக்கு மட்டும்தான்.
நகரத்தார் கோவில்களில் குடிமக்கள் ( அந்தக் கோவில் சம்பந்தப்பட்டவர்கள்) கோவிலுக்கு அவர்கள் வகையாக ஆண்டு தோரும் அல்லது மாதந்தோறும் இவ்வளவு பணம்செலுத்தவேண்டும் என்றும் செலுத்தாதவர்கள் பெயர்கள் வெளியிடப்படும் என்று தெரிந்த செய்தி சரியா
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
AAMAM BALA SIR. PULLIP PANAM ENDRU SOLVARGAL. ATU MATHANTHORUM ILLAI. THIRUMANAM PONDRA SAMAYAM MATRUM KUMBABHISHEGA TIME THAN. EENEIL IVAI TRUST MOOLAM IYANGKUKINRANA.
பதிலளிநீக்குஅளவைகள் பற்றிய அறிய காத்திருக்கிறேன்....
பதிலளிநீக்குAPPA AMMAVIDAM KETU PATHIYIREN DD SAGO
பதிலளிநீக்கு