பாலா சார் என நான் விளிக்கும் திரு பாலசுப்ரமணியன் சார் பெங்களூரில் வசித்து வருகிறார். இவரின் கட்டுரைகள் போலவே கவிதைகளும் அற்புதமாய் இருக்கின்றன. மிக இயல்பான பாடுபொருளைக் கொண்டிருக்கின்றன.
நாம் அன்றாட வாழ்வியலில் காணும் பேசும் அனைத்தும் கருப்பொருளாயிருக்கின்றன. கேள்வி கேட்டலும் பதில் கூறலுமான கவிதைகள் சில. சில ஞானத்தேட்டம் உடையன. சில விஞ்ஞானமும் சில மெய்ஞானமும் கூறுகின்றன.
முதல் கவிதை ஒரு சிறுவனின் பார்வையில் நானும் பட்டாம்பூச்சியானேன். கவிதை தாகம் நீருக்கான ஏக்கம் கொள்ள வைத்தது. தாத்தா சாமி, பாவைக்கு ஒரு பாமாலை ரசனையான கவிதைகள். அம்மா ஆதங்கக் கவிதை. இன்னொரு கவிதையான என் அம்மாவாக நீ எங்கே இருக்கிறாய் கழிவிரக்கம் உண்டு செய்தது.
வயோதிகம் பற்றிய நச் என்ற கேள்வி, நிலையிலா வாழ்வு, சிறுதுளி பெருவெள்ளம் , ஹாப்பி பர்த்டே , உஷ் தொந்தரவு செய்யாதீர்கள், தனிமைப் பறவை, எண்ணப்பறவை, நம்பிக்கை, ஆண்டவன் முன், முதுமையின் பரிசு, கடவுள் அறிவா உணர்வா ஆகிய கவிதைகள் சிந்திக்க வைத்தன.
புராண, இதிகாச அவதாரக் கவிதைகள் குழந்தைகள் & பெரியவர்களும் படிக்க வேண்டிய அத்யாவசியமான ஒன்று. மிகச் சிறப்பாக சுருக்கமாக மிகுந்த அர்த்தம் கொண்ட வார்த்தைகளுடன் அமைக்கப்பட்ட சிறந்த கவிதைகள் இவை. ராமாயணமும் கிருஷ்ணாயணமும் வெகு சிறப்பு.
கேள்விக்கென்ன பதில் என்ற கவிதை என்னைச் சிரிக்க வைத்து விட்டது ஹாஹா
நான் ரசித்த சில கவிதை வரிகள் இங்கே.
“எண்ணிப் பார்க்கின்றேன் எனக்கென்ன வயசு
எண்ணில் அடங்குவதோ மனசின் வயசு “
”ஒளிர்கின்ற கோணங்களில் எல்லாம்
மிளிர்கின்ற மாணிக்கம் “ ( என மனைவியைப் புகழ்வது அழகு ! )
மணவினை சிறைவாசம் வித்யாசமான கவிதை. வெற்றி தோல்வி பற்றிய அறிவுரைகள் மிக யதார்த்தக் கவிதைகள். அதிலும் முருகனைப் பற்றிய கவிதை ஆஹா ஓஹோ படிச்சுப் பாருங்க நீங்களும் சொல்வீங்க J
கட்டுரையாளராகவும் கேள்விகணைகள் தொடுப்பவராகவுமே நான் கண்ட இவரது இப்புதுத் திறமையை ( கவிதை ஆற்றல் – ஓரிரு கவிதைகள் வலையில் படித்திருந்தாலும் ) நான் இப்போதுதான் முழுமையாக வாசிக்கிறேன். ஆக மொத்தத்தில் கவிஞராகவும் பாலா சார் சிறப்பாகப் பரிணமித்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள் பாலா சார். வாங்குங்க & வாசிங்க & யோசிங்க மக்களே.
மின்னூல் :- பாலசுப்ரமணியனின் கவிதைகள்.
ஆசிரியர் :-பாலசுப்ரமணியன்
வெளியீடு :- புஸ்தகா.
பக்கங்கள் :- 127.
விலை. ரூ75 /- / $
1.99.


நான் தொடர்ந்து விரும்பித் தொடரும்
பதிலளிநீக்குபதிவர் அவர்களின் மின் நூல் புத்தகம்
வெளியாகி இருப்பதும்
அதற்கான தங்கள் அருமையான
விமர்சன அறிமுகப்பதிவும்
மனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும்
நல்வாழ்த்துக்களுடன்
அன்பின் தேனம்மைக்கு . பதிவுகள் எழுதி மின்னூல்கள் வெளியிட்டு கொள்வார் இலையோ என்று நினைக்கும் போது உங்களது விமரிசனம் இதமாக இருக்கிறது நான் எழுதும்போது வந்த எழுத்துகள் எல்லாம் அந்த க்ஷணத்தில் தோன்றியவையே பாவைக்கு ஒரு பாமாலை என்னும் பதிவு அந்தாதி மாதிரி எழுத முயற்சித்தது சில நேரங்களில் எழுதியது பிற சமயத்தில் ரெப்லிகேட் செய்ய முடிவதில்லை நன்றி மேம்
பதிலளிநீக்குTHANKS RAMANI SIR
பதிலளிநீக்குTHANKS & WELCOME BALA SIR.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!