நிறைய குழந்தைகளுக்கு ஓவியம் வரைதல், பாட்டு , நடனம் என்று திறமைகள் இருக்கும். அதிலும் சில குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள். அப்படிப்பட்ட குழந்தைகள் உங்கள் இல்லத்தில் இருந்தால், நண்பர் அல்லது உறவினர் வட்டத்தில் இருந்தால் இதைப் படிங்க. அவங்களுக்கும் சொல்லுங்க.
என் முகநூல் தோழி சுந்தரி செல்வராஜ் அவர்களின் பகிர்வில் இருந்து இதை எடுத்து இங்கே பகிர்கிறேன். திறமை இருப்பவர்கள் பெற்றுப் பயனடையட்டும்.
///உங்கள் மகன் அல்லது மகள் இல்லை தெரிந்தவர்கள் பிள்ளைகள், பாட்டு, நடனம்,ஓவியம், இதர கலைகளில் களிமண் பொம்மை செய்வது கூட சிறந்து விளங்கினால், மத்திய அரசிடம் இருந்து ஸ்காலர்ஷிப் கிடைக்கும்.. மாணவருக்கும் கற்றுக் கொடுக்கும் குருவுக்கும் சேர்த்தே கிடைக்கும்.. மாணவர்களின் வயது 9 முதல் 13 வரையில்.. கல்லூரியில் படிக்கும் வரையில் இந்த ஊக்கத்தொகை கிடைக்கும்..
அவர்களின் கற்றுக் கொள்ளூம் திறமையை பொறுத்து.. 2 வருடங்களுக்கு ஒரு முறை தகுதி தேர்வு நடை பெறும்.. பாரம்பரிய கலைஞர்கள் வீட்டு மாணவர்களூக்கும் வாய்ப்பு உண்டு.. தப்பு, பறை அடித்தல், தோல் பாவை கூத்து போன்றவை கூட பயிலலாம்.. மேலும் விபரங்களுக்கு Website :
www.ccrtindia.gov.in
2015-2016 க்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 31 டிசம்பர் 2014.
இந்த ஸ்காலர்ஷிப் மூலம் பிள்ளைகள் அவர்கள் விரும்பிய துறையில் முன்னேற முடியும் இந்தியாவின் பலதரப்பட்ட மக்களின் கலைகளையும் தெரிந்து கொள்ள முடியும்… பயன் படுத்திக் கொள்ளுங்கள் பயன் படச் சொல்லுங்கள் அடுத்தவர்களுக்கும்..
Centre for Cultural Resources and Training (CCRT) ccrtindia.gov.in
---நன்றி தேனு... என் மகள் கல்லூரி காலம் வரையில் ஓவியத்திற்காக இந்த ஊக்கத்தொகை வாங்கினாள்.. அவள் தோழிகளுக்கும் சொல்லி நடனம், பாட்டு, ஓவியம், தோல் பாவை கூத்து என பலரும் பயனடைந்து வருகிறார்கள்.. இது பற்றி என்ன விவரம் வேண்டுமானாலும் என்னை கேட்கலாம்.
--- நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் சுந்தரி. மிக அருமையான செய்தியைச் சொல்லி இருக்கீங்க. உங்க மகளின் ஓவியத் திறமைக்கும் அவர் ஊக்கத்தொகை பெற்றமைக்கும் வாழ்த்துக்களைப் பிடிங்க முதலில்.
திறமை இருக்கும் நிறையப் பிள்ளைகள் சரியான ஊக்குவிப்பு கிடைக்காம பாடம் படிச்சாலே மட்டும் போதும்னு வளர்க்கப்படுறாங்க. அவங்க தன்னோட திறமையை அழியாமக் காப்பாத்திக்க அரசாங்கமே பயிற்சி வகுப்புகளும் நடத்தி உதவித் தொகையும் கொடுத்து உதவுதுன்னா., பெற்றோரும் ஊக்கம் கொடுக்க ஆரம்பிப்பாங்க. ( BUDDING ARTISTS ) இளம் மொட்டுகள் இன்னும் பேராற்றலோடு செழித்து விரிய இது உதவியாக இருக்கும்.
சென்னை ஜவஹர் வித்யாலயாவில் ( நான் ஜட்ஜாகச் சென்ற நிகழ்ச்சி !!! ) மிகச் சிறப்பாக நடனமாடிய சில குழந்தைகளின் புகைப்படங்களை இங்கே பகிர்கிறேன்.
நான் சென்ற நடன நிகழ்ச்சி என்பதால் அது பற்றி மட்டும் படங்கள் வெளியிட்டிருக்கிறேன். ஓவியம், பாடல், இன்னும் பல துறைகளிலும் சிறப்புற்று விளங்கும் குழந்தைகளும் இந்த வகையில் உதவித் தொகை பெற ஏற்றவர்கள்.
எல்லாப் பள்ளிகளிலும் கல்சுரல் க்ளப்ஸ் உண்டு. எல்லாப் பள்ளிகளும் தங்கள் கலைக்குழந்தைகளுக்குத் தேவையான வாய்ப்புகளையும் அரசின் உதவித் தொகையையும் வாங்கி கொடுக்க வேண்டும். இது போன்ற உதவிகள் மூலம், பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொள்வதன் மூலம். அவர்களின் கல்வியறிவோடு கலை வாழ்வும் மேம்படும்.
நல்ல தகவல்! மிக்க நன்றி! பகிர்ந்து கொள்கின்றோம்!
பதிலளிநீக்குநன்றி துளசிதரன் சார்
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!