எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கம்பராமாயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கம்பராமாயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 5 ஏப்ரல், 2020
திங்கள், 20 ஜனவரி, 2020
கம்பராமாயணம் – 6 தொகுதிகள் ஒரு பார்வை
கம்பராமாயணம் –
6 தொகுதிகள் ஒரு பார்வை
கம்பராமாயணம் பத்தாயிரத்து ஐநூறு பாடல்களையும் ஆறு காண்டங்களையும் 118 படலங்களையும் உடையது. இதை
ஒருவர் செய்யுள் வடிவில் படித்து உணர்ந்து உய்ய ஓரிரு ஆண்டுகள் பிடிக்கலாம். ஆனால்
உமா பதிப்பகம் வெளியிட்டுள்ள இக்கம்பராமாயணம் அவற்றின் சாறைப் பிழிந்து பக்குவமாய்ப்
பருகத் தருகிறது.
கம்பன் அடிசூடி
திரு பழ. பழனியப்பன் அவர்கள் எழுதிய இந்நூல் ஆறு தொகுப்புகளாக வெளிவந்துள்ளது. பாலகாண்டம்,
அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்
என்று ஆறு காண்டங்களை ஆறு தனி நூல்களாகப் பொழிப்புரையுடன் தொகுத்திருக்கிறார்கள்.
புதன், 2 ஆகஸ்ட், 2017
துறைதோறும் கம்பன் – ஒரு பார்வை.
துறைதோறும் கம்பன்
– ஒரு பார்வை.
139 கட்டுரைகள்
கொண்ட இந்நூல் காரைக்குடி கம்பன் கழகத்தின் பவளவிழாக் கொண்டாட்டத்தின்போது நல்லி குப்புசாமி
செட்டியார் அவர்களால் வெளியிடப்பட்டது.
துறைதோறும் என்பதன்
முழுப்பரிமாணத்தில் எழுதப்பட்ட விரிவான கட்டுரைகளின் தொகுப்பு இது. ஒப்பியல், அரசியல்,
ஆட்சியியல், கல்வியியல், உளவியல், அறவியல், ஆளுமையியல், பண்பியல்,மகளிரியல், கலையியல்,
இலக்கியவியல், அறிவியல், ஊடகவியல், சூழலிய, மெய்யியல், எதிர்காலவியல் ஆகிய பதினாறு
துறைகளில் இந்நூல் கம்பராமாயணத்தை அலசுகிறது.
புதன், 28 ஜூன், 2017
கம்பனில் இயற்கை – ஒரு பார்வை.
கம்பனில் இயற்கை
– ஒரு பார்வை.
காரைக்குடி கம்பன்
கழகமும் அந்தமான் தமிழ் இலக்கிய மன்றமும் இணைந்து நடத்திய கம்பராமாயண மூன்றாவது உலகத்தமிழ்
ஆய்வுக் கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. வருடா வருடம் ஒரு குறிப்பிட்ட
தலைப்பில் கட்டுரைகள் பேராளர்களால் ஆக்கப்பட்டு காரைக்குடி கம்பன் கழகத்தாரால் புத்தகமாக்கம்
பெறுகின்றன. ஐந்தாவது நூல் இது. இச்சீரிய முயற்சிக்காக எனது பாராட்டுகளும் உரித்தாகட்டும்.
இந்நூலில் மொத்தம்
78 பேராளர்கள் அளித்த ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன. காவியம் பாடிய கம்பன் பற்றி 76 பேரும்,
ஏரெழுபது பாடிய கம்பன் பற்றி இருவரும் கட்டுரை யாத்திருக்கிறார்கள்.
இயற்கையே இறைநிலை
என்கிறார் தமது கட்டுரையில் திரு கம்பனடிசூடி அவர்கள். அதை நிறுவிய விதம் அருமை. கண்ணுக்குத்
தெரியாத இயற்கை ( உலகங்கள் பற்றி ) மீ கண்ணன் அவர்களும், கம்பனில் இயற்கை என்ற சொல்லாட்சி
இருக்கும் இடங்கள் பற்றி முனைவர் வீ செல்வபெருமாளும் இயம்பி இருப்பதும் சிறப்பு.
அந்தமான் தமிழ்
இலக்கிய மன்றத் தலைவர் தி.நா. கிருட்டிணமூர்த்தி அவர்கள் சுனாமி எதிர்ப்புச் சக்தி பற்றிக் கூறும்போது யுத்த
காண்டத்தில் ஊழிக்காலத்திலும் நிலைபெற்று விளங்கும் தேர் பற்றிக் குறிப்பிடுகிறார்.
திங்கள், 20 மார்ச், 2017
இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் - ஒரு பார்வை.
ராமனுக்கு நிகராகவும் ஒரு துளி அதிகமாகவும் கம்பனே மாந்தி மயங்கிப் புகழும் ஒரு பாத்திரமும் கம்பராமாயணத்தில் உண்டென்றால் அது இராவணன்தான். அ. ச. ஞான சம்பந்தனாரின் இராவணனின் மாட்சியும் வீழ்ச்சியும் படித்தேன். சில கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
மாட்சி பற்றிக் கூறும்போது இலங்கையின் மாட்சி பற்றியும் , அவன் செய்த பாவம் அல்லவாம் , “குலஞ்செய்த பாவத்தாலே கொடும்பழி தேடிக்கொண்டான் “என்றும் “இந்திரப் பெரும்பதம் இழந்தான் “, “இடிக்குநர் இல்லான் “, ”நாளை வா எனப்பட்டான் “ எனவும் வருந்துவது, ”வெலற்கு அரியான்” எனக் கம்பன் பெருமிதம் கொள்வது கூறப்பட்டுள்ளது. அதே போல் தீமை வரும் விதம் அதை அவன் எதிர்கொள்ளும் விதம் எல்லாம் சிறப்பாக ஆய்வு செய்யப்பட்டிருக்கும் இந்நூல் ஒரு பொக்கிஷம்.
மாட்சி பற்றிக் கூறும்போது இலங்கையின் மாட்சி பற்றியும் , அவன் செய்த பாவம் அல்லவாம் , “குலஞ்செய்த பாவத்தாலே கொடும்பழி தேடிக்கொண்டான் “என்றும் “இந்திரப் பெரும்பதம் இழந்தான் “, “இடிக்குநர் இல்லான் “, ”நாளை வா எனப்பட்டான் “ எனவும் வருந்துவது, ”வெலற்கு அரியான்” எனக் கம்பன் பெருமிதம் கொள்வது கூறப்பட்டுள்ளது. அதே போல் தீமை வரும் விதம் அதை அவன் எதிர்கொள்ளும் விதம் எல்லாம் சிறப்பாக ஆய்வு செய்யப்பட்டிருக்கும் இந்நூல் ஒரு பொக்கிஷம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




