விமானங்களில் ”ட்ரெஸ்கோட்”
பற்றி மனோ சுவாமிநாதன்.
மனோ மேம் மிகப்பெரும்
பதிவர். இவரது மனநலம் உடல் நலம் குறித்த இடுகைகள் எனக்குப் பிடிக்கும். இவரது உணவு
வலைத்தளம் வெகு ஆண்டுகளுக்கு முன்பே பதிமூன்று லட்சம் பார்வைகளைக் கொண்டு என்னை மிரட்டியது
!
தஞ்சையிலும் துபாயிலுமாக
வசித்து வரும் இவர்களிடம் சாட்டர்டே ஜாலிகார்னருக்காகக் கேட்டபோது துபாய் பற்றியும்
அங்கே செல்வதற்கு நாற்பதாண்டுகளுக்கு முன் ஃப்ளைட் நடைமுறைகள் பற்றியும் சுவாரசியமாகச்
சொல்லி இருந்தார். இப்ப பச்சைத் தண்ணீர்னா கூட எகனாமிக் ஃப்ளைட்டுகளில் காசு கொடுத்து
வாங்கித்தான் குடிக்கணும்.
காற்றுப் பேருந்து
என்ற பதம் இப்ப ரொம்பப் பொருத்தம். ஏன்னா மும்பை – ஹைதைக்கு நான் பயணம் செய்த இண்டிகோவில்
பஸ் மாதிரி ஏறி உக்கார்ந்து வறுத்த கடலை எல்லாம் சாப்பிட்டுட்டு முன்சீட்டு கவர்ல காலிபேப்பரைச்
சொருகி வைச்சாங்க ஒரு மராத்தி குடும்பம் !