எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 27 ஜனவரி, 2014

வானவில் தொலைக்காட்சிக்காக.. ( ஃப்ளாஷ் டிவி ) சாதனைப் பெண்ணாக. .

சென்னையில் 2012 ஏப்ரலில்  வானவில் தொலைக்காட்சியின் சாதனைப் பெண் நிகழ்ச்சிக்காக என்னைப் பேட்டி எடுக்க மடோனா ஜனனியும் அவரது குழுவினரும் எங்கள்  வீட்டுக்கு வந்தார்கள்.நான் வலைத்தளம் எழுத வந்தது முதல் அன்றைய தினம் வரை என்னென்ன செய்திருக்கிறேன் என்பதைப் பகிர்ந்து கொண்டேன். ( எங்கள் வீட்டில் இடம் பத்தவில்லை என்று என் நாத்தனார் வீட்டிலும் சென்று ஷூட் செய்தார்கள். அங்கே இருந்த பார்க்கிலும் மதிய வெய்யிலில் குழந்தைகள் சுற்றும் ராட்டினத்தின் பக்கம் அமர்ந்து சூடாக (!) எனக்குப் பிடித்த  கவிதையைச் சொன்னேன். :)

எங்கள் நாத்தானார் வீட்டில் அவர்கள் செட் செய்த மிகப் பிரம்மாண்டமான லைட்டிங், செட்டிங்குகளைப் பார்த்தவுடன் மிரட்சி ஏற்பட்டுவிட்டது . ( ஆமா ஒரு நாளைக்கே அந்த விளக்குகள் கண்ணைக் கூசுதே, எப்படி நடிக நடிகையர்கள் தொடர்ந்து நடிக்கின்றார்கள். ஆச்சர்யமான விஷயம்தான் , அந்த விளக்குகள் மிகுந்த வெப்பமும் கூட. .)

என்னுடைய புத்தகங்கள் இரண்டையும் வைத்து க்ளோசப்பில் பேனாவுடன் எடுத்தார்கள். நான் கண்ணாடி அணிந்து எழுதுவது போலவும், படிப்பது போலவும் ( செல்வராணி புதிய முகத்துக்காக எடுத்த போதும் அப்படித்தான் ) காஃபி கலப்பது போலவும், வீட்டில் காஷுவலாக அமர்ந்து இருப்பது போலவும் , சமைப்பது போலவும் சாப்பிடுவது, சாப்பாடு போடுவது போலவும், நடப்பது போலவும்  எடுத்தார்கள்.

பேட்டியின் முதலில் நாத்தனார் வீட்டின் மாடிப் படியில் அமர்ந்து  “நான் யார் ” எனச் சொன்னேன்.

//// அப்பாவுக்கு மகள்
கணவருக்கு மனைவி
குழந்தைகளுக்குத் தாய்
அதன் பின் நான் யார்..

நான் யார் நான் யார் என்ற தேடலைத் தொடங்கினேன். இனம் தெரியாமல் இருந்த நான் யார் என இனம்  கண்டு கொண்டேன் என்னை ஒரு படைப்பாளியாக. ஒரு வலைத்தளவாசியாக .  ///

இப்படி ஆரம்பித்த அந்தப் பதில்கள்.அவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகள் இல்லாமல் ஷூட் செய்யப்பட்டன. நானே என்னைப் பற்றிப் பேசிச் சொல்வது போல.

இணையத்தில் பெண்களின் பங்களிப்புப் பற்றியும், இணையத்தைப் பெண்கள் பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டியது குறித்தும் கருத்துக் கூறினேன். அன்றாடம் பெண்கள் சந்திக்கும் பல வாழ்வியல் விஷயங்கள் குறித்த பகிர்வாக அது இருந்தது.

எடுத்துக் கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் வருடங்கள் ஆகிவிட்டன. தொடர்ந்து நான் மடோனாவிடம் விசாரித்து வருகிறேன். அவர் அதிலிருந்து வெளியேறி புதிய தலைமுறையில் சேர்ந்து விட்டதால் வானவில் தொலைக்காட்சியில் பணிபுரியும் ப்ரபாவதியிடம் விசாரித்து வருகிறேன். அவர் வானவில் தொலைக்காட்சி தற்போது ஃப்ளாஷ் டிவி என்ற பெயரில் டெஸ்ட் டெலிகாஸ்ட்  செய்து வருவதாகக் கூறினார். நிச்சயம் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பத் துவங்கப்படும்போது தெரிவிப்பதாகக் கூறினார். ஹ்ம்ம் பார்ப்போம். நமக்கு எப்போதும் கைக்கெட்டியது வாய்க்கெட்டியதாகச் சரித்திரமில்லை. :) :) :)

மனுஷ்ய புத்திரன் கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது. எல்லாமும் ஏதோ ஒரு குறையோடே நமக்கு வழங்கப்படுகிறது.  நிச்சயம் வரலாம். வரும். நம்பிக்கையுடன் இருப்போம். :) :) :) என் சாதனை அரசிகள் புத்தகத்தில் இருந்தவர்களையும் எடுத்திருக்கிறார்கள்.  என்னையும் என் சாதனை அரசிகளையும்  தேடி வந்து எடுத்தமைக்காக நன்றி மடோனா ஜனனி.

4 கருத்துகள்:

 1. விரைவில் பார்வைக்கும் கிட்டும் சகோதரி...

  நம்பிக்கையோடு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. நன்றி தனபாலன் சகோ

  நன்றி தோழன் மபா. :)

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...