===========================================
மோகனா லானில் நடந்து கொண்டிருந்தாள். நியான் விளக்குகளின்
கண்சிமிட்டலில், கூடை நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு “36 செரங்கி லேனை” எடுத்த அபர்ணா
சென்னின் திறமையைப் பாராட்டிக் கொண்டு இருந்தனர் நான்கைந்து கல்லூரி மாணவர்கள். மோகனா
27B ல் ஏறி “மவுண்ட் ரோடு” என்று கூறிவிட்டுக் காசைக் கொடுத்தாள்.
