எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சக்தி விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சக்தி விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 மார்ச், 2015

ஹைதராபாத்தில் ”அரிமா சக்தி” விருதும் ”அன்ன பட்சி”யும்.

அன்னபட்சிக்கு அரிமா சக்தி விருதை திருப்பூரிலிருந்து  கனவு சுப்ரபாரதிமண்யன் அவர்கள் ஹைதராபாத் வந்திருந்து நிறை தமிழ்ச்சங்கத்தின் நிகழ்ச்சியில் வழங்கினார்கள்.

இதை ஒருங்கிணைத்த சாந்தா தத் மேடம் கலந்து கொள்ளச் சொல்லி கைபேசியில் அழைத்து இருந்தார்கள். இடம் பற்றி விலாவாரியாக கேட்டுத் தெரிந்து கொண்ட நான் அன்று செல்ல இயலாமல் கால் ஸ்லிப்பாகி விட்டது. எனவே என் அன்பிற்குரிய பெரிய மகன் திருவேங்கடநாதன் சென்று என் சார்பாக வாங்கி வந்து கொடுத்தான். அந்த விருது இதோ.

நன்றி சாந்தாதத் மேடம் & கனவு சுப்ரபாரதிமணியன் சார். & நன்றி வெங்கட் :)





புதன், 24 டிசம்பர், 2014

திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள். 2014.

என் இனிய  நட்புகளே .,திருப்பூர் அரிமா சங்கத்தின் 2014 ஆம் ஆண்டிற்கான பெண் எழுத்தாளர்களுக்கான " சக்தி விருது "( அன்ன பட்சி கவிதைத் தொகுதிக்காகக்  ) கிடைத்துள்ளது.

நன்றி அகநாழிகை பதிப்பகம் & அகநாழிகை பொன் வாசுதேவன்.

இது குறித்து மத்திய அரிமா சங்கத்தின் மேலாளர் அனுப்பிய  கடிதம்.

///அன்புடையீர்...வணக்கம். நலம் குறித்த விருப்பம்.  வாழ்த்துக்கள்
 மத்திய அரிமா சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும்
“ அரிமா விருதுகள்  ”  டிசம்பர் 25 மாலை 5 மணி அளவில் தலைவர் அரிமா பிரதீப்குமார் தலைமையில் நம் அரிமா சங்க வளாகத்தில்  நடைபெற உள்ளது. ( மாலை 5 மணி முதல் 8 மணி வரை)  5 மணி முதல் படைப்பாளிகளின் படைப்பு அனுபவ உரைகள் இருக்கும்.

தாங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான கீழே குறிப்பிட்ட பரிசைப் பெற்றுச் சிறப்பிக்க வேண்டுகிறேன். அரிமா குறும்பட விருது / சக்தி விருது.

Related Posts Plugin for WordPress, Blogger...