எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஹைதராபாத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹைதராபாத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 ஜூன், 2020

உல்லாசிகளும் உழைப்பாளிகளும்.

ஹைதையில் உள்ள கலாச்சார கிராமமான ( கைவினைப் பொருட்கள் விற்பனை அங்காடிகளும் உண்டு ) சில்பாராமத்தில் கைவினைக் கலைஞர்களையும் உழைப்பாளி மக்களையும் கௌரவப்படுத்தும் விதத்தில் டாப்ளோ போல சிலைகள் அமைத்துள்ளார்கள்.

அங்கேயே வெய்யில் கால உல்லாச விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளன. போட்டிங் இருக்கிறது. அதோடு இந்த மாதிரி ஏர் பலூனில் தண்ணீரில் ஆட்டமும் போடலாம். இது குழந்தைகளுக்கு மட்டுமே.

காற்று நிரப்பிய இந்தப் பந்து/பலூனில் பிள்ளைகள் ஏறியவுடன் இந்த கறுப்பு ஜிப்பை ஒட்டி விடுகிறார்கள். அதன் பின் பிள்ளைகள் உள்ளே தவழலாம், உருளலாம், ஓடலாம். இணைப்பாக கயிறும் உள்ளது. அவர்கள் தடுமாறினால் இழுத்துப் பிடித்து நிறுத்தி வெளியே கொண்டு வரலாம். இந்த உல்லாச பலூனில் ஏற கட்டணம் உண்டு.

பணம் படைத்தவர்க்கான உல்லாச விளையாட்டுகள் இன்னும் பல உண்டு. :)


புதன், 13 மே, 2020

பறையாட்டமும் போலிபாக காட்டையாவும்.

ஷில்பாராமல் பற்றிப் பல்வேறு இடுகைகள் முன்பே போட்டிருக்கிறேன். அங்கே பறையாட்டத்தோடு இந்தியாவிலேயே உயரமான மனிதரான போலிபாக காட்டையாவையும் பார்த்தோம். ( POLIPAKA GATTAIYA) .

அவர் படம் கடைசியா வரும் :)

மிக எழிலாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த கலாச்சார கிராமம். ஹைதையின் ஹைடெக் சிட்டியின் அருகே அமைந்துள்ள இதனருகில் இந்திரா காந்தி சிலையும் சைபர் சிட்டியின் சைபர் டவரும் இருக்கின்றன. மேலும் உதிரி இரும்புகளால் ஆன அநேக சிலைகள் ஹைதையை வடிவழகோடு வைத்திருக்கின்றன.


திங்கள், 25 ஜூன், 2018

மெஹ்திப்பட்டிணம் பல்லேடியம் ஹாலில் கோரேஸ் இல்ல விருந்து.

அழகிகள் அணிவகுத்து வழங்கிய ரோஜாப்பூ மில்க்‌ஷேக் போன்ற வெல்கம் ட்ரிங்ஸுடன் சங்கராபரணம் குழைந்து கொண்டிருக்க ஒரு பக்கம் சாலட் தட்டுகளும் முளைகட்டிய பயறுவகைகளும் சூழ அமர்ந்திருக்கும் கல் விநாயகர்.

இன்னொரு புறம் தஹி குஸியா, பெல்பெப்பர் கட்லெட், பானி பூரி, சௌமின், அமெரிக்கன் வெஜ் சாப்சூயி, பாவ்பாஜி, ப்ராகோலி ஷோர்பா, தம் ஆலு, ஆலு டிக்கி,  மட்டர் பனீர், பஞ்சாபி ஷாஹி பனீர் க்ரேவி , பட்டர் நான், மிர்ச்சி பகோரா , நவ்ரத்னபுலாவ் என களை கட்டிக் கொண்டிருக்க.

மூன்றாவது இடத்தில் விதம் விதமான ஐஸ்க்ரீம் டெஸர்ட்டுகளுடன் பதினைந்து வகைப்பழங்கள். எதை எடுக்க எதை விட. கிவி, லிட்சி, பைனாப்பிள், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, சப்போட்டா, மாம்பழம், மாதுளை, சீட்லெஸ் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பப்பாளி, தர்ப்பூசணி, மலை வாழைப்பழம், செர்ரி, கிர்ணி என கலந்து கட்டி மணம் வீசிக்கொண்டிருந்தது.

இதெல்லாம் மெஹ்திப்பட்டிணத்தில் பல்லேடியம் ஹாலில் ஒரு கல்யாண ரிசப்ஷனுக்குக் கலந்து கொள்ளச் சென்றபோது எடுத்தது, உண்டது , கண்டது.

வெள்ளி, 6 அக்டோபர், 2017

ஷில்பாராமில் பாரம்பரிய நடனக் காட்சிகள் .

ஹைதை ஷில்பாராமத்தில் ( கலாச்சாரக் கிராமம்)  கோடைத்திருவிழாவின்போது பரதநாட்டியம் போன்ற பாரம்பரியக் கலைகளை வளர்த்தெடுக்கப் போட்டிகள் நிகழ்த்துகிறார்கள்.
 வரவேற்கும் நடனப் பெண் சிலைகள் அற்புதம்.

ஞாயிறு, 15 மார்ச், 2015

ஹைதராபாத்தில் ”அரிமா சக்தி” விருதும் ”அன்ன பட்சி”யும்.

அன்னபட்சிக்கு அரிமா சக்தி விருதை திருப்பூரிலிருந்து  கனவு சுப்ரபாரதிமண்யன் அவர்கள் ஹைதராபாத் வந்திருந்து நிறை தமிழ்ச்சங்கத்தின் நிகழ்ச்சியில் வழங்கினார்கள்.

இதை ஒருங்கிணைத்த சாந்தா தத் மேடம் கலந்து கொள்ளச் சொல்லி கைபேசியில் அழைத்து இருந்தார்கள். இடம் பற்றி விலாவாரியாக கேட்டுத் தெரிந்து கொண்ட நான் அன்று செல்ல இயலாமல் கால் ஸ்லிப்பாகி விட்டது. எனவே என் அன்பிற்குரிய பெரிய மகன் திருவேங்கடநாதன் சென்று என் சார்பாக வாங்கி வந்து கொடுத்தான். அந்த விருது இதோ.

நன்றி சாந்தாதத் மேடம் & கனவு சுப்ரபாரதிமணியன் சார். & நன்றி வெங்கட் :)





திங்கள், 16 பிப்ரவரி, 2015

சனிக்கிழமையில் கல்யாணம். அர்த்தராத்திரியில் பெண் அழைப்பு.

சனி நள்ளிரவு இரண்டு மணி இருக்கும்.டண்டணக்கு டணக்குணக்கு டண்டணக்கு டணக்குணக்கு டண்டணக்கு டணக்குணக்கு டண்டணக்கு டணக்குணக்கு  என்று நெஞ்சம் அதிர்வது போல பறையொலிச் சத்தம். சும்மா காது ஜவ்வு எல்லாம் பிய்ந்துவிடும்போல அவ்வளவு சவுண்ட்.

Related Posts Plugin for WordPress, Blogger...